தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மோகன்லாலுக்கு, 'பிளாக்பெல்ட்' விருது!

கடந்த 1977ல், கேரளாவில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் சாம்பியனாக தேர்வானவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மத்திய ராணுவத்தின், 'லெப்டினென்ட் கர்னல்' அந்தஸ்து கொண்ட கவுரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ பிளாக் பெல்ட் விருது வழங்கிய, தென்கொரிய நாட்டின் கராத்தே அமைப்பு, விரைவில் மோகன்லாலுக்கும் வழங்க உள்ளது.

— சினிமா பொன்னையா

தமன்னா சபதம்!

வேங்கைக்கு பின், தமன்னாவின் கோலிவுட் மார்க்கெட், சப்தமில்லாமல் அடங்கிப்போனது என்றாலும், 'என் மார்க்கெட்டை அடங்க விட மாட்டேன். மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பேன்...' என்று தொடை தட்டுகிறார் தமன்னா. அதனால், பாலிவுட்டுக்கு சென்ற பிறகும், அம்மணியின் கோடம்பாக்க படையெடுப்பு நின்றபாடில்லை. அடுத்து, 'பாலிவுட் நடிகை என்ற புகழோடு, மீண்டும் கோலிவுட்டை கலக்குவேன்' என்கிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்!

— எலீசா

இனியாவின் மாடர்ன் கெட்டப்!

கிளாமர் கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த, வாகை சூடவா இனியா, அம்மாவின் கைப்பேசியில் முத்தக் காட்சியில் நடித்ததைத் தொடர்ந்து, இப்போது மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கும் அளவுக்கு, படிப்படியாக மாறி வருகிறார். அதோடு, இந்த சூட்டோடு, மேல்தட்டு ஹீரோக்களுடனும், டூயட் பாடிவிட வேண்டும் என்று, முன்னணி இயக்குனர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அடுத்து, அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்!

— எலீசா

அடுத்த, 'சில்க்' பிந்து மாதவி!

கழுகு பட நாயகியான பிந்து மாதவியை, சில்க் ஸ்மிதா சாயலில் இருப்பதாக கூறி வருகின்றனர். சில்க் மாதிரியே அவரை நடிக்க வைத்தும் வருகின்றனர் சில இயக்குனர்கள். அதனால், இதே ரூட்டை பின்பற்ற நினைக்கும் பிந்து மாதவி, சில்க் நடித்த படங்களை பார்த்தபடி, மேலும் தன் நடிப்பை, அவர் சாயலில் மெருகேற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்!

— எலீசா

உயரமான ஹீரோ தேடும் லட்சுமி மேனன்!

”ந்தரபாண்டியன் படத்தில் நடித்த லட்சுமிமேனன், சசிகுமாரை விட உயரமானவர். அதனால், அவருடன் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சிகளில் வளைந்து, குனிந்து நின்றபடி தான் நடித்துள்ளார். ஆனால், கும்கியில் நடித்த விக்ரம் பிரபு, அவரது உயரத்துக்கேற்ற அம்சமான ஹீரோவாக இருந்ததாக கூறுகிறார். அதனால், இனிமேல் உயரம் அதிகமான ஹீரோ படங்களுக்கே முதலிடம் கொடுத்து நடிக்கப்போவதாக சொல்கிறார் லட்சுமி மேனன். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு!

— எலீசா

புதியவர்களுக்கு சான்ஸ் கொடுக்கும் விஜய் ஆண்டனி!

நான் படத்தை அடுத்து, திருடன் மற்றும் சலீம் என இரண்டு படங்களில் நடிக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 'தொடர்ந்து வருடத்துக்கு மூன்று படங்களில் நடிப்பேன்...' என்று கூறும் அவர், எதிர்காலத்தில் தன் பேனரில் புதுமுக டைரக்டர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகம் செய்யப் போவதாகவும் கூறுகிறார்.

— சி.பொ.,

ப்ருதிவிராஜ் மீது புகார்!

அய்யா இந்தி படத்தில் நடிக்க சென்ற மலையாள நடிகர் ப்ருதிவிராஜ், பல மாதங்களாக அப்படத்தில் நடித்தவர், அதே தேதியில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ரகுபதி ராகவ ராஜாராம் என்ற படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்ததையே மறந்து விட்டார். பின், அவர்கள் நினைவுபடுத்திய போது கூட, 'இந்தி படத்தை முடித்து விட்டுதான் வருவேன்...' என்று அடித்து கூறியுள்ளார். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர், ப்ருதிவிராஜ் மீது மலையாளப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us