PUBLISHED ON : அக் 05, 2014

அ நிறம் | அளவு
காதலி மற்றும் மனைவியின் நினைவாக பிரமாண்ட மாளிகை கட்டிய காலம் மலையேறி, இப்போது, கார்களுக்காக மாளிகை கட்ட துவங்கியுள்ளனர். ஜப்பானை சேர்ந்த ஒருவர், 'போர்ஷே 911' என்ற ஆடம்பர கார் வைத்துள்ளார். இந்த கார் மீது, அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. இதனால், தன் காரை சுற்றி, பிரமாண்டமான மூன்றடுக்கு மாளிகையை கட்டியுள்ளார்.
இந்த மாளிகைக்கு நடுவில், அவரின் போர்ஷே கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் எந்த தளத்தில் இருந்து பார்த்தாலும், அந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும் என்பது தான், இதில் உள்ள ஸ்பெஷாலிட்டி. 'கென்ஜி யங்கவடா' என்ற, ஜப்பானை சேர்ந்த கட்டுமான நிறுவனம், இந்த வீட்டை வடிவமைத்து கொடுத்துள்ளது.
— ஜோல்னாபையன்.
