தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 16, 1945-ல், நேதாஜி, சிங்கப்பூரிலிருந்து அவரது சகாக்கள் ஹபிபுர் ரஹ்மான், ஏ.எஸ்.ஏ.ஐயர், பிரீதம் சிங் ஆகியோருடன், விமானத்தில் ஏறி பாங்காக் சென்றார்.

மறுநாள் (ஆகஸ்ட் 17) பாங்காக்கில் இருந்து விமானம் மூலம், சைக்கோன் சென்று, அங்கு ஒருவர் வீட்டில் தங்கினார். திடீரென தகவல்... ஒரு சிறிய, ஜப்பானிய குண்டு வீச்சு விமானம், மஞ்சூரியாவுக்குப் புறப்பட இருப்பதாகவும், நேதாஜி ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்பதே அத்தகவல்.

நேதாஜியின் முயற்சியால், ஹபிபுர் ரஹ்மானையும் உடன் பயணிக்க இசைந்தனர். மாலை 5.00 மணிக்கு விமானம், சைக்கோனை விட்டுப் புறப்பட்டது. ஹபிபுர் ரஹ்மான் மற்றும் 11 ஜப்பானியருடனும் அந்த விமானத்தில் பயணித்தார் நேதாஜி. நடுவில், டூரானே எனும் ஜப்பானிய படை முகாமில் விமானம் இறங்கியது. இரவு அங்கு தங்கினர்.

மறுநாள், (ஆகஸ்ட் 18) காலை 5.00 மணிக்கு, 'டூரானே'யிலிருந்து புறப்பட்ட விமானம், அன்று மதியம் 2.30 மணியளவில் விபத்துக்கு உள்ளானது. விமானத்தின் ஒரு பகுதியில், நெருப்பு எழுந்தது. பற்றி எரிந்த விமானம், தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த, 13 பேரில், மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர்.

நேதாஜியும், ஹபிபுர் ரஹ்மானும் தீக்காயங்களுடன் போராடி, விமானத்திற்கு வெளியே குதித் தனர். தீக்காயங்களுடன் நேதாஜி, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்; இரவு 8.00 மணி அளவில், அவர் <உடலில் ஜன்னி கண்டது போல் நடுக்கம் ஏற்பட்டது; பின்பு அசைவில்லை. இரவு 8.30 மணிக்கு, நேதாஜி மறைந்தார் என, மருத்துவமனை பதிவு ஏடுகள், பதிவு செய்தன.

நேதாஜியின் உடலை சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல, ஹபிபுர் ரஹ்மான் விரும்பிக் கேட்டதாகவும், அது இயலாது என, ஜப்பானியர்கள் கூறிவிட்டதா கவும் குறிப்பிட்டுள்ளார் ஹபிபுர் ரஹ்மான்.

ஆக., 20ம் நாள் நேதாஜியின் சடலம், விபத்து நடந்த, 'தைக்கோ கூ' நகரிலேயே தகனம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அஸ்தியை எடுத்துக் கொண்டு, ஹபிபுர் ரஹ்மான் டோக்கி@யா சென்ற தாகவும், அங்கு உள்ள சிறிய @காவிலில், அஸ்தி கலசம் வைக்கப்பட்டதாகவும், ஜப்பானிய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆக., 21ம் தேதி வரை, நேதாஜியின் மரணச் செய்தி உலகுக்குத் தெரிய வில்லை. ஆக., 22ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜப்பான் அர”.

நேதாஜி மறைந்தார் எனும் செய்தி கேட்டு, ஏ.எஸ்.ஏ. ஐயர் துடிதுடித்தார். ஹபிபுர் ரஹ்மானிடம் துருவித் துருவிக் கேட்டார், ரஹ்மான் சொன்ன பதில்:

விமானத்தின் முன் பகுதியில் பழுது ஏற்பட்டு, விமானம் ஒரு பக்கமாக சாயத் துவங்கியது. நேதாஜியைக் கவனித்தேன், அவர் எந்தப் பதற்றமும் அடையாமல் இருந்தார். சில விநாடிகளில் விமானம் தரையில் மோதியது. காது செவிடுபடும் ஓசை, சில நிமிடங்கள் ஒரே இருட்டு, தலை சுற்றியது. பின்பக்க வழி முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது, முன்பக்கமாக நானும், நேதாஜியும் வெளியேறி, கீழே குதித்தோம். பற்றி எரிந்த, ராணுவ உடுப்புகளை களையக் கஷ்டப்பட்டார் நேதாஜி. நான் ஓடிச் சென்று உதவினேன்; அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம்.

முகம் எல்லாம் கிழிக்கப்பட்டும், தீப்பிடித்து தோல் உரிந்தும், பயங்கரமாகக் காணப்பட்டது. மயங்கிச் சாய்ந்தார். மருத்துவமனையில், 'இந்தியா விரைவில் விடுதலை பெறும்!' என்று கூறினார்; அவர் உயிர் பிரிந்தது என்றார். நேதாஜி விமான விபத்தில் மாண்டது உண்மையா? 'தைக்கோ கூ' மருத்துவமனையில், ஆக., 18ம் தேதி இரவு, நேதாஜியின் உயிர் பிரிந்தது உண்மை எனில், முதல் நாள் சைகோனில் அவரை வழி அனுப்பி விட்டு, அங்கேயே இருந்த நேதாஜியின் உயிர் சகாக்களான, ஏ.எஸ்.ஏ.ஐயர், குல்சாரா சிங், நேப்தாத் தாஸ் ஆகியோரை, ஏன் தைக்கோ கூ நகருக்கு அழைக்கவில்லை? அவர் களிடம் ஏன் நேதாஜி உடலை ஒப்படைக்கவில்லை? நேதாஜி மரணத்தை, நான்கு நாள் வரை ஜப்பான் அறிவிக்காதது ஏன்? நேதாஜியின் கையில் கட்டி இருந்ததாக அடையாளம் சொல்லப்பட்ட கைக்கடிகாரம், சதுர வடிவத்தில் இருந்தது. ஆனால், வாழ்நாளெல்லாம் அவர் கையில் கட்டியிருந்த கைக் கடிகாரம், வட்ட வடிவமானது அல்லவா?

ஹபிபுர் ரஹ்மான், நேதாஜி மறைந்து விட்டதாகவே கூறுவதற்கு, ஒரு வேளை நேதாஜி தலைமறைவாகச் செல்லத் திட்டமிட்டதை வெளிப்படுத்த வேண்டாம் என்பது, ஒரு காரணமாக இருக்கக் கூடுமோ? ஹபிபுர் ரஹ்மான், செங்கோட்டைச் சிறையில் இருந்து விடுதலையான பின், சில மாதங்கள் கோல்கட்டாவில், நேதாஜியின் அண்ணன் சரத் சந்திரபோஸ் இல்லத்தில் தங்கி இருந்தார். இதன் பின்பும் சரத் சந்திரபோஸ், 'நேதாஜி உயிருடன் இன்னமும் இருப்பதாகவே நான் நம்புகிறேன்...' என்றார்.

— 'இந்திய சுதந்திரப் போரில் வக்கம் அப்துல் காதர்' நூலில் செ.திவான்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us