தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 19, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா!

தர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்கு பின் வித்யாபாலன் நடித்த படம், கஹானி. காணாமல் போன கணவனை தேடி அலையும், கர்ப்பிணி கதாபாத்திரத்தில், அவர் நடித்திருந்தார். தற்போது, அப்படம் தமிழ், தெலுங்கில் ரீ - மேக் ஆகிறது. இதில் நடிக்க, சில நடிகைகள் போட்டி போட்ட போதும், நயன்தாராவை தேடி வந்து, 'புக்' செய்துள்ளனர். இதனால், உற்சாகமடைந்துள்ள நயன், வித்யா பாலனை மிஞ்சும் நடிப்பை வெளிப்படுத்தி விட வேண்டுமென்று, கர்ப்பிணி கெட்டப்பில் ரிகர்சலை துவங்கியுள்ளார்.

— சினிமா பொன்னையா

கெஸ்ட் ரோலில் நட்சத்திர தம்பதி

கோவா படத்தில், முதன் முறையாக கெஸ்ட் ரோலில் நடித்த பிரசன்னா, தொடர்ந்து நேற்று இன்று, ஜே,ஜே என்னும் நண்பனின் வாழ்க்கை மற்றும் பிரியாணி ஆகிய படங்களிலும், கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதில் பிரியாணி மற்றும் ஜே,ஜே என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில், பிரசன்னா - சினேகா இருவரும் இணைந்தே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

— சி.பொ.,

சதா துவங்கினார் குத்தாட்ட ரவுண்ட்!

மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்துள்ள சதாவுக்கு, மதகஜ ராஜாவில் முதலில் குத்தாட்டமாட மட்டுமே சான்ஸ் கொடுத்த சுந்தர்.சி., பின் கதையில் ஏற்பட்ட சில மாறுதல் காரணமாக, அவருக்கு சில காட்சிகளில் வந்து செல்வது போல் கேரக்டரும் கொடுத்துள்ளார். இதையடுத்து, 'குத்தாட்டம், கேரக்டர் என்று, எது கிடைத்தாலும் நடிப்பேன்...'என்று கூறி வரும் சதா, தற்போது, இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க, 'புக்' செய்யப்பட்டுள்ளார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

— எலீசா.

விஷால் இமயமலை விசிட்!

ரஜினி ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்ததும், இமயமலைக்கு சென்று வருவது போல், தற்போது விஷாலும் சென்று வருகிறார். 'இது ரஜினியை பின்பற்றும் முயற்சியா?' என்று அவரைக் கேட்டால், நிச்சயமாக இல்லை என்கிறார். 'ஒரு முறை ஏதேச்சையாக இமயமலைக்கு சென்ற போது, அங்குள்ள அழகும், அமைதியும் என் மனதை கவர்ந்தது. அதனாலேயே அடிக்கடி அங்கு செல்கிறேன்...' என்கிறார் விஷால்.

— சி.பொ.,

கார்த்திக்கிற்கு ஷாக் கொடுத்த கோலிவுட்!

கடல் கவுதமை, அப்படத்திற்கு பின், சில பெரிய பட நிறுவனங்கள், 'புக்' செய்ய முன் வந்தன. அதனால், மகனுக்கான படக் கூலியை தடாலடியாக உயர்த்தினார் கார்த்திக். இதனால், கவுதம் மீது, கோலிவுட்டில் அதிருப்தியான சூழல் உ<ருவானதையடுத்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், இப்போது மகனின் சம்பள விஷயத்தில், அடக்கி வாசிக்கத் தொடங்கியிருப்பதோடு, முதல் படமே தோல்வி என்பதால், வெட்டி பந்தா செய்வதையும் குறைத்து உள்ளார்.

— சினிமா பொன்னையா

கிசுகிசுவை கொண்டாடும் ஹன்சிகா!

ஆர்யா மாதிரியே ஹன்சிகாவும் கிசுகிசுக்களைக் கண்டு கலங்குவதில்லை. மாறாக, தன்னைப் பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் கிசுகிசுக்களை, ஆள் வைத்து படித்து, தெரிந்து கொள்கிறார் ஹன்சிகா. சில முக்கிய நடிகர்களுடன் தன்னை இணைத்து வெளியாகியிருக்கும் செய்திகளை, உடனே சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் தெரியப்படுத்தி, அதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருகிறார். உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்ற கதை!

— எலீசா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us