தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரே படத்தில் விஜய் - அஜீத்!

ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் தான், விஜய் - அஜீத் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பின், எந்தப்படத்திலும் இணையவில்லை. இந்நிலையில், மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்தார். அதற்காக, ஒரு கதையைதயார் செய்த அவர், அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை, ஏ.ஆர்முருகதாசிடம் கொடுத்து விட்டார். இதை யடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், விஜய் - அஜீத் இருவரும், 'கைவசம் இருக்கும் படங்களை முடித்த பின், பார்க்கலாம்...' என்று, பச்சைக் கொடி காட்டியுள்ளனர். அதனால், தற்போது வெங்கட் பிரபு - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும், அவ்வப்போது சந்தித்து, கதை விவாதம் நடத்தி வருகின்றனர்.

— சினிமா பொன்னையா

சிகரெட் பிடிக்கும் விசாகாசிங்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகாசிங், தற்போது, ரவுடி பெல்லோ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் காட்சியில் நடனமாடியபோது, தவறி விழுந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில மாதங்களாக ஓய்வில் இருந்த விசாகாசிங், மீண்டும் அப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். அதோடு, கல்லூரி பெண்ணாக நடிக்கும் அவர், ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதுபோல் நடிக்க வேண்டியிருப்பதால், தன் ஆண் நண்பர்கள் சிலரை அழைத்து, எப்படி சிகரெட் பிடிக்க வேண்டும் என்பது குறித்து, பயிற்சி எடுத்து வருகிறார்.படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்!

- எலீசா

மிரட்டலான வேடத்தில் விஜயசேதுபதி!

கோலிவுட்டைப் பொறுத்தவரை, விஜயசேதுபதி என்றாலே வித்தியாசம் என்றாகிவிட்டது. மற்ற கதாநாயகர்களை மாதிரி, வழக்கமான கதைகளில், அவர் நடிக்க மாட்டார் என்பதால், வித்தியாசமான கதைகளுடன், இயக்குனர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். அப்படி தன்னிடம் வரும் கதைகளில் கிட்டதட்ட, 25 கதைகள் வரை கேட்ட பின், அதிலிருந்து ஒரு கதையை ஓ.கே., செய்கிறார். அந்த வரிசையில், புறம்போக்கு,இடம் பொருள் ஏவல், மெல்லிசை, மற்றும் வசந்தகுமாரன் படங்களை அடுத்து, விஜய சேதுபதி நடிக்கயிருக்கும் புதிய படம் எடக்கு. இந்த படத்தில், ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜயசேதுபதி. இப்படத்துக்காக, அவரது மிரட்டலான முகதோற்றத்தை, தற்போது வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகின்றனர்.

- சி.பொ.,

படாதிபதிகளை பதம் பார்க்கும் சமந்தா!

தனக்கு சமைத்துக் கொடுப்பதற்கென்றே, ஒரு சமையல்காரரை நியமித்துள்ள சமந்தா, அதற் கான செலவுகளை, படாதிபதிகளின் கணக்கில் எழுதி விடுகிறார். அதுமட்டுமின்றி சென்னை, ஐதராபாத் மற்றும் மைசூர் நகரங்களில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டல்களில் தான் தங்கு வேன் என்று கூறுகிறார். இதனால், இப்போதெல்லாம் சமந்தாவுக்கு நடிக்க கொடுக்கும் சம்பளத்துக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ உணவு மற்றும் தங்கும் செலவும் ஆகிவிடுகிறது. சுண்டைக்காய் காற் பணம்; சுமை கூலி முக்காற்பணம்!

— எலீசா

பேட்மின்டன் விளையாட்டில் கோலிவுட் நடிகைகள்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி, இந்திய அளவில் பரவலாக நடந்து வரும் நிலையில், தற்போது, கோலிவுட்டில், பேட்மின்டன் விளையாட்டு போட்டியையும் துவங்கியிருக்கின்றனர். இதில், நடிகர்கள் மட்டுமின்றி, நடிகைகளுக்கிடையேயும், போட்டிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட நடிகர் - நடிகைகள், தங்களது பெயரை பதிவு செய்து, தற்போது, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், நடிகைகள் தரப்பில், லட்சுமிராய், ஓவியா, அமலாபால், ஜனனி அய்யர் மற்றும் ரூபா மஞ்சரி ஆகியோர், தங்களது பெயரை பட்டியலில் சேர்த்துள்ளனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

கோவுட்டில் அகர்வால் நடிகைக்கு இரண்டு கோடி கொடுப்பதற்கே தயங்கி வரும் நிலையில், டோலிவுட்டில் இவர் மூன்று கோடி கேட்டால், அவர்களோ நான்கு கோடி கொடுக்க முன் வருகின்றனர். அந்த அளவுக்கு, அங்குள்ள கதாநாயகர்கள் அம்மணிக்கு பிரத்யேக சிபாரிசு செய்கின்றனர். இப்படி, அம்மணிக்கு கதாநாயகர்களின் கரிசனம் நேரடியாக இருந்து வருவதால், அவர் என்ன கேட்டாலும், அதை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு, ஆந்திர பட அதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிவாஜி கேர்ள், ஆந்திராவில் நடித்த, மூன்றெழுத்து படம் வெற்றியடைந்துள்ளது. அதனால், தற்போது, ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்துள்ள நடிகை, அங்குள்ள இளவட்ட இயக்குனர்களுக்கு பார்ட்டி கொடுத்து, உபசரித்திருக்கிறார். அதோடு, பிகினி, டூ-பீஸ் வேடங்களில் நடிப்பதற்கும், உத்தரவாதம் கொடுத்து, சில படங்களை மடக்கியுள்ளார்.

துளிகள்!

* கார்த்திக் நடித்த, கிழக்குவாசல் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், தற்போது அவர் மகன் கவுதமை வைத்து, ஒரு படம் தயாரிக்கிறது.

* அன்னக்கொடி படத்தில் ஆடு மேய்த்த கார்த்திகா, புறம்போக்கு படத்தில், ஒரு காட்சியில், ஒட்டகம் மேய்ப்பது போல் நடித்துள்ளார்.

* ரோமியோ, ஜூலியட் படத்தில், சிக்ஸ்பேக் பயிற்சியாளராக நடிக்கும் ஜெயம் ரவியிடம், சிக்ஸ்பேக் வைப்பதற்கு, ஆலோசனை கேட்டுவரும் நடிகராக ஆர்யா நடித்துள்ளார்.

* தாரை தப்பட்டை படத்திற்கு, தன்னை தேர்வு செய்து, பின் ஓரங்கட்டியதால், இயக்குனர் பாலா மீது, கோபத்தில் இருக்கிறார் ஸ்ரேயா.

* தமிழில் படமில்லாமல், தெலுங்குக்கு சென்ற காஜல் அகர்வால், தற்போது, அங்கு மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தவிர, ஒரு இந்திப் படத்திலும் நடிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us