தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 14, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுஷ்கா படக் கூலி அதிரடி உயர்வு!

விக்ரம், சூர்யா, ஆர்யா என்று முன்வரிசை ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா, தன் படக்கூலியை, 50 லட்சத்திலிருந்து, 65 லட்சமாக உயர்த்தி விட்டார். இதையடுத்து நடித்து வரும், 'இரண்டாம் உலகம்' மற்றும் 'சிங்கம் - 2' படங்கள் வெற்றி பெற்றால், இன்னும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

இளமை ஊஞ்சலில் ஆறு நடிகையர்!

'மன்மத ராஜ்ஜியம்' படத்தை, 'இளமை ஊஞ்சல்' என்று பெயர் மாற்றியுள்ளார் அரிராஜன். அடர்ந்த காடுகளில் படமாகி வரும் இந்த கிளுகிளுப்பான திகில் படத்தில், நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என்று ஆறு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

— சி.பொ.,

அரசியல் கதை அதிரும் கார்த்தி!

அரசியல் கதையான, 'சகுனி'யில் நடித்து அதிர்ச்சி தோல்வி கண்ட கார்த்தி, இப்போது யாராவது அரசியல் கதை சொல்ல வந்தால், தலை தெறிக்க ஓடுகிறார். இப்போதைக்கு அரசியல் கதை வேண்டாம். காதல், காமெடி கதைகள் இருந்தால் மட்டும்

சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.

— சி.பொ.,

டீலில் விடும் காஜல் அகர்வால்!

தமிழில் ஆரம்பித்து, இந்தி சினிமா வரை நடித்து வரும் காஜல் அகர்வால், ரொம்ப பிசியாக உள்ளார். அதனால், தான் முதலில் கொடுக்கும் கால்ஷீட் தேதிகளை யாராவது பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், மீண்டும் அவர்கள் தேதி கேட்கும் போது மறுத்து விடுகிறார். அப்படி காஜல் நடிக்க மறுத்த இரண்டு தெலுங்கு படங்களுக்கு, தற்போது வேறு நாயகியை தேடி வருகின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் அரசு செய்யலாம்!

— எலீசா

இந்தி படத்தை தவிர்த்த திரிஷா!

அடுத்த ஆண்டு தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்யவிருப்பதால் முத்தக் காட்சி, அதிக கிளாமர் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கிறார் திரிஷா. அக்ஷய் குமாருடன், இந்தியில் நடிக்க வந்த ஒரு படத்தை கூட, உதட்டு முத்தக் காட்சி இருந்த ஒரே காரணத்துக்காக தவிர்த்துள்ளார். எடுத்த கால் வைப்பதற்குள், வைத்த கால் செல் அரிக்கிறது.

— எலீசா

சமூகப் பார்வை!

'சாட்டை' படத்தில் நடித்துள்ள டைரக்டர் சமுத்திரகனியை மேலும், சில இயக்குனர்கள் நடிக்க அழைத்தனர். ஆனால், அந்த கதைகளில் சமூகப் பார்வை இல்லையென்று நடிக்க மறுத்து விட்டார். மேலும், 'தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை...' என்று சொல்லும் சமுத்திரகனி, அடுத்து டைரக்ஷனில் முழு கவனம் செலுத்தப் போவதாக கூறுகிறார்.

— சி.பொ.,

ஸ்ரீதேவிக்கு போட்டியாக நதியா!

மலையாளத்தில் நதியா நடித்து வரும் படங்களுக்கு, 'டபுள்ஸ்' மற்றும் 'செவன்' என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்கள், இப்போது நடிக்கும், ஒரு படத்துக்கு, 'இங்கிலீஷ்' என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற பெயரில், ஸ்ரீதேவி நடித்திருப்பதால், அந்த தலைப்பை மாற்ற கூறியுள்ளார் நதியா. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us