PUBLISHED ON : ஏப் 13, 2014

விஜய்யின் குத்து தத்துவம்!
சமீபகாலமாக சில படங்களில் அரசியல், 'பஞ்ச் டயலாக்' பேசி வந்த விஜய், தலைவா படத்திற்கு பின், அதற்கு மூடுவிழா நடத்தி விட்டார். அதையடுத்து இனி, படத்துக்கு படம், வாழ்க்கையின் தத்துவங்களை பாடல் வடிவில் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், கத்தி படத்தில், ஓப்பனிங் பாடலில் நிறைய தத்துவ முத்துக்களை உதிர்க்கும் விஜய், இதேபோல் இனி, படத்துக்கு படம், அனைத்து ஓப்பனிங் குத்துப்பாடல்களிலும், வாழ்க்கை தத்துவங்களை கலந்து, பாடல் எழுத, பாடல் ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
சமீபகாலமாக, காஜல் அகர்வாலை, தொழிலதிபர்களுடன் இணைத்து, காதல் செய்திகள் பரவுவது, அதிகமாகி விட்டதால், செம டென்ஷனில் இருக்கிறார் அம்மணி. அதனால், அது குறித்து, மீடியாவினர் யாராவது அவரது வாயைக் கிண்டினால், 'நடிகை என்றாலும், நாங்களும் மனுஷிகள் தான்; எங்களுக்கும், எல்லாரையும் போன்று அன்பு,பாசம், காதல் என, எல்லா உணர்வுகளும் உண்டு. நீங்கள் சொல்வது போன்று, நிஜமாகவே, நான் தொழிலதிபரை காதலித்தாலும், அது, ஒன்றும் பெரிய கொலை குற்றம் இல்லை. அதை ஏன் இப்படி பெருசுபடுத்தி, என் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்...' என்று சீறுகிறார். தன் நோய்க்கு தானே மருந்து!
—எலீசா
இரண்டு வேடங்களில் அமலாபால்!
சுப்ரமணியபுரம், நீர்ப்பறவை, சாட்டை போன்ற படங்களில் நடித்த டைரக்டர் சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்தில், ஜெயம்ரவியை நடிக்க வைத்தவர், அடுத்த படத்திலும் முன்னணி ஹீரோவை தான் நடிக்க வைப்பார் என்று பார்த்தால், அவரே ஹீரோ அவதாரம் எடுத்து விட்டார். த்ரில்லர் கதையில் உருவாகும் அப்படத்துக்கு, கிட்ணா என்று பெயர் வைத்திருக்கும் அவர், அமலாபாலையே மீண்டும் ஹீரோயினி ஆக்கியுள்ளார். அதோடு, முதன்முறையாக, அவரை இரண்டு வேடங்களிலும் நடிக்க வைக்கிறார். அதனால், தன் கெட்டப் மற்றும் பாடி லாங்குவேஜையும், நடிகர்களுக்கு இணையாக மாற்றி நடிக்கிறார் அமலாபால். வந்ததை வரப்படுத்தடா, வலக்காட்டு ராமா!
— எலீசா
இளையராஜாவின், ஆயிரமாவது படம்!
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளரான இளையராஜா, இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆறு நாட்களில், 12 படங்களுக்கு இசையமைத்துக் கொடுக்கும் அளவுக்கு, வேகத்தை கடைபிடித்த இளையராஜா இதுவரை, 999 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவரது, ஆயிரமாவது படமாக பாலா இயக்கும், தாரை தப்பட்டம் என்ற படம் இடம்பெற்றுள்ளது. அதனால், ஏற்கனவே தான் இசையமைத்த படமான, கரகாட்டகாரன் படத்துக்கு இணையாக, இந்த கரகாட்ட படத்திற்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து, தமிழக ரசிகர்களை தன்பக்கம் இழுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார், இளையராஜா.
— சி.பொ.,
நயனுக்கு பீதியை கொடுக்கும் ஹன்சிகா!
சிம்புவை, காதலிப்பதாக ஹன்சிகா அறிவித்தபோது, தெறித்து ஓடிய பல ஹீரோக்கள், இப்போது அவர் சிம்புவை பிரிந்து, சிங்கிளாகி விட்டார் என்றவுடன், உறவாடத் துவங்கி விட்டனர். அதனால், ஹன்சிகாவின் பாசறைக்குள், இளவட்ட ஹீரோக்களின் கூட்டம், பொங்கி வழியத் துவங்கியுள்ளது. அதனால், தற்போது ஆர்யாவுடன், மீகாமன் படத்தில் கமிட்டாகியுள்ள ஹன்சிகா, ஜெயம் ரவியுடன், ரோமியோ ஜுலியட் என்ற படத்திலும் இணைந்து விட்டார். இதைத் தொடர்ந்து, மேலும் சில இளவட்டங்களுக்கும் குறி பார்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த அதிரடி பட வேட்டை, முன்னணியில் இருக்கும் நயன்தாராவுக்கு, வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஒருத்தர் போன வழி ஒருத்தர் போவது இல்லை.
— எலீசா
கமல் படத்தில் ரஜினி!
அபூர்வ ராகங்கள் படத்தில் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினி, அதையடுத்து, கமல் நடித்த பல படங்களில் வில்லனாக, காமெடியனாக நடித்து, பின் ஹீரோவானார். அதையடுத்து, இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடிக்காத கமல்-ரஜினி இருவரும் தற்போது, உத்தம வில்லன் படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தில், அவரது குருநாதர் கே.பாலசந்தரும், நடித்திருப்பதால், ரஜினியும், ஒரு காட்சியில் தோன்றுகிறார். இந்த காட்சியை, வீடியோ கான்பரன்சிங் கொண்டு படமாக்குகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பரதேசி டைரக்டரின் கரகாட்ட படத்தில், சிவாஜி கேர்ள் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், திமிரு நடிகர் குறுக்கிட்டு, நாட்டாமையின் வாரிசுக்கு சிபாரிசு செய்து விட்டார். இதனால், கைக்கு எட்டியதை, வாய்க்கு எட்டாமல் செய்து விட்டாரே என்று, ஆத்திரமடைந்த நடிகை, அவருக்கு போன் போட்டு, கிழி கிழி என்று கிழித்து விட்டார். இதனால், இனி நடிகைகள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார், திமிரு நடிகர்.
தன், விஷால் பிலிம் பேக்டரி மூலம், அடுத்து, விக்ராந்த் நடிக்கும் படமொன்றை, தயாரிக்கிறார் விஷால்.
ஸ்ரீ ராமானுஜம் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, முன்னணி ஹீரோக்களுடன் குத்தாட்டமாட, கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
