தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 22, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

200 கோடியில், எந்திரன் - 2!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான படம், எந்திரன்.அப்படம், 150 கோடி ரூபாயில் தயாரானது. இந்நிலையில், தற்போது, லிங்கா என்ற படத்தில் நடித்துவரும் ரஜினியும், ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரும், எந்திரன்-2 மூலம், மீண்டும் இணைகின்றனர். அப்படத்தை, முந்தைய படத்தை விட, இன்னும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், 200 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளார். அதோடு, ரஜினி படங்களுக்கு, தற்போது ஹாலிவுட்டிலும், வரவேற்பு கிடைத்திருப்பதால், அப்படத்தில், அவருக்கு ஜோடியாக, ஒரு ஹாலிவுட் நடிகையை, நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

— சினிமா பொன்னையா

மீண்டும் ஜோடி சேர்ந்த பிரசன்னா - சினேகா!

புதிய படங்களில் நடிக்க, தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் சினேகா. ஆனால், யாருமே கண்டு கொள்ளாததால், கணவர் பிரசன்னாவுடன் இணைந்து, கேம் சேஞ்சர் என்டர்டெய்ன்மென்ட் என்றொரு பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி விட்டார். அந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும், டோனாவூர் ராதா என்ற முதல் படத்தில், பிரசன்னா - சினேகா இருவருமே இணைந்து நடிக்கின்றனர். இதையடுத்து, இன்னொரு படத்தில் பிரசன்னா நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்திலும் சினேகாவுக்கு ஒரு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட உள்ளது. கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!

— எலீசா

10 லட்சம் ரூபாய் கேட்ட தமன்னா!

வீரம் படத்திற்கு பின், இன்னும் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை தமன்னா. இந்நிலையில், நயன்தாராவுடன் இது கதிர்வேலன் காதல் படத்தையடுத்து தான் நடிக்கும், நண்பேன்டா படத்தில் தமன்னாவை, கடை திறப்பது போன்ற ஒரு காட்சியில் நடிக்குமாறு கேட்டார் உதயநிதி. அதற்கு, 'ஒரு காட்சி என்றாலும், 10 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும்...' என்று, அடித்து கூறியுள்ளார் தமன்னா. 'ரொம்ப அதிகமாக இருக்கே...' என்று தயங்கிய உதயநிதி, அந்த காட்சியில் முன்னணி நடிகை நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், வேறுவழியின்றி தமன்னாவையே, 'புக்' செய்துள்ளார். கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள் என்ற கதை!

— எலீசா

சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!

சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே உன்னைத்தேடி என்ற படத்தில் நடித்துள்ளார் அஜீத். அதனால், மீண்டும் அவரை வைத்து, ஒரு படம் இயக்கி, தன் மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள நினைக்கும் சுந்தர். சி, அஜீத்துக்காக தற்போது ஒரு அதிரடி கதையை தேர்வு செய்து வைத்துள்ளார். அதை அவரிடம் சொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும், அஜீத் செவிசாய்க்கவில்லை. அதனால், இப்போது மனைவி குஷ்பூ மூலம் முயற்சி எடுத்து அஜீத்தை, 'அட்டாக்' செய்து வரும் சுந்தர்.சி. தொடர்ந்து அஜீத் தனக்கு டேக்கா கொடுத்தால், தன் அடுத்த படத்தை மீண்டும் சித்தார்த்தை வைத்து துவங்கும் முடிவில் இருக்கிறார். அப்படம் ஏற்கனவே சுந்தர்.சி, இயக்கிய கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமாம்.

— சி. பொ.,

சிக்கலில் ஜீவா நடிக்கும், யான்!

ஓளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம், யான். இப்படத்தில், பயங்கரவாதிகளால் கடத்தப்படும் ஜீவா, அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. ஆனால், படத்தைப் பார்த்த படாதிபதி, ஏற்கனவே தமிழில் வெளியான, ரோஜா மற்றும் மரியான் படங்களின் சாயலில் இருப்பதாக கூறி விட்டார். அதனால், தற்போது கதையில் சில, பல திருத்தங்களை செய்து, மறுபடியும், படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

மதம் மாறி விட்டதாக, சமீபத்தில் அறிக்கை விட்ட அந்த அழகி நடிகைக்கு, துபாயை சேர்ந்த ஒருவருடன் காதல் வளர்ந்துள்ளது. அதன் காரணமாகவே, மதம் மாறிய நடிகை, இன்னும் சில மாதங்களில், அவரை திருமணம் செய்து, துபாயில் குடியேறப் போகிறார்.

தளபதி நடிகரின், மூன்றெழுத்து படத்தின் கதை, அவ்வபோது வெளியில் கசிந்து கொண்டிருப்பதால், கதை இலாகாவை களை எடுத்துள்ளார் அப்பட இயக்குனர். இதனால், தளபதிக்கே கூட, தினமும் ஸ்பாட்டுக்கு வந்த பின் தான், நடிக்க வேண்டிய சீனை சொல்கிறார் இயக்குனர். கூடவே, கதையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது.

துளிகள்!

* ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தையடுத்து, பிசாசு என்ற பெயரில், ஒரு அமானுஷ்ய படத்தை இயக்குகிறார், மிஷ்கின்.

* கமலின், புதிய படத்தின் படப்பிடிப்பு, மத்திய பிரதேசத்தின் பழமையான கிராமங்களில், நடைபெற்று வருகிறது.

* மோனிகா நடித்துள்ள, நதிகள் நனைவதில்லை படப்பிடிப்பு முடிந்து, விரைவில், வெளிவர உள்ளது.

* தலப்பாக்கட்டியை தொடர்ந்து, எழில் இயக்கத்தில், விக்ரம்பிரபு நடிக்கும் படத்தில், ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

* சோயா அக்தர் என்ற பெண் இயக்குனரின் படத்தில், இணை இயக்குனராக பணியாற்ற உள்ளார், இந்தி நடிகை தீபிகா படுகோனே.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us