
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சிறுநீர் குடித்தால், உடலுக்கு நல்லது...' என்று கூறியவர், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். தற்போது, 'உயிர்வாழ, சிறுநீர் குடிக்கலாம்...' என்கின்றனர், அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள்.
மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தில், விஞ்ஞான முறையில் சிறுநீரை சுத்தம் செய்து, குடிநீர் ஆக்குவது வழக்கம். தற்போது, மனிதர்கள் மட்டுமின்றி, எலிகளின் சிறுநீரையும் குடி நீராக பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி, கனடா விண்வெளி விஞ்ஞானி க்ரிஸ் ஹாப் பீல்டு வெளியிட்ட குறிப்பில், 'ஆண்டு ஒன்றுக்கு, மனித சிறுநீரில், 6,000 லிட்டர் குடிநீர் தயாரிக்கப்படுகிறது...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.