PUBLISHED ON : மே 08, 2022

அ நிறம் | அளவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின், மவுன்ட் டக்காயோ பகுதியில், சமீபத்தில், தீமிதி திருவிழா நடந்தது. அதில், புத்த மத துறவியர் தீ மிதித்துள்ளனர்.
தங்கள் பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பு, உலக அமைதி மற்றும் சமீபகால, 'கொரோனா' தொற்று இல்லாத எதிர்காலத்திற்காக வேண்டி, தீ மிதித்துள்ளனர்.
தமிழுக்கும், ஜப்பானுக்கும், சோழர் காலத்திலிருந்தே தொடர்பு உள்ளது. இதேபோல், பெரு நாட்டில், கிறிஸ்தவர்களும் தீ மிதித்திருக்கின்றனர்.
தென் அமெரிக்காவிலுள்ள, பெரு உட்பட பல நாடுகளுக்கும், தமிழர்களுக்கும் பழங்கால தொடர்பு உள்ளது.
பெருவில், இன்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன; பல மதத்தினரும் வந்து, வழிபட்டு செல்கின்றனர்.
— ஜோல்னாபையன்
