தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளம்பர படத்தில் கமலஹாசன்!

தன், 50 ஆண்டுகால சினிமா வாழ்வில், இதுவரை எந்த விளம்பர படத்திலும் நடித்ததில்லை கமல். ஆனால், இப்போது முதன்முறையாக அல்லயன்ஸ் மீடியா தயாரிக்கும், ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார். இந்த நிறுவனம், ஏற்கனவே தயாரித்த விளம்பரங்களில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கரீனாகபூர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர்.

— சினிமா பொன்னையா.


ஆசிரமத்துக்கு சென்ற அமலாபால்!

நடிகைகளுக்கும், ஆசிரமத்துக்குமிடையே, எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில், கோவையில் உள்ள, ஈஷா ஆசிரமத்துக்கு சென்று வந்துள்ளார் அமலாபால். அதிலிருந்து, அந்த இடத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டுமென்று மனம் தூண்டுவதாக சொல்லும் அமலாபால், அந்த ஆசிரமத்துக்கு சென்று வந்தது சுகமான அனுபவம் என்கிறார். உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல!

— எலீசா.

இந்தியில் 'துப்பாக்கி!'

முருகதாஸ் இயக்கும், 'துப்பாக்கி' படம், தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. இதனால், 'இதுவரை, இரண்டு மொழிக்கும் நானே ஹீரோயினி...' என்று உற்சாக முழக்கமிட்டு வந்தார் காஜல் அகர்வால். ஆனால், அப்படத்தை, அடுத்து இந்தியில் ரீ-மேக் செய்ய அக்ஷய்குமாரை, 'புக்' செய்துள்ள முருகதாஸ், ஹீரோயினிக்கு காஜலையே, 'கமிட்' பண்ணியுள்ளார். இதனால், 'துப்பாக்கி' படத்தை மூன்று மொழிக்கும், நானே குத்தகை எடுத்து விட்டேன்...' என்று குஷி மூடில் சொல்கிறார் காஜல் அகர்வால். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!

— சி.பொ.,


த்ரிஷா - சுனேனா சலசலப்பு?

விஷால் நடிக்கும், 'சமரன்' படத்தில், த்ரிஷா, சுனேனா என்று, இரண்டு ஹுரோயின்கள் நடிக்கின்றனர் என்றதும் கண்டிப்பாக படப்பிடிப்பில் சலசலப்பு ஏற்படும் என்று, பலரும் நினைத்தனர். ஆனால், அப்படத்தின் இயக்குனரான திரு, 'அப்படி எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காகத்தான், விஷால் - த்ரிஷா மற்றும் விஷால் - சுனேனா சம்பந்தப் பட்ட காட்சிகளை தனித் தனியே படமாக்குகிறேன். மேலும், இப்படத்தில் த்ரிஷா - சுனேனா இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் ஒன்று கூட இல்லை' என்கிறார். வம்பிலே வருகிறது; குண்டாறு பெருகுகிறது!

—எலீசா.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் பாட்டு!

இது வரை, தான் நடித்த எந்த படத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்ததில்லையே என்று, 'பீல்' பண்ணி கொண்டிருந்தார் தனுஷ். அவரது ஆசை நிறைவேறும் வகையில், தனுஷை வைத்து, 'வந்தே மாதரம்' பரத்பாலா இயக்கும் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். '3' படத்துக்காக அனிருத் இசையில், 'கொலைவெறி' பாடலை பாடிய தனுஷ், இந்த படத்திலும், தனக்கு ஒரு பாடல் பாட சான்ஸ் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

— சி.பொ.,


அம்மா நடிகையான ரோஜா!

திருமணத்துக்கு பின், ஆந்திர அரசியலில் புகுந்த நடிகை ரோஜாவுக்கு, தற்போது அரசியல் நாட்டம் குறைந்து விட்டது. அதனால், 'அன்னக் கொடியும் கொடி வீரனும்' படத்தில், அம்மா வேடத்தில் நடிப்பவர், 'சகுனி'யில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த அம்மா வேடங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் ரோஜா. இதனால், மார்க்கெட்டில் இருக்கும் சில அம்மா நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us