sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 15, 2013

Google News

PUBLISHED ON : டிச 15, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயசேதுபதி படக்கூலியை உயர்த்தும் படாதிபதிகள்!

மேல்தட்டு ஹீரோக்களை வைத்து, 50 மற்றும் 60 கோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரித்தால், போட்ட பணத்தை எடுப்பதற்கே தடுமாறுகின்றனர் படாதிபதிகள். ஆனால், விஜயசேதுபதி நடிப்பில், ஐந்து கோடி ரூபாய் செலவு செய்து படமெடுத்தால், 30, 40 கோடியை எளிதில் வசூலித்து விடுகின்றனர். அதனால், அவரிடம் கால்ஷீட் கேட்டு, முன்னணி படாதிபதிகளே காத்திருக்கின்றனர். அதோடு, தங்களுக்கு முன்கூட்டியே கால்ஷீட் தர வேண்டும் என்பதற்காக, விஜய சேதுபதியின் படக்கூலியை, படாதிபதிகளே போட்டி போட்டு, உயர்த்தி வருகின்றனர்.

- சினிமா பொன்னையா

அனுஷ்காவுக்கு ஆறு மாதம் பயிற்சி!

இரண்டாம் உலகம் படத்தையடுத்து, தமிழ், தெலுங்கில் உருவாகும், ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி ஆகிய சரித்திர கால படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில், ருத்ரம்மா தேவி படத்தை முடித்து விட்டவர், இப்போது, பாகுபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்தப் படத்தில், இரண்டு நாட்டுப் படைகளும் மோதிக் கொள்ளும், யுத்த காட்சி உள்ளது. இதற்கான, சண்டை பயிற்சியில் கலந்து கொள்ளும் இரண்டாயிரம் போர் வீரர்களுடன், அனுஷ்காவுக்கும் ஆறு மாதம், பழங்கால வினோதமான, போர்க்கள சண்டை பயிற்சிகளை கொடுத்துள்ளார் டைரக்டர் ராஜமவுலி. போட்டால் முளைக்கும், பொழுது விடிந்தால் காய்க்கும்!

- எலீசா

கவுண்டமணி ரோலில் சந்தானம்!

மாஜி நாயகன் கார்த்திக், தான் நடித்து, சூப்பர் ஹிட்டான, உள்ளத்தை அள்ளித் தா படத்தின், ரீ - மேக்கில், மகன் கவுதமை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சி, 'ஒர்க்-அவுட்' ஆகும் போது, அப்படத்தில், தன்னுடன் கவுண்டமணி நடித்த கேரக்டரில், இப்போது,சந்தானத்தை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

- சி.பொ.,

ஸ்ரீதிவ்யா பக்கம் சாயும் கமர்ஷியல் இயக்குனர்கள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, பென்சில், ஈட்டி மற்றும் வீரன் தீர சூரன் என, பல படங்களை கைப்பற்றி, 'பிசி' நடிகையாகிக் கொண்டிருக்கிறார். அதோடு, லட்சுமி மேனன், நஸ்ரியா போன்ற, நடிகைகள், 'மிதமான கவர்ச்சி காட்டி கூட நடிக்க மாட்டேன்...' என்று கண்டிஷன் போட்டு வருவதால், தாராள கவர்ச்சிக்கு தயாராக நிற்கும் ஸ்ரீதிவ்யா பக்கம், கமர்ஷியல் இயக்குனர்கள் சாய்ந்து கொண்டிருக்கின்றனர். காற்றுக்கு தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!

- எலீசா

அக் ஷரா ஹாசனும் நடிகையானார்!

கமலின் இரண்டாவது மகளான அக் ஷராவும், இப்போது நடிகையாகி விட்டார். இந்தியில், அமிதாப்பச்சனுடன் இணைந்து, தனுஷ் நடிக்கும் படத்தில், அக் ஷரா தான் நாயகி. இப்படத்தில், தனுஷூக்கு ஜோடியாக, அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார் அக் ஷரா ஹாசன்.

- எலீசா

கிளாமர் ஆல்பத்தை சுற்றலில் விட்ட நமீதா!

'மச்சான்ஸ்' நடிகை நமீதாவுக்கு, இளமை ஊஞ்சல் படத்தில், தீவிரவாதிகளிடமிருந்து நடிகைகளை காப்பாற்றும் அதிரடி போலீஸ் வேடம் கொடுத்திருக்கின்றனர். அதனால், 'அடுத்த விஜயசாந்தி ஆகப் போகிறேன். அதே சமயம், என்னோட, 'பிராண்ட்' கிளாமர் வேடங்களையும் விடுவதாக இல்லை. கிளாமருக்கு எப்போதுமே நான் தயார் தான்...' என்று கூறி, உடல் எடையை குறைத்து, சமீபத்தில் எடுத்த கிளாமர் ஆல்பம் ஒன்றையும், இங்குள்ள இயக்குனர்களின் பார்வைக்கு, சுற்றலில் விட்டுள்ளார். கற்ற வித்தையை, காய்ச்சிக் குடிக்கிறவன் போல்!

- எலீசா

தெனாலிராமனுக்காக மெனக்கெடும் வடிவேலு!

ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலு, இதற்கு முன், தான் நடித்த, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை காட்டிலும், இப்போது, நடித்து வரும் படம், பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, காமெடி காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இதற்கு முன், தான் நடித்த காட்சிகள், பேசிய டயலாக்குகள் எதுவும் இப்படத்தில் தென்பட்டு விடக் கூடாது என்பதற்காக, தன் காமெடி இலாகாவில் உடனிருந்தவர்களையும் கூடவே வைத்துள்ளார். மேலும், தெனாலிராமன் பற்றி, யார் புதிய தகவல்கள் கொடுத்தாலும், அலட்சியம் செய்யாமல், கேட்டு, தன் கதாபாத்திரத்தில் அதை வெளிப்படுத்துகிறார்.

- சினிமா பொன்னையா

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us