/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கலிபோர்னியா ஒயினுக்கு வந்தது சோதனை!
/
கலிபோர்னியா ஒயினுக்கு வந்தது சோதனை!
PUBLISHED ON : பிப் 21, 2021

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்படும் ஒயினுக்கு, உலகம் முழுதும் கிராக்கி உண்டு. மது பிரியர்களின் விருப்பமான ஒயின் இது.
இங்கு விளையும் திராட்சையின் தனிச்சுவையே இதற்கு காரணம். ஆனால், சமீப காலமாக, கலிபோர்னியாவில் தயாரான ஒயினை குடிக்கும் மது பிரியர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அந்த ஒயினுக்கான தனிச்சுவை முற்றிலும் இல்லையாம். புகை நாற்றம் அடிப்பதாகவும், அதை குடிப்பதால் வாந்தி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவின் திராட்சை தோட்டங்களில் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மண்டலங்களால், திராட்சையின் சுவை மாறி விட்டது தான், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
'கொரோனா, ஊரடங்கு போன்ற பிரச்னைகளால், ஒயின் குடிப்போர் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்து விட்டது. இந்த லட்சணத்தில் ஒயின் சுவையும் மாறி விட்டதாக கூறப்படுவதால், எங்கள் பிழைப்பு நடுத்தெருவுக்கு வந்து விடும் போலிருக்கிறது...' என்கின்றனர், ஒயின் தயாரிப்பாளர்கள்.
— ஜோல்னாபையன்