PUBLISHED ON : ஏப் 24, 2022

அ நிறம் | அளவு
'கொரோனா' தொற்று, மனிதர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.
இதில், சுற்றுலா விரும்பிகள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் தங்கவோ, உணவு சாப்பிடவோ முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கேரள மாநில சுற்றுலா துறை, கேரவன் பேருந்துகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. நட்சத்திர தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து சிறப்பு வசதிகளும் இந்த கேரவன் பேருந்துகளில் இருக்கிறது.
இரண்டு பேர் இதில் வசதியாக பயணித்து ஊர்களை சுற்றி வரலாம்.
கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கேரவன் பேருந்துகள் இயக்க இருப்பதாக சுற்றுலா துறை அறிவித்து இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும், ஜெ.சி.பி.எல்., நிறுவனம் தான், கேரவன் பேருந்தை தயாரிக்கிறது.
—ஜோல்னாபையன்
