PUBLISHED ON : ஏப் 24, 2022

அ நிறம் | அளவு
நம் நாட்டில், பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மவர்கள் யாரும் அதை மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், சோமு என்ற கிராமத்தில் கண்ட காட்சி தான், படத்தில் உள்ளது. ராஜஸ்தான் மட்டுமல்லாமல், பெரும்பாலான வட மாநில பெண்களும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். பொது இடங்களில், அவர்கள் பயமின்றி புகை பிடிப்பதைப் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல், சாலை ஓரங்களை பொது கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
'நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்ட வேண்டும்; அதைத்தான் பயன்படுத்த வேண்டும்...' என்று அரசு அறிவுறுத்தினாலும், இவர்கள் யாரும் அதை கண்டு கொள்வதில்லை.
ஜோல்னாபையன்
