தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 05, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானும் இணைந்து நடித்து வரும் படம், கோல்ட் ஸ்ட்ரக். இப்படம், இந்திய - சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. உலகப்புகழ் பெற்ற, ட்ரங்கன் மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய டோனி சியுங் மற்றும் கோரி யேன் ஆகிய இருவரும் இணைந்து, இப்படத்தை இயக்குகின்றனர். 150 கோடி டாலரில், அதாவது, இந்திய மதிப்புப்படி, 900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவில் நடை பெறுகிறது.

— சினிமா பொன்னையா

கிலியை ஏற்படுத்திய இலியானா!

தமிழில், நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, இந்திக்கு சென்ற இலியானாவுக்கு, அங்கு நடித்த, பர்பி படம் மெகா ஹிட்டாக அமைந்தது. அதனால், தற்போது ஐதராபாத்தில் இருந்து, தன் முகாமை மும்பைக்கு மாற்றி விட்டார். மேலும், அசினின் மார்க்கெட் அங்கு வீழ்ச்சி கண்டிருப்பதால், அவருக்கான சில வாய்ப்புகளை தட்டிப்பறித்து வரும் இலியானா, தற்போது, ஷாரூக்கானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனால், உற்சாகத்தில் இருக்கும் இலியானா, இதுவரை, 'இந்த அளவுக்குத் தான் கிளாமர் காட்டுவேன்..' என்று கோடு போட்டு நடித்து வந்தவர், இப்போது லிமிட் தாண்டி நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இலியானாவின் இந்த திடீர் வேகம், அங்கு முன்னணியில் இருக்கும் தீபிகா படுகோனே உள்ளிட்ட இளவட்ட நடிகைகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்!

— எலீசா

சமந்தாவுக்கு கை கொடுக்காத கிளாமர்!

'கிளாமராக நடித்தால் ஒரு பெரிய ரவுண்டே வருவாய்...' என்று, சமந்தாவுக்கு ஆசை வார்த்தை காட்டி தான் அவரை, அஞ்சான் படத்தில் தோலுரித்தனர். ஆனால், அப்படம் படு தோல்வியடைந்து விட்டது. அதேபோல், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த, ரபாசா படமும் தோல்வியடைந்து விட்டது. ஆக, தான் கிளாமராக நடித்த இரண்டு படங்களுமே தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியில் இருக்கிறார் சமந்தா. அதன் காரணமாக, 'கிளாமர் சென்டிமென்ட்டாகவே எனக்கு செட்டாக வில்லை...' என்று புதிதாக தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் சொல்லி, கிளாமருக்கு தடை போட்டு வருகிறார். தனக்கு உகந்த ஊணும் பிறருக்கு உகுந்த கோலமும்!

- எலீசா

ஆட்டம் முடிந்தது!

சாதாரணமாக கவுண்டமணி மற்றும் வடிவேலு உள்ளிட்ட காமெடியன்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சினிமாவில் கொடி கட்டிப் பறந்தனர். ஆனால், அவர்களைப் போலவே சந்தானமும் நீண்டகாலம் சினிமாவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென்று, அவர் கதாநாயகன் வேடம் போட்டதால், இப்போது காமெடி வாய்ப்புகளும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு, ஏற்கனவே தான் நடித்த ஆர்யா, ஜீவா, விமல் மற்றும் உதயநிதி என அனைவரிடமும், மறுவாழ்வு கேட்டுப் பார்த்தார். அவர்களோ, 'காமெடியன் சந்தானமாக நீங்கள் இருந்தால், ஓ.கே., ஆனால், இப்போது உங்களுக்குள் ஒரு கதாநாயகன் சந்தானமும் இருக்கிறார்; அதனால், ஒரே உறைக்குள் இரண்டு கத்தியை வைப்பது சாத்தியமல்ல...' என்று சொல்லி, சந்தானத்தை நிராகரித்து விட்டனர். ஆக, சந்தானத்தின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

உலகின் உயரிய விருதின் பெயரில் கம்பெனி வைத்துள்ள தயாரிப்பாளரிடம், தளபதி நடிகர் சில ஆண்டுகளுக்கு முன், 15 கோடி ரூபாய் கடன் பட்டிருக்கிறார். இப்போது வரை அதைப்பற்றி பேசாத நடிகர், சமீபத்தில், 'படம் கொடுங்கள்; நடித்து கடனை கழித்து விடுகிறேன்...' என்றதால், கடுப்பான பட அதிபர், 'தீபாவளிக்கு இவர் நடித்த மூன்றெழுத்து படத்துக்கு போட்டியாக, என் ஓரெழுத்து படத்தை வெளியிட்டு, மேற்படி நடிகரின் படத்துக்கு எந்த தியேட்டரும் கிடைக்க விடாமல் செய்யப் போகிறேன்...' என்று வரிந்து கட்டியுள்ளார். ஏற்கனவே சிக்கலில் சிக்கி கிடக்கும் தளபதி, இந்த பிரமாண்ட தயாரிப்பாளரின் கோபத்தினால், பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார்.

சினி துளிகள்!

* கத்தியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய், அதற்கடுத்து பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

* அரண்மனை படத்தில், ஹன்சிகா பேய் வேடத்தில் நடித்திருப்பதை அடுத்து, ராய் லட்சுமிக்கு பேய் வேடத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

* ஓ.எல்.எக்ஸ்., நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வந்த தனுஷ், இப்போது அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகி விட்டார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us