தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அசுர வேகம்... ஆபத்தானது தானே!

அசுர வேகம்... ஆபத்தானது தானே!

அசுர வேகம்... ஆபத்தானது தானே!


PUBLISHED ON : ஜூலை 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன், காரில் பயணிக்கும் போது, காரை அதிவேகமாக ஓட்டச் சொல்லி பயணம் செய்வார். ஓட்டுனர் எவ்வளவு தான் வேகமாக ஓட்டினாலும், 'இன்னும் வேகமாக ஓட்டு...' என்று கூறிக் கொண்டே இருப்பார். இதனால், கருணாகரன் கார் சாலையில் வருவதை கண்டாலே, தலைதெறிக்க ஓடுவர் மக்கள். அவருடைய இந்த அசுர வேக பயணம், அவ்வப்போது விபத்துக்களையும் ஏற்படுத்தியது உண்டு.

ஒருமுறை, அவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்தார். அப்போது, முதுகு தண்டில் ஏற்பட்ட காயம், மரணம் வரை அவருக்கு தொல்லை கொடுத்தது. இதுபற்றி மகள் பத்மஜா வேணுகோபால் கூறுகையில், 'அப்பாவுடன் பயணம் செய்யவே பயமாக இருக்கும்; கார் விபத்தை தொடர்ந்து மருத்துவனையில் இருந்த போது, 'வேகமாக போனதால் தானே விபத்து நடந்தது...' என்று கூறியதற்கு, 'அன்று வேகம் குறைவாக இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டது...' என்றார் எனது தந்தை...' எனக் கூறுகிறார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us