தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அகால நேரத்தில் செய்யக் கூடாதவை!

அகால நேரத்தில் செய்யக் கூடாதவை!

அகால நேரத்தில் செய்யக் கூடாதவை!


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதையும் காலாகாலத்தில் செய்வதுதான் நல்லது; அகாலத்தில் செய்யக் கூடாது. நதிகளில் ஸ்நானம் செய்வதற்குக் கூட, குறிப்பிட்ட காலங்களைச் சொல்லி இருக்கின்றனர். சூரிய அஸ்தமனத்துக்குப் பின், விடியற்காலை அருணோதயம் வரை, நதியில் இறங்கி ஸ்நானம் செய்யக் கூடாது.

அந்த நேரம், நதி தூங்கிக் கொண்டிருக்கும்; அதை கலைக்கக் கூடாது. சில நதிகளில் அந்த இரவு நேரத்தில் தேவலோக மாந்தர் வந்து நீராடுவராம். அப்போது, மனிதர்கள் அதில் இறங்கக் கூடாதாம். இங்கு ஒரு சின்னக்கதை:

பாண்டவர்கள் கங்கைக் கரையை அடைந்து, கங்கையில் இறங்கப் போயினர். முன் சென்றான் அர்ஜுனன். அந்த சமயம் நடுநிசி வேளை. நதியிலிருந்த சித்ரரதன் என்ற கந்தர்வன், கந்தர்வ ஸ்த்ரீகளுடன் ஜலகிரீடை செய்து கொண்டிருந்தான்.

பாண்டவர்கள் வருவதை பார்த்து கோபம் கொண்டு, 'யார் இந்த இடத்துக்கு இப்போது வருவது... இரவு, பகல், சந்தி, செவ்வானம் தோன்றிய 80 வினாடிகள்... இந்த காலம் தவிர மற்ற காலங்கள், காமசாரிகளான, யக்ஷ, ராட்சச கந்தர்வர்களின் காலமாகும். இந்தக் காலங்களில் கந்தர்வர்கள் தவிர வேறு யாரும் இங்கு வரக் கூடாது.

'மரியாதை தெரியாமல் மனிதர்கள் இங்கு வந்தால் ராட்சஷர்களுடன் சேர்ந்து நாங்கள், அவர்களை அடித்து, ஒழித்து விடுவோம். அதனால், விஷயம் தெரிந்த பிரம்ம வித்துக்களும், அரசர்கள் யாரும் இரவு நேரத்தில் ஜலத்தின் அருகில் வர மாட்டார்கள். நீங்களும் இங்கு வராமல் தள்ளியே நில்லுங்கள்...' என்று ஆவேசமாகப் பேசினான் கந்தர்வன்.

இதைக் கேட்ட அர்ஜுனன், 'கங்கையில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறங்கி ஸ்நானம் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் பாண்டவர்கள்; நான் அர்ஜுனன். எங்களை தடுக்க உன்னால் முடியாது; முடியுமானால் பார்...' என்றான்.

கந்தர்வனுக்குக் கோபம் வந்தது. வில்லை எடுத்து பாணங்களால் அர்ஜுனனை தாக்கினான். அர்ஜுனனும் அதையெல்லாம் தடுத்து ஆக்னேயாஸ்திரத்தால் அவனை தாக்க ஆரம்பித்தான். அதன் வெப்பம் தாளாமல் கந்தர்வன் தவிக்க, அவன் மனைவி

கும்பீனசி, அர்ஜுனனின் காலில் விழுந்து, தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்க வேண்டினாள். அவளுக்கு அபயம் அளித்து, கந்தர்வனை விடுவித்தான் அர்ஜுனன்.

தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, அர்ஜுனனைப் பாராட்டினான் கந்தர்வன். 'இருவரும் நண்பர்களாக இருப்போம்...' என்றான். அதற்கு அடையாளமாக, 'சாக்ஷûசி என்ற மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்கிறேன். இதை சித்தி செய்தால், உட்கார்ந்த இடத்திலிருந்தே மூன்று லோகங்களிலும் எதை, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ, அப்படியே பார்க்கலாம்...' என்று சொல்லி, அந்த வித்தையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து வைத்தான்.

அதற்குப் பிரதிபலனாக அர்ஜுனனிடமிருந்து, 'ஆக்னேயாஸ்திர'த்தைப் பெற விரும்புவதாகச் சொன்னான். அதன் பிறகு பாண்டவர்கள் எதற்காக, எங்கே செல்கின்றனர் என்பதை தெரிந்து, 'நீங்கள் ஒரு புரோகிதரை அண்டியிருப்பது நல்லது...' என்று சொல்லி, விடை பெற்றான்.

அகால நேரத்தில் செய்யக் கூடாதவை என்று சில விஷயங்கள் உள்ளன. அகாலத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது; அகாலத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் உண்டு. இரவு, பதினொரு மணிக்கு மேல், மறுநாள் சூரியோதயம் வரை சாப்பிட மாட்டார்கள். இதை அகாலம் என்பர்.

ஆனால், பஸ், ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அகாலம் என்பதே தெரியாது. எப்போது, எங்கே என்னென்ன கிடைக்கிறதோ, வாங்கி சாப்பிடுவர். இது போல் அகாலத்தில் சாப்பிடும் சாப்பாடு, ராட்சதர்கள், பிசாசுகளுக்குப் போய் சேருகிறதாம்; யோசித்து சாப்பிடுங்கள்.

***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

*மனிதனின் படைப்புகள் மனிதனையே அச்சுறுத்துவது ஏன்?

அவனவன் செயலே, அவனவனுக்குப் பரிசையோ, தண்டனையோ வழங்குகிறது. ஒருவன் பெற்ற பிள்ளையே, அவன் தலைக்குக் கொள்ளியாக வந்து சேர்வதில்லையா?

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us