sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 02, 2014

Google News

PUBLISHED ON : மார் 02, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏ.ஆர்.முருகதாசின் உளவுத்துறை!

துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, கோல்கட்டாவில் தொடங்கப்பட்டு, இப்போது சென்னையில் நடக்கிறது. இந்நிலையில், அப்படத்தின் கதை, இணையதளங்களில் பரவி விட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த முருகதாஸ், அவசரகதியில், கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின், படத்தின் கதையை ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருக்கும் முருகதாஸ், படத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்களை கூட கண்காணிக்க ஒரு சீக்ரெட் உளவுத்துறையை நியமித்துள்ளார்.

சினிமா பொன்னையா

ஹன்சிகா ஐதராபாத் முகாம்!

லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா போன்ற புதிய நடிகைகளின் அதிரடி பிரவேசத்தால், அரை டஜன் படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, வெறும், மூன்று படங்களோடு களத்தில் உள்ளார். அப்படி நடிக்கும் படங்களும், மார்க்கெட் இல்லாத ஹீரோக்களின் படங்கள். அதனால், மீண்டும் தெலுங்கில் கவனத்தை திருப்பியுள்ள ஹன்சிகா, மகேஷ்பாபு, ரவி தேஜா போன்ற ஹீரோக்களின் பட வாய்ப்புகளை கைப் பற்றியுள்ளார். அதனால், சென்னையில் முகாமிட்டி ருந்த ஹன்சிகா, அடுத்து ஐதராபாத்துக்கு முகாமை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இட்ட அடி கொப்புளிக்க, எடுத்த அடி தள்ளாட!

எலீசா

ஆதரவு திரட்டும் ப்ரியா ஆனந்த்!

வணக்கம் சென்னை படத்தையடுத்து, அதர்வாவுடன், இரும்புக் குதிரை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி படங்களில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த், இப்படங்களில், தன் முந்தைய படங்களை விட, வெயிட்டான நடிப்பைக் கொடுத்துள்ளார். அதனால், தன் பர்பாமென்ஸ் மீது, போதிய நம்பிக்கை இல்லாமல், தன்னை நிராகரித்து வந்த சில டைரக்டர்களிடம், தன் நடிப்பாற்றல் பற்றி விசாரித்து விட்டு, தனக்கு, சான்ஸ் தருமாறு கேட்டுக் கொண்டு வருகிறார். மேலும், 'நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள்...' என்று கொடுத்து வந்த பில்டப்களை விட்டொழித்து, புடவையில் சென்று, 'நான் தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ற நடிகை...' என்று, ஆதரவு திரட்டி வருகிறார் ப்ரியா ஆனந்த். பாம்பு தின்கிற ஊரிலே போனால், நடு முறி நமக்கு என்று இருக்க வேண்டும்!

எலீசா

படாதிபதிகளை அதிரவைத்த ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா, புது வரவு நடிகை என்பதால், அவரது படக் கூலி, குறைவாக இருக்கும் என்று, பென்சில், நகர்புறம் மற்றும் காட்டுமல்லி ஆகிய படங்களில், அவரை, 'புக்' செய்தனர். ஆனால், அந்த படங்களில் அடக்கி வாசித்த ஸ்ரீதிவ்யா, தற்போது, புதிய படங்களில் நடிக்க, 30 முதல் 40 லட்சம் வரை, சம்பளம் கேட்கிறார். அதேசமயம், ஹீரோ வேல்யூ கொண்ட படமாக இருந்தால், ஐந்து லட்சம் ரூபாய் குறைத்துக் கொள்கிறார். ஒரு படமே ரிலீசாகியுள்ள நிலையில், இப்படி, அதிரடியாக படக் கூலியை உயர்த்திப் பிடிப்பதால், ஸ்ரீதிவ்யாவை முற்றுகையிட்ட, பட்ஜெட் படாதிபதிகள், பலத்த அதிர்ச்சியில் நிற்கின்றனர். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!

எலீசா

தனித்தனி பாதையில் சந்தானம்- சூரி!

ஆரம்ப காலத்தில் மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்துவந்த, 'பரோட்டா' சூரி, இப்போது சந்தானம் பாணியில், சோலோ காமெடியனாக நடிக்கத் துவங்கி விட்டார். இந்நிலையில், சசிகுமார் நாயகனாக நடித்துள்ள, பிரம்மன் படத்தில், சந்தானம், சூரி இருவரையும் இணைக்க எடுத்த முயற்சி தோற்று விட்டது. இருப்பினும், படத்தின் முதல் பாதியில் சந்தானத்தையும், இரண்டாவது பாதியில் சூரியையும் நடிக்க வைத்துள்ளனர். ஆக, இருவரும் படப்பிடிப்பில் கூட, ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. அதோடு, படத்தின் பிரஸ் மீட்டில் கூட சந்தானம் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிந்த பின்னரே, தான் கலந்து கொள்வதாக கூறினார் சூரி. அந்த அளவுக்கு தொழில் போட்டி அவர்களை எதிரும், புதிருமாக்கி விட்டது.

சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

மீண்டும் அந்த, சேட்டை நடிகருடன், தன் காதல் தோழி, டூயட் பாட கமிட்டாகியிருப்பதால், மூடு அவுட்டில் இருக்கிறார் விரல் வித்தை நடிகர். இதனால், நடிகையின் நடவடிக்கைகளை உளவு பார்க்க, தன் சார்பில் ஒருவரை, அந்தப் படத்தில் பணியமர்த்தி உள்ளார் நடிகர். பிக்கப் நடிகருடன், காதல் தோழி பேசுவது, பழகுவது என, ஒவ்வொன்றையும், அவர் மூலம் உடனுக்குடன் அறிந்து கொண்டு வரும் விரல் வித்தை, மேற்படி நடிகருடன், அம்மணி அதிகமாக கடலை போட்டால், உடனே போன் செய்து, அவர்களின் கனெக் ஷனை கட் செய்து விடுகிறார்.

லட்டு கூட்டணி, மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். அப்படத்தில் நடிக்கும் வடக்கத்திய நடிகை, பட நாயகனை ஓரம்கட்டிவிட்டு, இன்னொரு ஹீரோவாக நடிக்கும் அந்த வாசனை காமெடியனுடன், எந்நேரமும் உறவாடுகிறார். இதில் உருகிப்போன காமெடியன், தன்னை, 'புக்' செய்ய வரும் படாதிபதிகளிடம், லட்டு நடிகைக்கும் சான்ஸ் கொடுக்குமாறு கட்டளை போட்டு வருகிறார். அதே சமயம், தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், நடிகைக்கு கால்கட்டு போட்டுள்ளார்

காமெடியன்.

துணை முதல்வர் படத்தை இயக்கி வரும் கே.பாக்யராஜ், மலேஷிய தமிழர்கள் உருவாக்கியுள்ள, கவுதம் கனி கிரேஸ் என்றொரு படத்தில், விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

நான் வித்தியாசமான ஹீரோ என்று சொல்லிக் கொண்டு, டபுள் ஹீரோ சப்ஜெக்டுகளுக்கும் முன்னுரிமை கொடுத்த விஜயசேதுபதி, இனி, தன்னை முதன்மைப்படுத்தும் கதைகளில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us