PUBLISHED ON : ஏப் 13, 2014

அ நிறம் | அளவு
நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் தான், இரட்டையர்கள் அதிகம் உள்ளனர். 'உலகில், 1,000 குழந்தைகள் பிறந்தால், அவற்றில், எட்டு குழந்தைகள், இரட்டை குழந்தைகளாக இருக்கும்' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். நம் நாட்டிலும், இரட்டையர்கள் கணிசமாக உள்ளனர். ஆனால், கேரள மாநிலம், மலப்புரம் அருகில் உள்ள கொடினி என்ற கிராமத்தில், 250 இரட்டையர்கள் உள்ளனர். சராசரியாக, இங்குள்ள, 1,000 பேரில், 35 பேர், இரட்டையர்கள் என்பது தான், அதிசயம். உலகில், இரட்டையர்கள் அதிகம் உள்ள கிராமம் என்ற பெருமையும், இந்த கிராமத்துக்கு கிடைத்துள்ளது. சுற்றுப்புறச் சூழ்நிலை, சீதோஷ்ண நிலை ஆகியவை தான், இதற்கு காரணமாக இருப்பதாக, அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
— ஜோல்னாபையன்.
