தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விடுமுறை ஸ்பெஷல் - 'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!

விடுமுறை ஸ்பெஷல் - 'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!

விடுமுறை ஸ்பெஷல் - 'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோட்டத்தில் ஏணி இருந்தால், அதை அப்புறப்படுத்தி விடுங்கள். அதேபோல், தோட்ட வேலைக்கான கருவிகளை உள்ளே பாதுகாப்பாக வைத்து விடுங்கள்.

அக்கம் பக்கத்தில், உங்களுக்கு நன்கு தெரிந்த, நெருக்கமான ஓரிரு குடும்பங்களுக்கு மட்டும் ஊருக்கு போகும் விஷயத்தை தெரிவியுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டுக்குள் ஏதாவது நடமாட்டம் என்றால், அவர்களுக்கு சந்தேகம் வந்து, நடவடிக்கை எடுப்பர்.

வீட்டில், ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கட்டும். ஆனால், அது வராண்டாவில் உள்ள ஜீரோ வாட் பல்பாக இருக்க வேண்டாம். ஜன்னல் திரையால் மூடப்பட்ட ஓர் அறை அல்லது கூடத்திற்குள் அந்த மின் விளக்கு எரியட்டும்.

ஜன்னல்கள் விஷயத்திலும் கவனம் தேவை. கதவுகளை பூட்டி, ஒன்றுக்கு நான்கு முறை அதை இழுத்து பார்ப்பவர்கள் கூட, ஜன்னல்களை உட்புறம் தாழிட மறந்து விடுவர்.

நீண்ட நாள் பயணம் என்றால், கிளம்புவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன், வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களை, 'இன்ஷுயூர்' செய்யலாம். பொருட்கள் தொலைந்தாலும் நஷ்ட ஈடாவது கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us