தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமன்னாவின் சேலை விவகாரம்!

மார்க்கெட் சரிந்து கிடக்கும் நேரத்தில், எக்குத்தப்பாக சம்பளம் கேட்டால், தயாரிப்பாளர்கள், 'டென்ஷன்' ஆகி விடுவர் என்பதால், 'ஓவர்' அடக்கத்தை கடைபிடித்து வருகிறார் தமன்னா. என்னதான், கைவசம், அஜீத் (வீரம்) படம் இருந்தாலும், அடுத்தப்படியாக, தன்னை, 'புக்' செய்ய, தயாரிப் பாளர்கள் தயங்கி நிற்பதால், தற்போது, கோலிவுட்டுக்கு, ஒரு அறிக்கை விட்டுள்ளார் தமன்னா.

அதில், 'சிங்கிள் ஹீரோயினி படம் என்றால், கதாநாயகியாக மட்டுமின்றி, 'அயிட்டம்' நடிகையாக, இதுவரை நடித்ததைவிட, இன்னும், மிகச் சிறிய குட்டை பாவாடை அணிந்து, கலைச் சேவை புரிய தயாராக உள்ளேன். இதற்கான கூலியை, படாதிபதிகளே மனசாட்சிபடி நிர்ணயிக்கட்டும்...' என்று கூறியுள்ளார்.

— சினிமா பொன்னையயா

உறக்க சொல்கிறார் செல்வராகவன்!

காமெடி தான் தற்போதைய சினிமா, 'ட்ரெண்ட்' என்று கோலிவுட்டே கூறி வரும் நிலையில், 'காமெடி ஒரு போதும், 'ட்ரெண்ட்' ஆக முடியாது. கதைக்கு நடுவே தொட்டுக் கொள்ள பயன்படும் ஊறுகாயை போன்றதே காமெடி' என்று உரக்க சொல்கிறார் இயக்குனர் செல்வராகவன். மேலும், 'நான் தொட்டுக் கொள்ளக் கூட, அந்த ஊறுகாயை ஒருபோதும் பயன் படுத்தியதில்லை. காரணம், நான் கதைகளை மட்டுமே நம்பி படம் எடுக்கிறேன்... தைகளால் மட்டுமே சினிமாவில், 'ட்ரெண்ட்' உருவாக்க முடியும்...' என்கிறார்.

— சி.பொ.,



அமலாபால் ஸ்டேட்மெண்ட்!

தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து வரும் அமலாபால், ஆந்திர படங்களில் மட்டும் படுகவர்ச்சியாக நடித்துவிட்டு, தமிழ் படங்களில், இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிப்பதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கையில், 'தெலுங்கு சினிமாவில், ஹீரோயினிகளை எப்போதுமே கிளாமராகத்தான் காண்பித்து வருகின்றனர். இதற்கு, அங்குள்ள ரசிகர்களின் ரசனை தான் காரணம். அதோடு, அப்படி தாராள கிளாமர் காட்டி நடிப்பவர்களுக்கு, சம்பளத்தை யும் தாராளமாக கொடுக்கின்றனர். அதனால் தான், கிளாமருக்கு தடை போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தமிழிலும், அதே போன்று கூடுதல் சம்பளம் கொடுத்தால், தெலுங்குக்கு இணையாக, தமிழில் நடிப்பதில், எந்தவித ஆட்சே பனையும் இல்லை...' என்று, ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். காற்றுக்கு தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!

— எலீசா

மயில்சாமி கனவு நனவானது!

சிங்கம் புலி சிறுத்தை என்ற காமெடி படத்தின் மூலம், இயக்குனராகியுள்ளார் காமெடி நடிகர் மயில்சாமி. மேலும், அவருக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம், தற்போது, 45 லட்சம் ரூபாயில், ஒரு பென்ஸ் கார் வாங்கியுள்ளார். 'சினிமாவுக்கு வந்து, எத்தனையோ ஆண்டுகளாகி விட்ட போதும், கார் வாங்க, வசதி இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது ஆண்டவன் புண்ணியத்தில், நிறைய படங்கள் கிடைத்து, ஓரளவு சம்பாதித்து வருகிறேன். அதனால், என் நீண்டகால கனவான, பென்ஸ் கார் கனவு, நிறைவேறியுள்ளது...' என்கிறார்.

— சி.பொ.,

கார்த்திகாவுக்கு தாய்குலத்தின் அட்வைஸ்!

தமிழ் சினிமா உலகில், நிலைத்து நிற்க, தனக்கு, மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என, எதிர்பார்த்திருந்த, அன்னக்கொடி படம் தோல்வியடைந்ததால், ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்பது போல், கோலிவுட்டையே வெறுக்கிறார் கார்த்திகா. ஆனால், அம்மணியின் தாய்குலம் ராதாவோ, 'ஒரு படம் தோல்வி அடைந்ததை வைத்து, எதையும் முடிவு செய்து விடக்கூடாது. இதன் பின், கமிட்டாகும் படங்கள், வெற்றியை தரலாம்...' என்று, தன் அனுபவத்தை சொல்லி, கோடம்பாக்கத்தை விட்டு முழுசாக வெளியேற, தடை போட்டுள்ளார். மேலும், இதற்கு முன், டைரக்டர்களின் படங்களுக்கு, முதலிடம் கொடுக்க, மகளை அறிவுறுத்தி வந்த ராதா, இப்போது முன்னணி ஹீரோ படங்கள் பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

பில்லாவை தொடர்ந்து, அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும், ஆரம்பம் படம், ஒரு தனி மனிதனின் போராட்டத்தை, மையக் கருவாக கொண்டு, உருவாகியுள்ளது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us