தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் சிங்கமுத்து!

தெனாலிராமன் படம் தோற்று விட்டதால், மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து, படமெடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால், சொந்த படமெடுத்தாலும் கையை கடித்து விடுமோ என்று, கைகளை பிசைந்து கொண்டு நிற்கும் வடிவேலு, மீண்டும் காமெடி கோதாவில் இறங்குகிறார். இந்நிலையில், அவரையும், சிங்கமுத்துவையும் மீண்டும் காமெடி கூட்டணியில் இணைக்க ஆசைப்பட்ட ஒரு இயக்குனர், தன் படத்துக்காக சிங்கமுத்துவை அணுகி பேசினார். சிங்கமுத்துவோ, 'வடிவேலுவுடன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை; அதேசமயம், நான், அவரிடமிருந்து, ஏழரை கோடி பணத்தை அபகரித்து விட்டதாக, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு. ஆனால், இப்போது வாய்தாவுக்கே வர மறுக்கிறார். நான் மட்டுமே சென்று வருகிறேன். அதனால், அவரை கோர்ட்டுக்கு வந்து, இந்த வழக்கை, முதலில் எதிர்கொள்ள சொல்லுங்கள். விசாரணையின் முடிவு தெரிந்த பின், கண்டிப்பாக, வடிவேலுவுடன் இணைந்து நடிக்கிறேன்...' என்று கூறி விட்டார்.

- சினிமா பொன்னையா

டீச்சர் வேடத்தில் சுகன்யா!

பட வாய்ப்புகள் இல்லாத சுகன்யாவுக்கு, நாகர்கோவில் சந்திப்பு என்ற படத்தில், டீச்சர் வேடம் கிடைத்துள்ளது. பொறுக்கித்தனம் செய்யும் சில மாணவர்களை, நல்வழிப்படுத்தி, திருத்தும் வேடம் அது. அதனால், இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், நாகர்கோவில் வட்டார தமிழ் பேசி நடித்துள்ளதாகவும் கூறும் சுகன்யா, 'சின்னக்கவுண்டர் படத்தில், கோவை தமிழ் பேசி நடித்த எனக்கு, நீண்ட ஆண்டுகளுக்கு பின், வட்டார தமிழ் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது...' என்கிறார். காணக் கிடைத்தது; கார்த்திகை பிறை போல!

- எலீசா

மீண்டும் நந்திதா!

எதிர்நீச்சல் படம் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று, எதிர்பார்த்திருந்த நந்திதாவை, அப்படம் ஏமாற்றிய போதும், விஜயசேதுபதியுடன் நடித்த, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம், கை கொடுத்து விட்டது. அதோடு, அப்படத்தில், அவர்களின் நடிப்பு, இயல்பாக இருந்ததாக பேசப்பட்டதால், இப்போது, அதே ஜோடியை, தன், இடம் பொருள் ஏவல் படத்தில் இணைத்துள்ளார் சீனு ராமசாமி. அதோடு, நந்திதாவின் படக்கூலியில், சில லட்சங்களையும் அதிகப்படுத்தியுள்ளார். இதனால், நந்திதா செம உற்சாகத்துடன், அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆளும், கோலும் படைத்தவனை, வேலும், கோளும் என்ன செய்யும்!

— எலீசா

புதுமுக நடிகைக்கு சிபாரிசு செய்யும் ஆர்யா!

ஆர்யாவின் தம்பி சத்யாவுடன், அமர காவியம் படத்தில் நடித்து வரும் மியாஜார்ஜ், மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. அவரது நடிப்பு தன்னை கவர்ந்ததால் தான், தமிழுக்கு அழைத்து வந்ததாக கூறுகிறார் ஆர்யா. அதோடு, அவரை மேலும் வளர்க்கும் முயற்சியாக மியாஜார்ஜ் நடிப்பு பற்றி பெரிய அளவில், 'பில்டப்' கொடுத்து வரும் ஆர்யா, தற்போது, நயன்தாராவுக்கு சிபாரிசு செய்வதை நிறுத்தி, மியாவுக்கு நட்பு வட்டார டைரக்டர்களிடம் நேரடி சிபாரிசு செய்கிறார். இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!

- எலீசா

சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை, பாக்யராஜ் ஏற்கனவே இயக்கிய, இன்று போய் நாளை வா என்ற படத்தை தழுவி எடுத்திருந்தார் சந்தானம். அனுமதியின்றி தன் கதையை படமாக்கிய சந்தானம், நஷ்டஈடு தர வேண்டும் என்று, முன்பே வழக்கு தொடர்ந்தார் கே.பாக்யராஜ். ஆனால், இதுவரை சந்தானம் அவருக்கு எந்தவித நஷ்டஈடும் தரவில்லை. அதனால், அவர் மீது மீண்டும் கமிஷ்னர் அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதோடு, இப்போது கோடிக்கணக்கில் சந்தானம் சம்பளம் வாங்குகிறார் என்றும், அந்த புகாரில் தெரிவித்துள்ளார் பாக்யராஜ்.

- சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

இதுவரை எந்த கதாநாயகனுடனும் லிப் டு லிப் காட்சிகளில் நடிக்காத, அருந்ததி நாயகி, முதன் முறையாக, தலயுடன் நடித்து வரும் படத்தில் அப்படி நடித்துள்ளார். அந்தக் காட்சியை மொத்த யூனிட்டையும் வெளியேற்றி விட்டு, ரகசியமாக படமாக்கியுள்ளனர்.

அங்காடித் தெரு நடிகையை அரவணைக்க ஆளில்லை. அதனால், நரைமுடி படாதிபதிகளை இதுவரை விரட்டியடித்து வந்த நடிகை, இப்போது அவர்களுடன், 'ஆழமான நட்பை' உருவாக்கி வருகிறார். இதையடுத்து, சில சின்ன பட்ஜெட் படங்கள், அம்மணியின் பாக்கெட்டில் எகிறியுள்ளன.

மூனுஷா நடிகை எங்கு சென்றாலும், அவரை நிழல் போல தொடரும் அவரது தாய்க்குலம், மகள் கேமரா முன் சென்று விட்டால், கதாநாயகர்களுடன் கடலை போடுவார். ஆனால், இது நாளுக்கு நாள் அதிகமானதால், சமீபகாலமாய் தாய்க்குலத்தை வீட்டிலேயே கத்தரித்து விட்டு, தான் மட்டும், தனியாக படப்பிடிப்புக்கு செல்கிறார் மூனுஷா.

துளிகள்!

* ரஜினியின், லிங்கா படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அனுஷ்கா.

* ஆர்யா, விமல் மற்றும் ஜெய் உள்ளிட்ட நடிகர்களிடம், ஆந்திராவில் இருந்தபடியே, சிபாரிசு கோரி வருகிறார் அஞ்சலி.

* தன் ஐதராபாத் தோழர் - தோழிகளை சந்திக்க, மாதம் ஒருமுறையேனும், அங்கு, 'விசிட்' அடிக்கிறார் த்ரிஷா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us