தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...!

இதப்படிங்க முதல்ல...!

இதப்படிங்க முதல்ல...!


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூனியர் என்.டி.ஆரை இயக்கும் ஹரி!

சிங்கம் - 2 படத்தை இயக்கிய ஹரி, அடுத்து கார்த்தியை வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், சிங்கம் - 2 படத்தின் மேக்கிங்கை பார்த்து அசந்து போன, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., அதே பாணியில், தன்னை வைத்தும், ஒரு ஆக்ஷன் படம் இயக்குமாறு, ஹரிக்கு அழைப்பு விடுத்தார். அதோடு, தமிழில் வாங்குவதை விட, சில கோடிகளை உயர்த்தி தருவதாகவும் வாக்களித்தார். இதனால், தமிழில் ஒரு மாங்காய் அடிக்கிற நேரத்தில், தெலுங்கில் ரெண்டு மாங்காய் அடித்து விடலாமே என்று, பரிவாரங்களோடு ஆந்திரா செல்ல தயாராகி விட்டார் டைரக்டர் ஹரி.

— சினிமா பொன்னையா

*வாலு, வேட்டை மன்னன் படத்தையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்திற்கு, ஹன்சிகாவை ஜோடி சேர்க்க நினைத்தார் சிம்பு. ஆனால், இந்த கதைக்கு, அவர் பொருந்த மாட்டார் என்று, மறுத்து விட்டார் பாண்டிராஜ்.

*தென்னிந்திய மொழிகளில், 400 படங்களில் நடித்த வில்லன் நடிகர் சரண்ராஜ், தன் மகன் தேஜ்ராஜை, ஹீரோவாக்க கதை கேட்டு வருகிறார்.

*விளம்பரத்திற்காக, விஸ்வரூபம் - 2 என்ற பெயரில், படமெடுக்கவில்லை என்று கூறும் கமல், 'முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது...' என்கிறார்.

*விஜய்யுடன், தமிழன் படத்தில் நடித்த, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, ராம்சரணுடன் நடித்த, ஜஞ்ஜீர் என்ற படம், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகிறது.

*அஜீத்தின் 54வது படமான, வீரம், பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

*தெலுங்கு, இந்தியில் பிசியாகி விட்ட ஸ்ருதிஹாசன், ஒரு கோடியாக இருந்த தன் படக்கூலியை, தற்போது, ஒன்றரை கோடியாக உயர்த்தி விட்டார்.

* காதலை தவிர வேறொன்றுமில்லை படத்துக்காக, 'கானா' பாலா பாடிய, 'நோக்கியோ பொண்ணு... சாம்சங் பையன்' என்ற பாடலை, யு - டியூப்பில் வெளியான இரண்டே நாளில், 2.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

* எத்தன் சுரேஷ் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும், சபாஷ் மாப்பிள்ளை என்ற படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் பிந்து மாதவி.

* குழந்தைகள் நாட்டின் பொக்கிஷம் என்ற கருத்தை மையமாக வைத்து, ஜெய்ஹிந்த் - 2 படத்தை, இயக்கி, நடித்து வருகிறார் அர்ஜூன்.

* ரம்ஜானை முன்னிட்டு கேரளாவில், மம்மூட்டி நடித்த, கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி என்ற படமும், அவர் மகன் துல்கர் சல்மான் நடித்த, நீலாகாசம் பச்சக்கடல் சுவந்நபூமி என்ற படங்களும் வெளியானதில், மகன் நடித்த படம் வெற்றி பெற்றுள்ளது.

* தசாவதாரம் படத்தில், கமலுடன் நடித்த அசின், அவர் நடிக்கும், உத்தம வில்லன் படத்திலும், நடிப்பார் என்று கூறப்படுகிறது.

* ரேஸ் பிரியரான அஜீத், சமீபத்தில் பி.எம்.டபிள்யூ 1000 ஆர்.ஆர்., என்றொரு பைக் வாங்கியுள்ளார்; இதன் விலை 24 லட்சம்.

* யோகி படத்தில், ஹீரோவாக நடித்த டைரக்டர் அமீர், இப்போது, பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில், மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

* ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், அடுத்து, உதயநிதியுடன், நண்பேன்டா படத்தில் நடிக்கிறார்.

* விஷால் நடித்த, திமிரு படத்தை இயக்கிய தருண்கோபி, சரவண குடில், பேச்சியக்கா மருமகன், கன்னியும் காளையும் மற்றும் செம காதல் ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக் கிறார்.

* கஹாணி -2 படத்திலும், வித்யாபாலனே நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து, உடம்பை ட்ரிம் செய்யும் முயற்சியாக, தினமும், நான்கு மணி நேரம், 'ஜிம்'மில் பயிற்சி எடுத்து வருகிறார்.

* அழகி படத்தோடு, எடிட்டிங் செய்வதை நிறுத்தி வைத்திருந்த லெனின், மீண்டும் தங்கர் பச்சான் இயக்கியுள்ள, களாவாடிய பொழுதுகள் படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார்.

* அண்ணன் செல்வராகவன் இயக்கிய படங்களில் நடித்த போது, உதவி இயக்குனராகவும் பணியாற்றியதாக சொல்லும் தனுஷ், அடுத்த ஆண்டு, ஒரு மெகா படத்தை இயக்க, திட்டமிட்டுள்ளார்.

* விமல் நடித்து வரும், ரெண்டாவது படம் என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் மூலம், முதன் முறையாக, காமெடி ட்ராக்கில் நடித்துள்ளார் விஜயலட்சுமி.

* குங்குமப்பூவே கொஞ்சிப்புறாவே, கோரிப்பாளையம் படங்களில் நடித்த ராமகிருஷ்ணன், தற்போது, போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

லட்சுமிராய் எச்சரிக்கை மணி!

தன்னைப்பற்றி தவறான செய்தி வெளியிட்டதற்காக, ஒரு பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடு பெற்றவர் லட்சுமிராய். இருப்பினும் , அவரைப் பற்றிய தவறான செய்திகள் வெளியாவது நின்றபாடில்லை. இதனால், இந்தியா முழுவதிலும் உள்ள, தன் அபிமானிகள் மூலம் தன்னைப்பற்றி, அந்தந்த மாநிலங்களில் வெளியாகும் செய்திகளை சேகரித்து வருகிறார் . அதில், சில செய்திகளுக்கு தன், 'டுவிட்டர்' மூலம் தெளிவுபடுத்தி வரும் லட்சுமிராய், சில மீடியாக்களை நேரடியாக தொடர்பு கொண்டு எச்சரிக்கை மணியும் அடிக்கிறார்.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us