PUBLISHED ON : பிப் 21, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 1855ல் கட்டப்பட்ட கொச்சி மகாராஜா அரண்மனையின் உள் வளாகம் இங்கு காணப்படுகிறது. அரசன் பயன்படுத்திய குதிரை வண்டிகளும், பல நுாற்றாண்டு பழமையான அண்டாவையும் இங்கு காணலாம். 'த்றுப்பூணித்துறா ஹில் பேலஸ்' என்று அழைக்கப்படும் இந்த பழம்பெரும் அரண்மனை, அரசு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
கேரளாவின் பிரபலமான ஓவியக் கல்லுாரியும் இங்கு தான் செயல்படுகிறது. அன்று, அரச குடும்பத்தினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும், காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து கோட்டயம் போகும் வழியில்,
5 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, இந்த அரண்மனை.
ஜோல்னாபையன்