PUBLISHED ON : ஜூன் 09, 2013

ஹாலிவுட்டின் பிரபல நடிகை, ஹாலே பெர்ரி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர். நடிப்பு திறமைக்காக, ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ள, பெர்ரிக்கு, இப்போது, 46 வயது. ஆனாலும், ஹாலே பெர்ரியின் மனதில் மட்டுமல்ல தோற்றத்திலும், இளமை ஊஞ்சலாடுகிறது. இந்த வயதில், அம்மணி கர்ப்பமாக இருக்கிறார்.
'உங்கள் இளமை ரகசியம் என்ன' என, பத்திரிகையாளர்கள் கேட்டபோது,' எனக்கிருக்கும் சக்கரை வியாதி தான், என் இளமை ரகசியத்துக்கு காரணம்' என, குண்டை தூக்கி போட்டார். மேலும், அவர் கூறுகையில், 'நம்ப முடியவில்லையா? ஆனால், அது தான், உண்மை. இளம் வயதிலேயே, எனக்கு சக்கரை வியாதி வந்து விட்டது. இதனால், உணவு விஷயத் தில் கட்டுப்பாடுகளை கடைப் பிடிக்க துவங்கி னேன். கண்டதையும் சாப்பிடாமல், அளவாக சாப்பிட்டு, உடலையும், கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டேன். இந்த, 46 வயதிலும், என்னால், கர்ப்பமாக முடிகிறது என்றால், அதற்கு, சக்கரை வியாதிக்கு தான், நன்றி கூற வேண்டும்' என்றார்.
— ஜோல்னா பையன்.
