தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணாதுரை, புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி, நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் இருந்த போது, அவரை சந்தித்தேன். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். ஓய்வெடுத்துக் கொள்ளும் யோசனையை கைவிட்டு விட்டதாக தெரிவித்தார். அதற்கு, அவர் சொன்ன காரணம், என்னைத் திடுக்கிடச் செய்தது.

'என்னுடைய கட்சி, நான் விரும்பியதற்கு முன்பே ஆட்சிக்கு வந்துவிட்டது. நான், இன்னும் சில காலத்திற்கு பின் தான், ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். கட்சியில், லஞ்ச ஊழல் பரவி விட்டது. நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்நிலையில், இதை சீர்படுத்தும் நிலையில் நான் இல்லை. எனவே, பணியாற்றிக் கொண்டே உயிர் நீத்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன்...' என்று, ஆங்கிலத்தில் அவர் கூறியதை, வேதனையோடு கேட்டேன்.

மாற்றுக் கட்சியினராகிய என்னிடத்தில், கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், தோழமை உணர்வு டன், அவர் தன் வேதனையை பகிர்ந்து கொண்டதன் மூலம், அவருக்கு ஆறுதல் கிடைத் திருக்கலாம்.

— மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் சென்ற தலைவர், பி.ராமமூர்த்தி எழுதிய, 'ஆரிய மாயையா, திராவிட மாயையா?'நூலிலிருந்து.

புகையிலை விற் பனையை, தடை செய்தது நம் மாநில அரசு. அது, உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால். ஆனால், மது குடிக்கலாம். பொது இடத்தில், சிகரெட் புகைத்தால் குற்றம்; அபராதம். காரணம், அது சுகாதாரக் கேடு. ஆனால், மது குடித்து, பொது இடத்தில், வாந்தி எடுத்தால் பரவாயில்லை. புகையிலை பற்றி, தமிழறிஞர் கி.வா.ஜ., ஒரு கட்டுரை எழுதினார். அதில், ஒரு பகுதி:

பழனியில், தண்டாயுதபாணிக்கு, அர்த்த ஜாமத்துப் பூஜையில், புகையிலையையோ, சுருட்டையோ நிவேதனம் செய்வதாக சொல்கின்றனர். அதன் உண்மை, எனக்கு தெரியும். புகையிலையை, ஒரு புலவர், பழனியாண்ட வரிடம் தூது போகும்படி பாடியிருக்கிறார். அதற்கு, 'புகையிலை விடு தூது' என்று பெயர். அதை, உ.வே.சா., பதிப்பித்திருக்கிறார். புகையிலையின் பெருமைகளை, அந்தச் சிறுநூல் அழகாக சொல்கிறது.

ஒரு அரசன், பல்லக்கில் போய் கொண்டிருந்தானாம். அவன் புகையிலை போடும் பழக்கம் உள்ளவன். சாலையில், பயணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று, புகையிலை போட ஆசை வந்தது. ஆனால், கைவசம் புகையிலை இல்லை. அருகே, வயலில் உழுது கொண்டிருந்த உழவன் ஒருவன், வெற்றிலை பையை அவிழ்த்து, புகையிலை போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மன்னன், பல்லக்கை நிறுத்தச் சொல்லி, அவனிடம் சென்று, புகையிலையை கேட்டு, கை நீட்டி வாங்கி, போட்டு கொண்டானாம். நாட்டை காக்கும் மன்னனும், மாட்டை ஓட்டும் உழவனும், புகையிலைக்கு முன் சமமாகி விட்டனர்.

மன்னன் என்ன... வாக்கு சாதுர்த்தியம் உள்ள புலவர்களானாலும், அப்படித் தான் செய்வர். சொற்களை சமத்காரமாகப் பேசி, தம் புலமையை மிடுக்குடன் காட்டுபவராக இருந்தாலும், புகையிலை தேவை எனும் போது, இன்னார், இனியார் என்று பாராமல், யாரிடமும் கை நீட்டி, பல்லைக் காட்டி விடுவர். புகையிலை அப்படி செய்து விடுமாம். 'புகையிலை விடு தூது' அந்த காட்சியை, அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.

'சொல் காட்டுவும் நல்ல

துடிகாரர் ஆரையும் போய்ப்

பல் காட்ட வைத்த பழிகாரா!'

'பழிகாரா' என்பது, செல்லமாக தட்டிக் கொடுத்து, உணர்ச்சியோடு சொல்லும் வார்த்தை. 'அட போக்கிரி' என்று, நம்முடைய குழந்தையை தட்டிக் கொடுத்து சொல்கிறோம் அல்லவா... அதுபோல!

***

பிரபல, பத்திரிகை பிரியரான, குல்தீப் நய்யார், 'பிட்வீன் த லைன்ஸ்' எனும், சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டார். அந்த நூலை, டில்லியை அடுத்த, சிறிய ஊரான, குர்கானை சேர்ந்த, ஒரு சாதாரண,பெயர் தெரியாத, டீக்கடைக்காரருக்கு அர்ப்பணித்துள்ளார். காரணம், நம் நாட்டு பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு உள்ளதை விட, அதிக புத்தி கூர்மையும், அரசியல் ஞானமும், அந்த டீக்கடைக்காரருக்கு, அதிகம் இருப்பதாக கூறுகிறார், குல்தீப் நய்யார்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us