PUBLISHED ON : ஏப் 24, 2022

மணிப்பூர் மாநிலத்திலுள்ள, சீசிபூர் என்ற வனப்பகுதி, 340 கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த காட்டுப் பாதையில் உள்ள மரங்களில், ஆங்காங்கு, பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.
இதற்கு காரணம், இக்காட்டு பகுதியில், கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் இருக்கின்றன. அந்த வழியாக செல்பவர்களில் பலர், பாம்பு கடிக்கு ஆளாவதுண்டு. பாம்பு கடி பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காவிட்டால், உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
மேலும், இப்பகுதியின் அருகில் எந்த மருத்துவமனையும் இல்லாததால், பாட்டிலில், விஷ முறிவு பச்சிலை மருந்தை ஊற்றி, மரங்களில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
அவ்வழியாக போகும் யாரையாவது பாம்பு கடித்து விட்டால், இந்த பச்சிலை மருந்தை குடிக்க வைப்பர்; விஷம் பரவுவது தடுக்கப்படும். அதன்பின், மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றி விடலாம் என்கின்றனர், இங்குள்ளவர்கள்.
ஜோல்னாபையன்
