தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருத்து சொல்ல வரும் அர்ஜுன்!

ஜெய்ஹிந்த்-2 படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வரும் அர்ஜுன், படத்தில், கமர்ஷியல் மட்டுமன்றி, ஒரு நல்ல கருத்தையும் வெளிப்படுத்த உள்ளார். ஒரு நாடு, வல்லரசாக, பணம் மட்டுமன்றி, கல்வி வளர்ச்சியும் முக்கியம்; கல்வி அறிவு அதிகமாக உள்ள நாடுகள் மட்டுமே, வல்லரசாக முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து, இப்படத்தை இயக்கி வருகிறார். அதோடு, தன் சொந்தப் படம் என்பதற்காக, கஞ்சத்தனம் செய்யாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று, படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

சினிமா பொன்னையா

ராசியான நடிகை லட்சுமி மேனன்!

லட்சுமி மேனன் பெரிய பர்சனாலிட்டி கொண்ட நடிகை இல்லை என்ற போதும், அவர் நடிக்கிற படங்கள் எல்லாமே ஹிட்டாவதால், முன்னணி ஹீரோக்கள் கூட, அவருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், சித்தார்த், விஷாலை தொடர்ந்து, தனுஷ், ஆர்யா போன்ற நடிகர்களும், விரைவில் லட்சுமிமேனனுடன் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இதனால், கோடம்பாக்கத்தில் லட்சுமி மேனன் மார்க்கெட்டும், படக்கூலியும் மின்னல் வேகத்தில் எகிறி நிற்கிறது. அதிர்ஷ்டம் வந்தால், தவிட்டு பானையிலும் தனம் இருக்கும்!

எலீசா

அஜித் படத்தில், ஹாலிவுட் கேமராமேன்!

கடந்த சில மாதங்களாகவே, தன் உடல் எடையை குறைக்க, ஜிம்னாஸ்டிக்கே கதியென்று கிடந்த அஜித், தற்போது, தன் புதிய பட வேலைகளில் இறங்கி விட்டார். கவுதம் மேனன் இயக்கும் அப்படத்துக்கு, இன்னும் டைட்டில் முடிவு செய்யவில்லை. அதே சமயம், படத்தை பிரமாண்டமாக கொடுக்க வேண்டும் என்று, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, மேன் மேகர்தர் என்ற, கேமராமேனை, 'புக்' செய்துள்ளார். இவர், தன் தொழில் நுட்பத்தால், அஜித்தின் இரண்டு விதமான கெட்டப்புகளுக்கும், புதிய வடிவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார். இந்த மேன் மேகர்தர் தான், சிம்பு நடித்து வரும், சட்டென்று மாறுது வானிலை படத்திற்கும், ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சி.பொ.,

சந்தானத்தை தவிர்க்கும் ஹீரோக்கள்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், முழு நேரக் கதாநாயகனாகி விட்டார். அதோடு, தற்போதைய இளவட்டங்களுக்கு இணையாக, தானும் கதாநாயகியுடன் ரொமான்டிக் குத்தாட்டமும் போட்டுள்ளார். இப்படி காமெடியன் சந்தானம் திடுதிப்பென்று கதாநாயகனாகி விட்டதால், இதுவரை தங்கள் படங்களில் சந்தானத்தை இணைத்துக் கொண்டு வந்த நடிகர்கள், தற்போது அவரை ஓரங்கட்டத் துவங்கிவிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சந்தானம், தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஆசையில்லை என்று அவர்களிடம் சொல்லி, மீண்டும் தனக்கு காமெடி வாய்ப்பு தருமாறு கேட்டு வருகிறார்.

சி.பொ.,

விஜய் படத்தில், 'கசமுசா!'

விஜய்யின், கத்தி படத்தை தயாரித்து வரும் ஐங்கரன் பிலிம்ஸ், பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிக் கொண்டதால், லைகா மொபைல்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை பார்ட்னராக சேர்த்துக் கொண்டது. ஆனால், 'இந்த நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவுக்கும் இடையே, பல தொழில் முறை உறவு இருப்பதாகவும், அதனால், கத்தி படத்துக்கு, ராஜபக் ஷேவும் மறைமுக பார்ட்னராகியுள்ளார்...' என்று, சில தமிழ் அமைப்புகள் கொடி பிடித்தன. இதனால், பலத்த அதிர்ச்சியடைந்த விஜய், உடனடியாக, அந்த பார்ட்னரை விலக்கி விட, ஐங்கரன் பிலிம்சை கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தமிழ் அமைப்புகளுக்கு, விஜய் மீதான கோபம் தணிந்துள்ளது.

சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தான் காதலிக்கும் நடிகருடன், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், சினிமாவில் தான் மென்மேலும் வளர வேண்டும் என்பதற்காகவும், பூஜை பரிகாரங்களை செய்து வருகிறார், பாணா காத்தாடி நடிகை. அதனால், மாதம் ஒரு கோவிலுக்கு சென்று விசேஷ பூஜை, பிரார்த்தனை என்று நடத்தி வரும் அம்மணி, தான் நடித்து சம்பாதிப்பதில் பெருந்தொகையை, இப்படி பூஜை பரிகாரங்களுக்கே செலவிட்டு வருகிறார்.

நடன சூறாவளியை விட்டு பிரிந்த போது, விரக்தியில் இருந்த தாரா நடிகை, மனதை ரிலாக்ஸ் செய்ய, போதை வசமானவர், இப்போது, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், எந்நேரமும் பாட்டிலும், கையுமாகத் தான் இருக்கிறார். அம்மணியின் இந்த வீக்னசை தெரிந்து கொண்ட விரல் வித்தை நடிகர், பார்ட்டி வைத்து, அடிக்கடி

நடிகையை கவிழ்த்து வருகிறார்.

ராணா நடிகரிடமிருந்து, மூனுஷா நடிகையை முற்றிலுமாக பிரித்து விட்டதாகத்தான், நடிகரின் பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்படி நடிகரை சந்திப்பதற்காக, இப்போதும் ஆந்திரா செல்லும் மூனுஷா, அவரை, ஒரு ரகசிய இடத்துக்கு வரவழைத்து, அன்பைக் அள்ளிக் கொடுத்து விட்டே, சென்னைக்கு திரும்புகிறார். இந்த சேதி நடிகையின் தாய்க்குலத்துக்கு தெரிந்தும், மகளின் சந்தோஷத்தை கெடுக்க வேண்டாமே என்று, கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.

துளிகள்!

* சிம்பு,- த்ரிஷா இரு வரும், செல்வராகவன் இயக்கும், அலைவரிசை என்ற படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

* தெலுங்கு படங்களில் நடிக்க, மூன்று கோடி வாங்கும் சமந்தா, தமிழில், ஒன்றரை கோடி மட்டுமே வாங்கி வருகிறார்.

* முகத்தில் தெரியும் முதிர்ச்சியை மறைக்க, விரைவில் லண்டன் சென்று, ஒரு அதி நவீன சிகிச்சையை செய்து கொள்ள இருக்கிறார் நயன்தாரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us