PUBLISHED ON : ஜன 09, 2022

அ நிறம் | அளவு
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரிலிருந்து, 17 கி.மீ., தொலைவில், படான் கொடோளி என்ற கிராமம் உள்ளது. இங்கு, வித்தல் பிர் தேவ் என்ற விஷ்ணு கோவில் இருக்கிறது. ஆடு மேய்க்கும் இன மக்களின் குல தெய்வ கோவில் இது.
திருவிழாவின் போது, இந்த இன மக்கள் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வந்து விடுவர். மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
பைகளில் மஞ்சள் துாள் எடுத்து வரும் பக்தர்கள், ஒருவர் மீது ஒருவர் துாவிக் கொள்கின்றனர். சிறிது நேரத்தில் கோவில் வளாகமே மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. உடல் முழுவதும் மஞ்சள் குளியலோடு, மாலையில் வீடு திரும்புகின்றனர்.
ஜோல்னாபையன்
