தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஏ' படங்களுக்கு திடீர் தடை!

இதுவரை, 'ஏ' சான்றிதழ் பெறும் படங்களை கூட, சில ஆபாச காட்சிகளை கத்தரித்து, சேனல்களில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால், இனிமேல், 'ஏ' சான்றிதழ் வழங்கிய எந்த படத்தையும், சேனல்களில் ஒளிபரப்ப அனுமதி இல்லை என்று மத்திய தணிக்கைக்குழு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

— சினிமா பொன்னையா

'ஐ' படத்தில் ஹாலிவுட் காஸ்ட்யூம்!

'தாண்டவம்' படத்திற்கு பின், 'ஐ' படத்தில் நடிக்கும் எமி ஜாக்சன், ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட, சில அதி நவீன காஸ்ட்யூம்களை, ஷங்கரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதனால், முந்தைய ஷங்கர் படங்களைவிட, இப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூம்கள் இடம் பெறுவதோடு, அதற்காக பெருந்தொகையும் செலவு செய்யப்பட இருக்கிறது. கூந்தல் உள்ள சீமாட்டி, வலக் கொண்டையும் போடுவாள்; இடக் கொண்டையும் போடுவாள்!

— எலீசா

தனுஷுக்காக பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், 'மரியான்!' இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எப்படியும் தான் ஒரு பாட்டுப்பாடி விட வேண்டும் என்று, நினைத்திருந்தார் தனுஷ். ஆனால், அவரது குரலுக்கு ஏற்ற பாடல் இல்லை. அதே சமயம், தனுஷுக்காக இப்படத்தில், 'விழித்தெழு நெஞ்சே' என்றொரு பாடலை, ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார். இதனால், 'நான் இப்படத்தில் பாடாதபோதும், ரஹ்மான் எனக்காக பாடியிருப்பதே சந்தோஷமாக உள்ளது...' என்கிறார் தனுஷ்.

— சி.பொ.,

ஸ்ரேயா திருமணம் எப்போது?

ஸ்ரேயாவிடம், 'திருமணம் எப்போது?' என்று கேட்டால், 'எனக்கு இப்போது தான், 30 வயது ஆகிறது. இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது...' என்கிறார். மேலும், 'ஹாலிவுட் சினிமாவில் எல்லாம், 30 முதல், 35 வயதில் தான் நடிகைகள் நடிக்கவே வருகின்றனர். அதனால், 'மிட் நைட் சில்ரன்ஸ்' படம் மூலம், நானும் இப்போது அங்கு புதுமுக நடிகை போல் தான் அறிமுகமாகிறேன். ஆக, என் திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது...' என்கிறார் ஸ்ரேயா. காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்!

— எலீசா

ஸ்ருதி ஹாசன் படக்கூலி எகிறியது!

தெலுங்கில், ஸ்ருதிஹாசன் நடித்து 'கப்பார் சிங்' படம் வெற்றி பெற்று, அவரது மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. அதனால், ரவி தேஜாவுடன், 'பலுடி' என்ற படத்தில் நடிக்கும் அவரது படக்கூலி, ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மேலும் சில புதிய படங்கள், ஸ்ருதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்! — எலீசா

டைரக்டரை ஹீரோவாக்கிய கவுதம் மேனன்!

'தங்க மீன்கள்' படத்தை தயாரிக்கும், இயக்குனர் கவுதம் மேனன், அப்படத்தை இயக்கும், ராமையே ஹீரோவாக்கி விட்டார். அதோடு, நடிகைகள் ரோகிணி, பத்மப்ரியா ஆகியோருக்கும் படத்தில் முக்கிய வேடம் கொடுத்து, நடிப்பில் அவர்களுக்குள் போட்டியை உருவாக்கி விட்டிருக்கிறார்.

— சி.பொ.,

'கும்கி' நாயகி லட்சுமி மேனன் அடுத்த திட்டம்!

'கும்கி' மற்றும் 'சுந்தர பாண்டியன்' படங்களில் நடித்துள்ள கேரள நடிகை லட்”மி மேனனை தேடி, சில வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் சென்றபோது, அவற்றை திருப்பி அனுப்பி விட்டார். 'முன்வரிசை ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று கூறி வரும் அவர், 'கும்கி' படத்தின் வெற்றியை பொறுத்து, தன் படக் கூலியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார். ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!

— எலீசா

பரபரப்பான பரத்!

'திருத்தணி' படம் திரைக்கு வர தயாராகி விட்டதால், பரத் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்த சூட்டோடு, சசியின், '555' பட வேலைகளும், வேகமாக நடக்கிறது. இதனால், அடுத்து புதிய படங்களை கைப்பற்ற, சில இயக்குனர்களிடம் கதை கேட்கிறார் பரத்.

— சி.பொ.,

அர்ஜுனுடன் நடிக்க மறுத்த நயன்தாரா!

மணிரத்னம் இயக்கும், 'கடல்' படத்தில், அர்ஜுனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நடிக்க, நயன்தாராவை அணுகிய போது, 'மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைதான். ஆனால், அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தால், அதன் பின், யூத் ஹீரோ படங்கள் எனக்கு கிடைக்காது...' என்று சொல்லி, நடிக்க மறுத்து விட்டார் நயன்.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us