
மீண்டும் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!
ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த படத்தை தொடர்ந்து, குறள் 786 என்ற படத்தை இயக்குகிறார். முந்தைய படத்தை போலவே, இதுவும் கதாநாயகியை சுற்றி பின்னப்பட்ட கதை. அதனால், பிரபல நடிகை யாராவது நடித்தால், படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்குமென்று, அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளிடம், கால்ஷீட் கேட்டு வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அப்படத்தை தமிழ், இந்தி என, இருமொழிகளில் இயக்கு கிறார்.
— சினிமா பொன்னையா.
சிபிராஜ் ரீ-என்ட்ரி!
சில ஆண்டுகளாகவே, எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கும் சிபிராஜ், யாராவது பெரிய இயக்குனர்கள் மூலம், ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் அழைப்புக்கு யாருமே செவி சாய்க்கவில்லை. அதனால், தற்போது புதிய இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வரும் சிபிராஜ், அந்தப் படத்தை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— சி.பொ.,
லாரன்ஸ் துவங்கியுள்ள இலவச பள்ளிக்கூடம்!
ரஜினியைப் போலவே, நடிகர் லாரன்சும், ராகவேந்திரரின் தீவிர பக்தர். அதன் காரணமாக, சென்னை அம்பத்தூரில் ராகவேந்திரருக்கு கோவில் கட்டி, தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ராகவேந்திர சுவாமியின் பிறந்த நாளையொட்டி, 100 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் திறந்துள்ளார்.
— சி.பொ.,
தமிழுக்கு 'டாடா' காட்டும் சமந்தா!
ஆந்திர சினிமாவில், சமந்தாவுக்கு மீண்டும் மவுசு கூடியுள்ளது. கூடவே, அவர் நடித்த படங்களும் வெற்றி பெறுவதால், படக்கூலியும் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறது. ஆனால், தமிழ்ப் படங்களுக்கு, அவரை, 'புக்' செய்ய செல்பவர்கள், தெலுங்கில் வாங்கும் தொகையில் பாதியைத் தான் தருவதாக சொல்கின்றனர். அதனால், தன்னை விரும்பி அழைக்கும் கோலிவுட் இயக்குனர்களுக்கு கூட, 'டாடா' காட்டி வருகிறார் சமந்தா. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்!
— எலீசா
பொது சேவையில் ஹன்சிகா!
நன்றாகப் படிக்கும், ஏழைக் குழந்தைகளாக தேடிப்பிடித்து, தத்தெடுத்து வருகிறார் ஹன்சிகா. அவர்களை சந்திக்கும் போது, எதிர்காலத்தில் எந்த துறையில் சிறந்து விளங்க விருப்பம் உள்ளது என்று, கேட்டறியும் ஹன்சிகா, அதற்கு, அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி, தட்டிக் கொடுக்கிறார். மேலும், இதுவரை மும்பை குழந்தைகளை மட்டுமே தத்தெடுத்து வந்த ஹன்சிகா, அடுத்து சென்னையிலும், அதை செயல்படுத்த உள்ளார். ஒன்றே செயினும், நன்றே செய்!
— எலீசா
எமி ஜாக்சன் காட்டும் தொழில் பக்தி!
மதராசப்பட்டினம் மற்றும் தாண்டவம் படங்களில் நடித்த போது, தமிழில் துக்கடா வசனங்கள் பேச கூட பயந்த எமி ஜாக்சன், ஐ படத்தில், மிக பெரிய வசன காட்சிகளில் கூட அபாரமாக நடிக்கிறார். அந்த அளவுக்கு தமிழ் வசனங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்று விட்ட எமி, பெரிய அளவிலான வசன காட்சி கள் என்றால், முந்தின நாளே டயலாக்கை மனப் பாடம் செய்து விட்டு வரு கிறார். அவரது தொழில் பக்தி, ஐ யூனிட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்கறை வந்து முக்காரம் போடுது!
— எலீசா
அஜ்மலுக்கு ஏமாற்றம்!
கோ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல், சமீபத்தில் நாயகனாக நடித்த, கருப்பம்பட்டி படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், படம் கைகொடுக்கவில்லை. அதனால், இனி தமிழ்,தெலுங்கு படங்களுக்காக போராடி, காலத்தை வீணடிக்க விரும்பாத அஜ்மல், தன் தாய்மொழியான மலையாளத்தில், முழு நேர நடிகராக முடிவு செய்துள்ளார். அதோடு, தமிழில் தொடர்ந்து வில்லன் வேடங்களில், நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் கூறி வருகிறார்.
— சி.பொ.,
டிராக்கை மாற்றும் கஞ்சா கருப்பு!
தன் காமெடி மார்க்கெட் சரிந்து விட்டதால், வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. மேலும், இப்படத்திலிருந்து தன் ட்ராக்கை மாற்றியுள்ள கஞ்சா, தொடர்ந்து கண் கலங்க வைக்கும், குணசித்ர வேடங்களிலும் நடிக்க விரும்பி, தன் விருப்பத்தை, சில சென்டிமென்ட் இயக்குனர்களிடமும், வெளிப்படுத்தி வருகிறார் அவர்.
— சி.பொ.,
இயக்குனரான அம்பிகா!
ஏராளமான படங்களில் நடித்துள்ள மாஜி ஹீரோயின் அம்பிகா, நிழல் என்ற படத்தின் மூலம், இயக்குனராகிறார். கார்கில் போரில் பங்கேற்ற, மேஜர் கிஷோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், 2010ல் மிஸ் கேரளா பட்டம் வென்ற இந்து என்பவர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், 25 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக சொல்லும் அம்பிகா, இப்படத்துக்கு கேமராமேனே கிடையாது, படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே, கேமராமேன்களாகவும் செயல்பட்டதாக சொல் கிறார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!

