தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துப்பறியும் நிபுணராக கத்தி விஜய்!

அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து, விஜய் டபுள் ரோலில் நடித்து வரும் படம், கத்தி. இப்படத்தில், சமூக விரோத பயங்கரவாத கும்பலை களையெடுக்கும் வேடத்தில் நடிக்கும் விஜய், துப்பாக்கியை விடவும், படு ஆவேசமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதே படத்தில், 'நெகடிவ்' ரோல் ஒன்றில் நடிக்கும் விஜய்க்கும், ஹீரோ விஜய்க்கும் இடையே கிளைமாக்சில் ஒரு அதிரடியான சண்டை காட்சியும் உண்டு. எட்டு கேமராக்களை வைத்து படமாக்கப்படும், இந்த பைட் சீனுக்காகத்தான், ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர், கோலிவுட்டுக்கு வருகிறார்.

— சினிமா பொன்னையா

லட்சுமி மேனன் குத்தாட்டம்!

பாண்டிய நாடு படத்தில், 'பை பை பை...' என்ற பாடலுக்கு, அதிரடி நடனம் ஆடிய லட்சுமி மேனனிடம், ஜிகர்தண்டாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாட கூறினர். அதற்கு, 'நான் என்ன அயிட்டம் நடிகையா...' என்று, மறுத்து விட்டார். அதையடுத்து, அப்படத்தின் நாயகனான சித்தார்த், 'அந்த கதைக்கு அப்படியொரு பாடல் வேண்டும்...' என்று, லட்சுமி மேனனுக்கு பக்குவமாக சொல்லி, அவரை குத்தாட்டம் போட வைத்தார். ஆக, நான் சிகப்பு மனிதன் படத்தில், உதட்டு முத்த நடிகையான லட்சுமி மேனன், இப்போது குத்தாட்ட நடிகையாகவும், கோதாவில் இறங்கி விட்டார். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!

— எலீசா

கோச்சடையான் டைரக்டருக்கு சாதனையாளர் விருது!

அவதார் மற்றும் டின்டின் போன்ற ஹாலிவுட் படங்களைப் போன்று, இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் அனிமேஷன் படம், கோச்சடையான். மோஷன் கேப்சர் டெக்னாலஜியில், இப்படம் உருவாக்கப்பட்டதையடுத்து, இந்தியாவிலுள்ள பல சினிமா பிரபலங்கள், அப்பட டைரக்டர் சவுந்தர்யாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'என்டி டிவி' நிறுவனத்தினர், மும்பையில் நடந்த ஒரு விழாவில், சவுந்தர்யாவுக்கு, சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளனர்.

— எலீசா

நயன்தாரா திடீர் கண்டிஷன்!

தான் நடிக்கும் படங்களின் ஆடியோ ரிலீஸ் உட்பட, எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற பாலிசியை, அஜீத் கடை பிடித்து வருவது போன்று, இப்போது, நயன்தாராவும் கடைபிடித்து வருகிறார். தன்னிடம் டைரக்டர்கள் கதை சொல்ல வரும்போதே, இந்த கண்டிஷனை முன் வைக்கிறார். அதற்கு இயக்குனர்கள் ஆட்சேபணை தெரிவித்தால், 'அப்படியென்றால் தாராளமாக வேறு நடிகையை, 'புக்' செய்து கொள்ளுங்கள்...' என்று தில்லாக பேசுகிறார். இருப்பினும், நயன்தாராவுக்கு இருக்கிற மார்க்கெட்டை உணர்ந்து, அவரது கண்டிஷனுக்கு சில படாதிபதிகள் கட்டுப்படு கின்றனர். தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு என்ற கதை!

— எலீசா

பவர்ஸ்டாரை பதற வைத்த சந்தானம்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், ஹீரோவாக நடித்துள்ள சந்தானம், இனி, தனக்கும், 'கட்-அவுட்' வைத்து, பாலாபிஷேகம் செய்ய ரசிகர் பட்டாளம் வேண்டும் என்பதால், பேஸ் - புக் மூலம், தன் ரசிகர்களை ஒன்று திரட்டி வருகிறார். அதில் பவர் ஸ்டாரிடம் இருந்த பெருவாரியான ரசிகர்கள், சந்தானத்தின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பவர் ஸ்டார் சீனிவாசன், தான் நடித்துள்ள, புதிய படங்கள் திரைக்கு வரும்போது, ரசிகர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களும், பணமும் வழங்கப்படும் என்று, திடீர் அறிவிப்பு வெளியிட்டு, எஞ்சி உள்ள ரசிகர்களை, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சித்தியுடன் லடாய் செய்து, ஆந்திராவுக்கு சென்ற அங்காடித்தெரு நடிகைக்கு, தற்போது சுத்தமாக மார்க்கெட் அவுட்டாகி விட்டது. அதனால், மெகா ஹீரோக்களை தன்வசம் இழுக்கும் முயற்சியாக, அவர்களுக்கு பார்ட்டி கொடுத்து, சிபாரிசு கோரி வருகிறார் நடிகை.

'தல'யுடன் மூன்றெழுத்து படத்தில், ரீ என்ட்ரி கொடுத்த, அந்த நான்கெழுத்து நடிகை, அடுத்து சேட்டை நடிகருடன் நடிக்கிறார். இதையடுத்து, அவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மணியை இங்கு சந்திக்க முடியவில்லை என்றால், மும்பைக்கு பறக்கிறார் நடிகர்.

தளபதி நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்த அகர்வால் நடிகைகையை, அதே நிறுவனம் மீண்டுமொரு படத்திற்கு, 'புக்' செய்ய உள்ளனர். ஆனால், தளபதி படத்திற்கு குறைந்த படக்கூலி வாங்கிய நடிகை, இப்போது, முகமூடி நடிகருடன் ஜோடி சேருவதால், கூடுதலாக, ௧௦ லட்சங்களை வெட்ட வேண்டும் என்று, கட் அண்ட் ரைட்டாக பேசி

உள்ளார்.

கரன்சி விஷயத்தில் கறாராக இருக்கும் தாரா நடிகை, அட்வான்ஸ் வாங்கும் போதே, பாதி தொகையை கறந்து விடுகிறார். மீதியை, 'கிளைமாக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன் வெட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்பவர், ஒரு வேளை படாதிபதிகள் பின் வாங்குவது போல் தெரிந்தால், தானும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லாமல், லீவு போட்டு விடுகிறார்.

துளிகள்

* ஆந்திர சினிமாத் துறையில் தன்னைப் பற்றி பரவிய செய்திக்கு, 'லண்டன் பாய்பிரண்டை, ரகசிய திருமணம் செய்யவில்லை...' என, மறுத்துள்ளார் அஞ்சலி.

* ஹிம்மத்வாலா இந்தி படத்தில் நடித்த போது, தன் முகாமை மும்பைக்கு மாற்றிய தமன்னா, தற்போது ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளார்.

* நண்பேண்டா படத்திற்கு பின், தான் நடிக்கும் படத்திற்கு காஜல் அகர்வாலை, 'புக்' செய்ய இருந்த உதயநிதி, இப்போது, லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

* மாஸ்திஸாடே என்ற இந்தி படத்தின் டீசரில் சன்னிலியோன் பேசியுள்ள, பச்சை வாழைப்பழ வசனம், மும்பையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us