தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆங்கிலேயர்கள், பெரியமருது, சின்ன மருது இருவரையும் பிடித்து, தூக்கில் போட்டுக் கொன்றனர். மருது சகோதரர்களுக்கு உதவியாக இருந்த, 72 பேரை கைது செய்து, பினாங்கு தீவுக்கு நாடு கடத்தினர்.

தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, ஆறு வார கால கப்பல் பயணம்.

72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, 'அட்மிரல் நெல்சன்' என்ற கப்பலில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல், 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு, பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டது.

விடுதலை வீரர்களை, இருவர் இருவராக இணைத்து, கைகளில் விலங்குகளைப் பூட்டி, கப்பலில் ஏற்றினர். டிச., 11, 1902ல், கப்பல் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டது.

வழக்கமாக, ஆறு வார காலப் பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, (5,368படி) பருப்பு, (371 படி) நெய், (421 பலம்) உப்பு, (210 பலம்) ரொட்டி, (5 மூடை) புளி, (3,375 பலம்) கருப்பட்டி, (750) கோழி, (1,100) செம்மறியாடு, (10)குடிநீர் அனைத்தும், தீர்ந்து விட்டன.

பசியிலும், தாகத்திலும் கைதிகள் புழுவாகத் துடித்தனர். கைதிகளில் மூவர், பாஞ்சாலங்குறிச்சி சின்ன பிச்சைத் தேவர், ஆதனூர் சுப்பிரமணிய நாயக்கர், விருப் பாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும், கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.

கப்பல், 75 நாட்களுக்கு பின், பினாங்கை அடைந்து நங்கூரமிட்டது. கப்பலில் உள்ள கைதிகளை, கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள், தீவின் கவர்னருக்கு எடுத்துச் சென்றனர்.

அங்குள்ள, காரன்வாலிஸ் கோட்டைக்குள் இத்தனை கைதிகளையும் வைப்பதற்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதனால், கோட்டைக்கு வெளியே, ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அதன் பின் கைதிகளை கரை இறக்கினர்.

—எஸ்.எம்.கமால் எழுதிய, 'மாவீரர் மருது பாண்டியர்!' நூலிலிருந்து...

***

அந்தக் காலத்தில் தலைவர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தனரோ, அதே மாதிரி, மக்களும் இருந்தனர். சுதேசி மில் வஸ்திரங்களையே கட்டிக் கொள்வது என்று, அவர்கள் சபதம் செய்து கொண்டனர். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், அதற்கு முன், குல்லாய் தரித்துக் கொண்டி ருந்தனர். அந்தப் குல்லாய் கள் மறைந்தன.

ஒவ்வொரு மாணவனும், ஆறு முழம் உத்தரீயத்தை, தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு, பள்ளிக்குச் சென்றான். முண்டாசு கட்டுவதென்றால், கிராமவாசி கழனிக்குச் செல்<லும் போது கட்டிக்கொள்வது போன்ற தினுசில் அல்ல; தலையின் சிகரத்திலே, ஒரு கொச்சு பறக்கும்; பின்பக்கம் வால் தொங்கும்.

இந்தத் தினுசு முண்டாசு கட்டினால் தான் சுதேசி. இம்மாதிரி முண்டாசு கட்டி, மாணவர்கள், வகுப்பில் உபாத்தியாயரின் முன் உட்கார்ந்தால், அந்த உபாத்தியாயருக்கு, எவ்வாறு கோபம் வராமல் இருக்கும்?

ஆனால், 'தலையில் என்னடா முண்டாசு?' என்று, உபாத்தியாயர் கேட்டு விட்டால் மோசம் வந்து விடும். உபாத்தியாயர் கேட்க வேண்டும் என்றும், அதன் பேரில் ரகளை செய்ய வேண்டும் என்றும், 'தமாஷ்' செய்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள், இம்மாதிரி கேள்வியை உபாத்தியாயர் கேட்டதும், 'வந்தே மாதரம்!' என்று கோஷம் போட்டு, கலாட்டா செய்து விடுவர்.

— சுசில் சி.சடகோபன் எழுதிய, 'சுதேசி இயக்க அரசியல் லாபங்கள்' நூலிலிருந்து...

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us