PUBLISHED ON : செப் 01, 2013

எட்டு விருதுகளுக்கு, பரதேசி பரிந்துரை!
ரெட் டீ என்னும் நாவலை தழுவி, பாலா இயக்கிய படம், பரதேசி. சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கான தேசிய விருது பெற்ற இப்படம், அக்டோபர் மாதம் லண்டனில் நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சிலி, தென்கொரியா, இந்தியா என, பல நாட்டு படங்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில், பரதேசிக்கு மட்டும், சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த வெளிநாட்டு படம், வெளிநாட்டு இயக்குனர், உள்ளிட்ட எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. லண்டன் திரைப்பட விழாவில், இந்திய படம் ஒன்று, இத்தனை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவது, இதுவே முதல் முறை.
— சினிமா பொன்னையா
கோலிவுட்டில் அஞ்சலி, படவேட்டை!
எங்கேயும் எப்போதும் படத்துக்கு பின், அஞ்சலிக்கு கமர்ஷியல் நாயகி அந்தஸ்து கிடைத்ததோடு, மேல்தட்டு ஹீரோக் களுடனும் டூயட் பாடத் துவங்கினார். பின் சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால், சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து, ஆந்திராவுக்கு சென்றவர், அங்கு சில படங் களில் நடிக்கிறார். ஆனால், தமிழில் நடித்தது போல் இல்லாமல் படத்துக்கு படம், அஞ்சலியை கவர்ச்சி பொம்மையாகவே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், லாரன்ஸ் இயக்கும், கங்கா படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியாகும் அஞ்சலி, தன் திறமைக்கு முதலிடம் கொடுத்து நடிக்க, கோலிவுட்டில் மீண்டும் பட வேட்டையை துவங்கியுள்ளார். இதற்காக அடிக்கடி கோலிவுட்டுக்கு வந்து செல்கிறார். போயும் வந்ததும் பொன்னம்பலம், திரும்பி வந்தததும் திருவம்பலம்!
— எலீசா
சந்தானத்துக்காக பேசும் ஹீரோக்கள்!
தற்போதைய மேல்தட்டு ஹீரோக் கள், சந்தானத்தின் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரை தடபுடலாக கவனிக்கின்றனர் படாதிபதிகள். ஹீரோக்களுக்கு இணையாக, தனி கேரவன் வசதி, அவர் கேட்டால் ஜோடி நடிகை என்று, அவர் என்ன கேட்டாலும், அதை உடனே நிறைவேற்று கின்றனர். அப்படியிருந்தும், தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில், கலந்து கொள் வதில்லை சந்தானம். அதனால், சில ஹீரோக்கள், ஸ்பாட்டில் சந்தானம் செய்த காமெடி கலாட்டாக்களை, மேடைகளில் பேசி, அவர் இல்லாத குறையை தீர்த்து வருகின்றனர்.
— சி.பொ.,
சிவகார்த்திகேயன் போட்ட ஆர்டர்!
எதிர்நீச்சல் படத்துக்கு பின், சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்து விட்டதால், அடுத்து, அவர் நடிக்கும், மான் கராத்தே படத்தில், ஹன்சிகா அவருக்கு ஜோடியாகி விட்டார். அதோடு, முன்னணி பட கம்பெனிகளும், போட்டி போட்டு, சிவகார்த்திகேயனை, 'புக்' செய்துள்ள னர். ஆனால், அதில் ஓரிரு படங்களில், புதுமுக நாயகிகளை, 'புக்' செய்திருந் தனர். இதை கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், 'ஹன்சிகா மாதிரி, முன்னணி நடிகைகளாக, 'புக்' செய்யுங்கள்...' என்று ஆர்டர் போட்டுள்ளார். இதனால், மொத்த முன்னணி நடிகைகளின் பெயர்களை யும் பட்டியலிட்டு, கால்ஷீட் கேட்டு வருகிறது அந்நிறுவனங்கள்.
— சி.பொ.,
ஆன்மிகத்தில் இறங்கிய குத்தாட்ட நடிகை?
ராஜ்கிரண் நடித்த, மாணிக்கம் படத்தை இயக்கிய கே.வி.பாண்டியன், தற்போது, வருசநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஜிபாலா, ஒரு பாடலுக்கு அதிரடி குத்தாட்டம் ஆடியிருந்தார். சரிந்து கிடக்கும் தன் குத்தாட்ட மார்க்கெட்டை, இப்பாடல் தூக்கி நிறுத்தும் என்றும் நம்பியிருந்தார். ஆனால், திடீரென்று படம் அதிக நீளமாக இருப்பதாக சொல்லி, அப்பாடலை படத்திலிருந்தே தூக்கி விட்டார் இயக்கு னர். இதனால், மனசுடைந்துபோன சுஜிபாலா, மீண்டும் சினிமாவில் வாய்ப்புத் தேடுவதில் ஆர்வமில்லாமல், ஆன்மிகத்தில் மனதை திருப்பியுள்ளார். அதோடு, 'நேரம் சரியில்லை' என்று சொல்லி, சில கோவில்களுக்கு சென்று, பரிகார பூஜைகளும் செய்து வருகிறார். திக்கு அற்றவருக்குத் தெய்வமே துணை!
— எலீசா
உதவியாளர்களுக்கு கண்டிஷன் போட்ட நஸ்ரியா!
சமீபகாலமாய் தமிழ் பேசும் நடிகை களுக்கே கோலிவுட் இயக்குனர்கள், நடிக்க சான்ஸ் கொடுத்து வருகின்றனர். அதனால், வடமாநிலத்தில் இருந்து வந்துள்ள தீபிகா படுகோனே, சுர்வீன் சாவ்லா போன்ற நடிகைகள் கூட, தமிழ் பயிலத் துவஙகி விட்டனர்.
இந்நிலையில், இந்தி நடிகைகளே தமிழ் பேசும் போது, மலையாள நடிகையான நாம் பேசாமல் இருந்தால், இதை காரணம் காட்டியே நம்மை ஓரங்கட்டிவிடுவர் என்று நினைத்த, நடிகை நஸ்ரியாவும் தற்போது, ஒரு தமிழாசிரியரை நியமித்து, தீவிரமாக தமிழ் பயின்று வருகிறார். அப்படி, தான் வீட்டில் படிக்கும் வார்த்தை களை, ஸ்பாட்டுக்கு வந்து உதவியாளர் களிடம் பேசி, பயிற்சி எடுக்கும் நஸ்ரியா, அவர்களை தன்னிடம் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார். பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும்.
— எலீசா
17 மொழிகளில் ஷங்கரின் ஐ!
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும், ஐ படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல வெளிநாடுகளில், படப்பிடிப்பு நடந்ததையடுத்து, தற்போது க்ளைமாக்ஸ் காட்சிகள், சென்னையில் படமாகி வருகின்றன. இதுவரை, தான் இயக்கிய படங்களை விட, இப்படத்தை இன்னும் பிரமாண்டப் படுத்தியுள்ள ஷங்கர், ரஜினி நடித்த, எந்திரன் படத்தை ஒன்பது மொழிகளில் வெளியிட்டவர், இப்போது, ஐ படத்தை 17 மொழிகளில் வெளியிடுகிறார். இந்த, 17 மொழிகளிலும் தனக்குத்தானே டப்பிங் பேச உள்ளார் விக்ரம்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
