தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 05, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* முனையொடிந்த பேனா ஒன்று

குப்பைத் தொட்டியில்

கிடக்கிறது...

* குப்பையில் கிடக்கும் போதும்

அது தன் கம்பீரத்தையும் வண்ணத்தையும்

இழந்து விடவில்லை!

* அற்புத சிந்தனையாளனின்

கையில் இருந்திருக்கக்கூடும்...

அழியாப்புகழ் மிக்க படைப்புகளை

பெற்றெடுத்த பாங்கு தெரிகிறது!

* கவிஞன் விரும்பியதை

வடித்தெடுத்த

அழகியல் இலக்கணங்கள்

அதன்மேனியில் மிளிர்கிறது!

* குனிந்து கிடந்த மானிடத்தை

துாக்கி நிறுத்த

நெம்பு கோலாய்

இருந்திருக்க வேண்டும்!

* வரலாற்று சிறப்பு மிக்க

தீர்ப்புகள் வழங்கிய

நீதியாளனின் கையில்

இருந்திருக்கலாம்...

அதனால் கூட

முனைகள் ஒடிக்கப்பட்டிருக்கலாம்!

* ஓய்வு காலத்திற்கு பின்

பேனாக்கள் மட்டுமல்ல

பேரறிவாளர்களும்

குப்பையில் தான் கிடக்கின்றனர்!

* முனையொடிந்து

மகத்துவம் இழந்து

சகதியில் கிடக்கின்ற

ஆளுமையைக் கண்டபின்

ஒரு பேனாக்காரனால் எப்படி

அழாமல் இருக்க முடியும்!

— நல்லான் ராமசாமி, கரூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us