
இயக்குனராகும் சந்தானம்!
தமிழ் சினிமாவில், பல காமெடியன்கள் ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில், இயக்குனர் சுகுமார், திருக்குறள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரைத் தொடர்ந்து, சந்தானத்துக்கும், ஒரு படத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது, படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கதை விவாதம் நடத்தி வரும் சந்தானம், அப்படத்தில், தானே முக்கிய வேடத்திலும் நடிக்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா
அசின் இடத்தை நோக்கி நஸ்ரியா நசீம்!
நேரம் படத்தில், மலையாள நடிகர் நிவினுக்கு ஜோடியாக நடித்திருந்த நஸ்ரியா நசீம், மேலும், இரண்டு மலையாளப் படங்களில் அவருடன் நடித்து வருகிறார். தமிழை விட, மலையாளத்திலும் வெளியான, நேரம் படம் பெரிய ஹிட் ஆனதால், அங்கு, நிவினுடன் ஜோடி சேர பல அழைப்புகள், நஸ்ரியாவை முற்றுகையிடுகிறது. ஆனால், தமிழில் தனுஷ், ஆர்யாவுடன் நடித்து வரும் அவர், கோடம்பாக்கத்தில், அசின் இடத்தை பிடிக்க திட்ட மிட்டிருப்பதால், கூடுதலான மலையாள படங்களை ஏற்காமல் தவிர்த்து வருகிறார். இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்!
— எலீசா
ஹன்சிகா கிண்டல் பதில்!
@காலிவுட் நாயகர்களை மாறி, மாறி புகழ்ந்து தள்ளுவதில், ஹன்சிகாவை யாராலும் மிஞ்ச முடியாது. சமீபத்தில் மீடியா சார்பில், அவரிடம் கேட்கப்பட்ட, கேள்விகளுக்கு பதிலளிக்கையில், விஜய் ரொம்ப அமைதியானவர், ஜெயம் ரவி குறும்புத்தனம் கொண்டவர், சிம்பு ரொம்பவே வாலு பார்ட்டி, ஆர்யாவோ அரட்டை நடிகர் என்று கிண்டலாக கூறியுள்ளார். ஹன்சிகாவின், இந்த பதிலால் மேற்படி நடிகர்கள் கிளு கிளுப்படைந்துள்ளனர். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு!
—எலீசா
விவசாயியான பிரகாஷ்ராஜ்!
சினிமாவில் நடிகராவதற்கு முன், விவசாயி ஆக வேண்டும் என்பது தான், பிரகாஷ்ராஜின் ஆசையாக இருந்ததாம். ஆனால், நடிகராகி விட்டதால், அவரது விவசாயி ஆசை, நிராசையாகவே இருந்துள்ளது. இந்நிலையில், சென்னை, ஐதராபாத்தை சுற்றி பல ஏக்கர் விளை நிலங்களை வாங்கி, பயிர் செய்துள்ளார். அடிக்கடி, அங்கு விசிட் அடித்து வரும் பிரகாஷ்ராஜுவிற்கு, விவசாயி ஆகும் ஆசை நிறைவேறியதில் படு சந்தோஷம்.
— சி.பொ.,
மகேஷ்பாபு சிபாரிசு செய்யும், 'பியூட்டி குயின்!'
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தமன்னாவை, 'பியூட்டி குயின்' என்று தான் அழைக்கிறார். அந்த அளவுக்கு, அவருடன் நடிக்கும் பல நடிகைகளிலே தமன்னா மட்டும், அவருக்கு, 'ஸ்பெஷல்' என்கிறார். அதனால், பாலிவுட்டில் இருந்து திரும்பி வந்த தமன்னாவுக்கு மாறி மாறி சிபாரிசு செய்து வரும் மகேஷ் பாபு, ஆஹடு என்ற படத்தில், தன்னுடன் நடிக்கும் தமன்னாவின் படக்கூலியையும், கடுமையாக உயர்த்தி விட்டுள்ளார். இதனால், மகிழ்ச்சி கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா. எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடு!
—எலீசா
சீரியசுக்கு மாறும் ஆர்யா!
தன்னைச் சுற்றி யார் அமர்ந்திருந்தாலும், அவர்களை கலாய்த்து, வெறுப்பேற்றும் ஆர்யா, இப்போதெல்லாம், இருக்கிற இடமே தெரியவில்லை. எந்நேரமும், சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு திரிகிறார். இந்த அதிரடி மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால், 'இதுவரை, சின்ன பையனாட்டம் இருந்துட்டேன். அதனால் தான், சிரிப்பு கதைகளுக்கு மட்டும், என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், இனிமேல் சீரியசான கதைகளில் நடிக்க போகிறேன். அதை, இயக்குனர்களுக்கு உணர்த்தவே, இந்த சீரியஸ் முகம்...' என்கிறார் ஆர்யா.
— சி.பொ.,
பாடகரான சிவகார்த்திகேயன்!
ஹீரோக்கள், ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடினால், அப்பாடல், 'ஹிட்'டாகி விடும் என்பது, கோலிவுட்டின் சென்டிமென்டாகி விட்டது. அதனால், ஹீரோக்களை பாட வைப்பதில், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கமல், ரஜினி, விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், நகுலுக்கு அடுத்தபடியாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சிவகார்த்திகேயனும் பின்னணி பாடியுள்ளார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!