தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமிதாப் பச்சன் படத்தில் இளையராஜா!

தமிழில், ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து, பிரகாஷ்ராஜ் இயக்கும், உன் சமையல் அறையில் உட்பட, சில படங்களுக்கு, இசையமைக்கும் இளையராஜா, அனுஷ்கா நடிக்கும், ராணி ருத்ரம்மா தேவி படத்திற்கு, தற்போது, இசையமைத்து வருகிறார். இதையடுத்து, இந்தியில், அமிதாப் பச்சன் - ஷாருக்கான் இணையும் படத்திற்கு, இளையராஜா இசையமைத்து வருகிறார். இதற்கு முன், தான் நடித்த, சீனி கம் மற்றும் பா ஆகிய படங்களுக்கு, இளையராஜா அற்புதமாக இசையமைத்ததாக கூறிய அமிதாப் பச்சன், 'இந்த படத்திற்கும் அவரையே இசையமைக்க வைக்க வேண்டும்...' என்று, பிரத்யேகமாக கேட்டுக் கொண்டார். அதன்பின், அப்பட வாய்ப்பு, இளையராஜாவுக்கு கிடைத்தது.

— சினிமா பொன்னையா

இளவட்ட ஹீரோக்களை குறி வைக்கும் நயன்தாரா!

அனாமிகா படத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு, தெலுங்கில் இன்னமும் நல்ல மவுசு உள்ளது. அதனால், தமிழைப் போலவே, தெலுங்கிலும், தனி கவனம் செலுத்த போவதாக கூறுகிறார். அதே சமயம், நாகார்ஜூனா போன்ற வயதான ஹீரோக்களை விட, அவரது மகன் நாக சைதன்யா மற்றும் ராம்சரண் தேஜா போன்ற, இளவட்ட ஹீரோக்களின் படங்களாக எதிர்பார்க்கிறார். அதன் காரணமாக, தன் உடம்பிலும், முகத்திலும் தெரியும் மெச்சூரிட்டியை குறைக்க, தற்போது ஸ்லிம்மாகியுள்ள நயன்தாரா, முக அழகு பாதிக்காத அளவுக்கு, இன்னும் உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

— எலீசா

படாதிபதிகளை அதிரவைத்த எமி ஜாக்சன்!

மதராசப்பட்டினம் மற்றும் தாண்டவம் படங்களில் நடித்த எமி ஜாக்சன், ஐ படத்திற்கு பின், தன் படக்கூலியை தாறுமாறாக உயர்த்தி விட்டார். இதனால், அடுத்தபடியாக அவரை, 'புக்' செய்ய சென்ற படாதிபதிகள், அதிர்ச்சியில் பின் வாங்கி விட்டனர். ஆனால், எமியுடன் ஜோடி சேர ஆசைப்படும் சில மேல்தட்டு ஹீரோக்களோ, சம்பள உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு, அவரை கேட்டுக் கொள்வதோடு, இது ஒன்றும் ஹாலிவுட் சினிமா இல்லை; கோலிவுட் சினிமா என்றும், அவருக்கு புரிய வைத்து, தொடர்ந்து தமிழில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை, மேற்கொண்டு வருகின்றனர். காணாததை கண்டாற் போல்!

— எலீசா

ராம்கோபால் வர்மாவின் தாதாயிஸம்!

ரத்த சரித்திரம் படத்தையடுத்து, ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம், நான்தான்டா இந்த படத்தையும் வழக்கம் போல், தாதா சம்பந்தப்பட்ட கதையிலேயே இயக்கியுள்ள அவர், 'தொடர்ந்து, தாதா கதைகளை படமாக்க காரணம், என் சிறுவயதில் சில தாதாக்களையும், அவர்களின் வன்முறைகளையும், நேரில் பார்த்ததால், அந்த விஷயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனால், என் படங்கள் காதல் கதையில் உருவானாலும், அதிலும், என்னையுமறியாமல் தாதாயிஸம் ஒட்டிக் கொள்கிறது...' என்கிறார்.

— சி பொ.,

அமலாபாலுக்கு புதிய தலைவலி!

காஜல் அகர்வால், தமன்னா என்று, பல மேல்தட்டு நடிகைகளுக்கு சவாலாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். ஆனால், அப்படிப்பட்ட அவரையே, இந்தி, ரமணா ரீ - மேக் படத்திலிருந்து வெளியேற்றி விட்டார் அமலாபால். இதனால், சொல்ல முடியாத கோபத்தில் இருக்கும் ஸ்ருதி, 'அமலாபாலை பாலிவுட்டில் நீடிக்க விடக் கூடாது...' என்று, தனக்கு தானே தீர்மானம் நிறைவேற்றியிருப்பவர், அடுத்தடுத்து அவர் முயற்சி எடுக்கும், தெலுங்கு, இந்தி படங்களுக்கு, தானும் அப்ளிகேஷன் போட்டு, அமலாவுக்கு புதிய தலைவலியை கொடுத்து வருகிறார். வந்தது சண்டை; இறக்கடி கூடையை!

— எலீசா

ஹீரோக்களுக்கு சந்தானம் சிபாரிசு!

இப்போதெல்லாம், படத்திற்கான ஹீரோ யார் என்று, முடிவு செய்யும் முன்பே, சந்தானத்திடம் தான், சில இயக்குனர்கள் கால்ஷீட் கேட்பதாக கூறப்படுகிறது. அப்படி செல்லும் போது, தனக்கு பிடித்தமான ஹீரோவுக்கு, சந்தானம் சிபாரிசு செய்வதாக கூறுகின்றனர். ஆனால், இதுபற்றி, சந்தானத்தை கேட்டால், 'நான் பிசியாக இருப்பதால், என்னிடம் முதலில், கால்ஷீட் கேட்பது உண்மை தான். ஆனால், ஹீரோக்களை நான் முடிவு செய்வதில்லை. அது, என் வேலையும் இல்லை. அதேசமயம், என் காமெடி, எந்தெந்த ஹீரோக்களுக்கு மேட்சாகிறதோ, அவர்களை மனதில் வைத்தே, இயக்குனர்கள், 'ஸ்கிரிப்ட்' தயார் செய்கின்றனர். அதனால் தான், ஆர்யா, கார்த்தி, சிவா, உதயநிதி ஆகியோர் படங்களில், தொடர்ச்சியாக நான் நடிக்கும் சூழல் அமைகிறது...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us