தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திவ்யா பிரசாரம்!

திவ்யா ஸ்பந்தனா, கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு போட்டியிட களமிறங்கிய போது, கட்சியில் எதிர்ப்புகள் வலுத்ததால், போட்டியில் இருந்து விலகினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து வரும் அவர், நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

— சினிமா பொன்னையா.

தெலுங்கு நடிகையான பூர்ணா!

'வித்தகன்' படத்திற்கு பின், 'மெய்யழகி' என்ற படத்தில் கமிட்டான பூர்ணா, அந்த நேரத்தில், அதிக சம்பளத்துடன் சில தெலுங்கு பட வாய்ப்புகள் கதவை தட்டியதால் ஆந்திராவுக்கு பறந்து விட்டார். இப்போது அங்கே, அதிரடி கவர்ச்சி நாயகியாகி இருக்கும் பூர்ணாவின் படக்கூலி, 40 லகரங்களை எட்டி விட்டது. அதனால், முழுநேர தெலுங்கு நடிகையாகி விட்டார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி!

— எலீசா.

ஸ்ரேயா நம்பிக்கை!

'சந்திரா' படத்தில், புதுமுக நடிகருடன் நடிக்கும் ஸ்ரேயாவிடம், அதுபற்றி கேட்டால், 'எனக்கு ஹீரோ முக்கியமல்ல, கதையும், என் கேரக்டரும் தான் முக்கியம்' என்கிறார்.'அதற்காக, முன்னணி ஹீரோக்களின் படங்கள் வந்தாலும் தவிர்க்க மாட்டேன்' என்று சொல்லும் ஸ்ரேயா, ஹாலிவுட்டில் நடித்து வரும், தீபா மேத்தாவின், 'மிட்நைட் சில்ரன்ஸ்' படம், தன்னை பெரிய அளவில் பேச வைக்கும் படமாக இருக்கும் என்றும் அடித்து சொல்கிறார். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!

— எலீசா.

ஜீவாவுக்கு முக்கியமானவர்கள்!

'சிவா மனசுல சக்தி' படத்துக்கு பின், 'கோ' படம் தன்னை வேறு தளத்துக்கு கொண்டு போனது. அதன் பின், இப்போது, 'முகமூடி' தன் சினிமா கேரியரையே பெரிய அளவுக்கு மாத்திடுச்” என்கிறார் ஜீவா. 'இதற்கு காரணமான டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், மிஷ்கின் ஆகியோரை என்னால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு என் சினிமா வாழ்க்கையில் அவர்கள் முக்கியமானவர்களாகி விட்டனர்...' என்கிறார்.

— சி.பொ.,

தில்லான வேடம் கேட்கும் சோனா!

'சோக்காளி' படத்தில், பெண்களை ஏமாற்றும் கதாநாயகனை பழி வாங்கும் வேடத்தில் நடிக்கிறார் சோனா. 'இது என் நிஜ கேரக்டரும் கூட...' என்று சொல்லும் சோனா, 'இனி, கோழைத்தனம் இல்லாமல், எதையும் தில்லாக எதிர்த்து போராடும் போர்க்குணம் கொண்ட வேடங்களுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்...' என்கிறார். இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்!

— எலீசா.

ஆக்ஷன், காமெடிக்கு மாறிய வினய்!

'உன்னாலே உன்னாலே' படத்தில் நடித்த நேரம், ரொமான்டிக் ஹீரோவாகப் போவதாக சொன்ன வினய், இப்போது, 'மிரட்டல்' படத்துக்கு பின், இனி, ஆக்ஷன் கலந்த காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் தரப் போவதாக சொல்கிறார். அதனால், அவரை காதல் கதைகளுக்கு, 'புக்' செய்து, காமெடியையும் கதைக்குள் திணித்து வருகின்றனர் டைரக்டர்கள்.

— சி.பொ.,

நடுவராகும் தன்வியாஷ்!

'எப்படி மனசுக்குள் வந்தாய்?' படநாயகி தன்வியாஷ், நமீதாவை போலவே, குஜராத்தை சேர்ந்தவர். 2008ல், 'மிஸ் இந்தியா எர்த்' பட்டம் பெற்றுள்ள அவர், தொடர்ந்து என்.டி., 'டிவி'யில் டிராவலிங் ஷோ நடத்தி வருகிறார். விரைவில், துபாயில் நடக்கும், 'பியூட்டி குயின் மிஸ் இந்தியா' போட்டியில் நடுவராகவும் கலந்து கொள்கிறார்.

— சினிமா பொன்னையா.

சில்க் ஸ்மிதாவை பின்பற்றும் நடிகை!

சில்க் ஸ்மிதாவின் கதையை, பல மொழிகளிலும் படமாக்கி வருவதைத் தொடர்ந்து, சில புதிய நடிகையர் அவரது நடிப்பை பின்பற்றவும் துவங்கியுள்ளனர். மேலும், 'முகமூடி' படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, படங்களில், சில்க் அணிந்து நடித்தது போன்ற காஸ்டியூம்களையே விரும்பி அணிந்து வருகிறார். வழி வழியாய் போனாலும், விதி விதியாய் வருகிறது!

— எலீசா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us