தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!

இந்தியில் பிரபுதேவா இயக்கியுள்ள, ஆக் ஷன் ஜாக்சன் என்ற பட டைட்டிலில், ஹாலிவுட்டில், ஜேம்ஸ் கேமரூனும் ஒரு படம் இயக்குகிறார். அதனால், அந்த டைட்டிலை, பிரபுதேவா தன் படத்துக்கு வைக்கக் கூடாது என்று, அவர் பிரபு தேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், செம டென்ஷனான பிரபுதேவா, 'இந்தியாவில் உருவாகும் படத்தின் டைட்டிலில் தலையிட, இவருக்கு என்ன உரிமை உள்ளது...' என்று, அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, 'இந்தியில், மோகன்குமார் இயக்கிய, அவதார் என்ற பட தலைப்பைதான், ஜேம்ஸ் கேமரூன் தன் ஹாலிவுட் படத்திற்கு வைத்தார். இப்போது, அவரால் அந்த டைட்டிலை மாற்ற முடியுமா? அவர் மாற்றினால், நானும், ஆக் ஷன் ஜாக்சன் தலைப்பை மாற்றத் தயார்...' என்று, தன் பதிலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

— சினிமா பொன்னையா.

இந்தி படத்தில் ஓவியா!

நடிகை ஓவியா, கலகலப்பு மற்றும் புலிவால் படங்களில் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த போதும், கோலிவுட்டில் அவரது மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை. அதனால், தற்போது ஒரு இந்தி படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக கமிட்டாகியுள்ளார் ஓவியா. முன்பு, ஒல்லிகுச்சியாக இருந்த அவரது உடல்கட்டு, தற்போது கவர்ச்சிகரமாக, மெருகேறியிருப்பதால், இந்தி படத்தில் ஓவியாவிற்கு, அதிரடியான கிளாமர் நாயகி வேடத்தைக் கொடுத்துள்ளனர். அதனால், பாலிவுட்டில் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறார் ஓவியா. கைக்குருவியைக் கொண்டுதான், காட்டுக் குருவியைப் பிடிக்க வேண்டும்.

— எலீசா

ஸ்ருதிஹாசன் ஆவேசம்!

கடந்த ஆண்டு, தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த படம் ஆகடு. இந்த படத்தில் கிட்டத்தட்ட ஆபாசத்தின் எல்லையையே தொட்டிருந்தார் ஸ்ருதி. ஆனால், சென்சார் போர்டு, அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை கத்தரித்து விட்டதால், ஸ்ருதிஹாசன் படுகவர்ச்சியாக நடித்த, புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அப்படத்தில் பணியாற்றிய, ஒரு புகைப்படக்காரர் சமீபத்தில், அந்த போடடோக்களை இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். தகவலறிந்து அதிர்ச்சியடைந்தார் ஸ்ருதிஹாசன், 'எப்போதோ நான் நடித்து வெளியாகி விட்ட படத்தின் புகைப்படங்களை, இப்போது எதற்காக வெளியிட வேண்டும்...' என்று, அந்த புகைப்படக்காரரை அழைத்து, திட்டி தீர்த்தார். 'இனிமேலும், இது தொடர்ந்தால், போலீசில் புகார் செய்வேன்...' என்றும் அவரை எச்சரித்துள்ளார். தனக்குத் தனக்கு என்றால், தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்!

- எலீசா

குத்துச்சண்டை வீராங்கணன நமீதா!

குஜராத் குதிரை நமீதாவுக்கு, சிறுவயதில் இருந்தே, குத்துச்சண்டை மீது அலாதி பிரியம். அதனால், சமீபகாலமாய் படவாய்ப்பு இல்லாமல் ஓய்ந்திருக்கும் நமீதா, கடந்த ஒரு வருடமாக, ஒரு மாஸ்டரிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். இதை, உலகுக்கு உணர்த்தும் வகையில், விரைவில் சென்னையில், ஒரு குத்துச்சண்டை போட்டியை நடத்த இருக்கிறார். பல வீராங்கனைகளை, அதில் களமிறக்கும் நமீதா, தானும் ஒரு பெண் வீராங்கனையுடன் மோதுகிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!

— எலீசா

மலையாள ரீ-மேக்கில் விக்ரம் பிரபு!

மலையாளத்தில், துல்கர் சல்மான் நடித்த படம், உஸ்தாத் ஓட்டல். இப்படத்தின், தமிழ் ரீ-மேக்கான, தலப்பாகட்டு என்ற படத்திலும், அவர் நடிக்க விரும்பினார். ஆனால், சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான, வாய் மூடி பேசவும் படம் சரியாக போகாததால், அவருக்கு, அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, கும்கி நாயகன் விக்ரம் பிரபுவுக்கு, அப்படம் சென்று விட்டது. அதனால், துல்கரை மிஞ்சிய பர்பாமென்சை கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.

— சி.பொ.,

சூரி பக்கம் நிற்கும் தயாரிப்பாளர்கள்!

சந்தானம் ஹீரோவாகி விட்டதால், நம்பர் ஒன் காமெடியனாக, முயற்சித்து வருகிறார் சூரி. அதனால், ஒவ்வொரு நாளும் ஸ்பாட்டில் இருந்து செல்லும் போது, அடுத்த நாள் நடிக்க வேண்டிய காட்சிகளை, டைரியில் எழுதி செல்லும் சூரி, அடுத்தநாள், தான் டைரியில் எழுதிக் கொண்டு வரும் டயலாக்குகளை பேசி நடிக்கிறார். இதற்கு டைரக்டர்கள், எதிர்ப்பு தெரிவித்த போதும், சூரிக்கு மார்க்கெட் இருப்பதால், அவர் செய்வதுதான் சரி என்று, தயாரிப்பாளர்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். இதனால், சூரிக்கும், இயக்குனர்களுக்குமிடையே திரைக்குப் பின்னால் பனி போர் நடந்து வருக்கிறது.

— சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

முன்பெல்லாம் நடிகைகளை விட்டு எட்ட நிற்கும் பரோட்டா காமெடியன், சமீபகாலமாய் கதாநாயகிகளுடன் ஓவராக கடலை போடுகிறார். இதனால், அப்பட ஹீரோக்களுக்கு பரோட்டா மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

காமெடியிலேயே சரியாக காலூன்றாத நிலையில் கதாநாயகனாக அரிதாரம் பூசிய லொடுக்குப் பாண்டி நடிகர், அப்படி நடித்த எந்த படமும் ஓடாததால், டவுசர் கிழிந்து கிடக்கிறார். அதோடு பைனான்ஸ் கொடுத்தவர்கள் ஒரு பக்கம் வட்டியும், முதலும் கேட்டு துரத்துவதால் ஓடி ஒளிந்துக் கொண்டிருக்கிறார்.

துளிகள்!

* விஜயின் புதிய படத்தில், ஸ்ருதிஹாசன் - தீபிகா படுகோனே இருவரும் ஜோடி சேருகின்றனர்.

* 'என்னைச் சுற்றி நல்லவர்கள் இருந்தாலே போதும், நான் ஜெயித்துக் கொண்டேயிருப்பேன்...' என்கிறார் சந்தானம்.

* நடிகர் கருணாஸ் சினிமாவில் நடித்தாலும், இசைக் கச்சரியும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

* நடிகர் விமலும், சூரியும் ஒருவருக்கொருவர் பங்காளி என்று அழைத்துக் கொள்கின்றனர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us