தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 09, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரிக்கெட் சூதாட்டம் சினிமாவாகிறது!

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்துக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்நிலையில், இந்தப் பிரச்னையை மையப்படுத்தி, மலையாளத்தில், 'கிரிக்கெட்' என்றொரு படம் தயாராக உள்ளது. ஷாஜி கைலாஷ் தயாரிக்கும் இப்படத்தில், ஸ்ரீசாந்த் வேடத்தில் நடிக்க, நடிகர் தேர்வு நடந்து வருகிறது.

— சினிமா பொன்னையா

தமிழில் பாட்டுப் பாட ஆசைப்படும் நித்யா!

வெப்பம் மற்றும் 180 படங்களில், நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சமீப காலமாக கதாநாயகி யாகவும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, பின்னணி பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, மூன்று மொழிகளிலும் இதுவரை, 10க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள நித்யா மேனன், தமிழில் பாட சான்ஸ் தருமாறு, சில பிரபல இசை அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டு வருகிறார். முயன்றால் முடியாதது என்றும் இல்லை!

— எலீசா

லட்சுமி மேனன் புதிய முடிவு!

'எனக்கு நடிப்பை விட, படிப்பு தான் முக்கியம்...' என்று சொல்லி வந்த, லட்சுமி மேனன் தற்போது, மஞ்சப்பை மற்றும் வசந்த குமரன் படங்களில், 'புக்' ஆகியுள்ளார். அதனால், சென்னைக்கு முகாமை மாற்றி விட்ட அவர், இனி நடிப்புக்கு போக மீதமிருக்கும் நேரத்தை தான், படிப்புக்கு செலவிடப் போவதாக கூறுகிறார். அதுவும், சென்னையில் இருந்தபடியே, அஞ்சல் வழி கல்வியை தொடர இருக்கிறார். சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று!

— எலீசா

மதுரையை முற்றுகையிட்ட மூன்று பாண்டியர்கள்!

கிராமத்து படம் என்றாலே மதுரை தான் என்றாகி விட்டது. அந்த வகையில் தற்போது, பாண்டிய நாடு படத்துக்காக மதுரை செல்ல தயாராகி கொண்டிருக்கிறார் விஷால். அவரைத் தொடர்ந்து, அமீர் நடிக்கும், புலி பாண்டியன், விதார்த் நடிக்கும், பட்டைய கிளப்புடா பாண்டியா ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும், அதே மதுரையில் நடைபெற உள்ளன. ஏற்கனவே, மதுரை லொகேஷனில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து விட்டதால், இவர்கள் புதிய லொகேஷன்களாக தேடிப்பிடித்து, படமாக்க இருக்கின்றனர்.

— சி.பொ.,

ரகளையில் ஈடுபட்ட த்ரிஷா!

த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து விட்ட போதும், அவரது பந்தா பேச்சு இன்னமும் குறையவில்லை. புன்னகை படப்பிடிப்புக் காக சுவிட்சர்லாந்து சென்ற போது, தனக்கும், தன்னுடன் வந்த அம்மாவுக்கும் தங்குவதற்கு தனித்தனி அறை வேண்டும் என்று, பெரும் ரகளையில் ஈடுபட்டார். 'அம்மாவும் - மகளும் ஒரே அறையில் தங்கினால் தப்பில்லையே...' என்று சிலர், 'அட்வைஸ்' செய்ய, படப் பிடிப்பு தளத்துக்கு வர மறுத்து விட்டார். அதையடுத்து, அவரது அம்மாவுக்கு அதே ஓட்டலில் தனி அறைக்கு ஏற்பாடு செய்த பிறகே, ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார் த்ரிஷா. மலை விழுங்கி அம்மையாருக்கு கதவு சுண்டாங்கியா?

— எலீசா

ஷாக் கொடுக்கும் அஞ்சலி!

மொத்தமாக ஆந்திராவில் செட்டிலாகி விட்டார் அஞ்சலி. இதற்கிடையில், சிங்கம் - 2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு ஆடியவர், கோடம்பாக்கவாசிகளுக்கு தெரியாமலேயே, ஐதராபாத் பறந்து விட்டார். இருப்பினும், தங்கள் படத்துக்கு அஞ்சலி நாயகியாக நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும் டைரக்டர்கள், அவரை தமிழுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், 'நான் வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இப்போது என் படக் கூலி, கோடியை எட்டி விட்டது. உங்களால் தர முடியுமா?' என்று கேட்டு, 'ஷாக்' கொடுக்கிறார் அஞ்சலி. விடா கண்டனும், கொடா கண்டனும்!

— எலீசா

மீண்டும் வடிவேலு!

இரண்டு ஆண்டு வனவாசத்துக்கு பிறகு, வடிவேலு நடித்து வரும் படம், கஜபுஜ புஜபல தெனாலிராமன். வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என, பல நடிகைகளை அணுகினர். ஆனால், யாரும் உடன்படவில்லை. இதையடுத்து, மீனாட்சி தீட்ஷித் என்ற நடிகையிடம் பேசிய போது, உடனே, ஓ.கே., சொல்லிவிட்டார். இந்த மீனாட்சி, விஜயகாந்த் நடித்த, விருதகிரி படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்தவர்.

—சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us