தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷங்கர் கொடுக்கும்   ஆச்சரியம்!

இதுவரை சொந்த கற்பனைகளையே படமாக்கி வந்த இயக்குனர் ஷங்கர், முதன் முறையாக, '3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீ-மேக் செய்வது கோடம்பாக்கத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஷங்கரோ,  'இந்தப் படத்தை இந்தியை விட இன்னும  நான் பிரமாண்டமாக எடுக்கப் போவதைப் பார்த்து பாலிவுட்டே ஆச்சரியப்படப் போகிறது...' என்று அடுத்த ஆச்சரியத்தைக் கொடுக்க, தான் தயாராகி வருவதையும் சொல்கிறார்.   — சினிமா பொன்னையா.

தத்துவம் பேசுகிறார்  ப்ரியாமணி!

பிரபல ஹீரோக்களுடன் செகண்ட் ஹீரோயினாக கூட நடிக்கத் தயாராக இருக்கிறார் ப்ரியாமணி. ஆனால், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் வெயிட்டான நாயகி ரோலில் நடிக்கக் கேட்டாலும் மறுத்து விடுகிறார். காரணம் கேட்டால், 'மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது...' என்று தத்துவம் பேசுகிறார். ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?

— எலீசா.

சென்னையை காலி  பண்ணிய நடிகை!

மாட்டுத்தாவணி என்ற படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார், 'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் தங்கையான நடிகை மிதுனா. ஆனால், படமோ கிடப்பில் கிடக்கிறது. இதனால், மாதக்கணக்கில் காத்திருந்து வெறுத்துப் போன மிதுனா, இப்போது சென்னையை காலி பண்ணிவிட்டு தன் தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கிட்டாதாயின் வெட்டென மற.   — எலீசா.

'இச்' படத் தலைப்பு   மாறியது!

ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானியை இணைத்து பிரபுதேவா இயக்கியிருக்கும் படத்திற்கு, 'இச்' என்று தான் முதலில் பெயர் வைத்திருந்தார். ஆனால், 'இச்' என்ற வார்த்தை, தமிழ் சொல் இல்லை என்று பலரும் கூறியதால், இப்போது அப்படத்துக்கு, 'எங்கெங்கும் காதல்' என்று புதிய பெயர் வைத்துள்ளார் பிரபுதேவா.                                          —  சி.பொ.,

ஹாலிவுட்டில்  ஸ்ருதிஹாசன்!

தமிழில் அப்பா கமல்ஹாசன் நடித்த, 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இசையமைத்த ஸ்ருதிஹாசன், தொடர்ந்து உலக அளவில் வெளியிட இசை ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், ஹாலிவுட்டில் தயாராகும், 'ஹிஸ்ஸ்' என்ற படத்துக்காக டேவிட் குஷ்னர் என்ற இசையமைப்பாளரின் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆக, கோலிவுட், பாலிவுட்டிற்கு பிறகு ஹாலிவுட்டிலும் தற்போது காலூன்றியிருக்கிறார்.          — எலீசா.

பட்டியல்  கேட்கும் தனன்யா!

'குங்குமப்பூவே கொஞ்சுப் புறாவே' படத்தில் நடித்தவர் தனன்யா. தற்போது மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் அவரை, ஏதேனும் சினிமா கம்பெனிகள் தொடர்பு கொண்டால், படத்தில் இடம்பெறும் மொத்த கலைஞர்களின் பட்டியலையும் கொடுங்கள் என்கிறார். காரணம், முக்கிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் பெரும்புள்ளிகளாக இருக்கும் படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் இருக்கிறார். ஆனால், நடிகையின் இந்த பேச்சு இயக்குனர்களை வெறுப்பேத்த, 'இவர் என்ன பட்டியல் கேட்பது?' என்று வேறு நடிகைகளை தேடிச்சென்று விடுகின்றனர். கழுதை மேல் ஏறியும் பெருமை இல்லை; இறங்கியும் சிறுமை இல்லை!                 —  எலீசா.

வில்லன்  வேடத்தில்  ஆர்யா!

தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பதில் ஆர்யாவுக்கு உடன்பாடில்லை. இடையிடையே நெகடிவ் ஹீரோ அல்லது வில்லன் வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். 'அப்படி நடிக்கும் படங்களில் என்னைப் போன்ற யூத் ஹீரோக்கள் நாயகன் என்றாலும் ஆட்சேபனை இல்லை. ஈகோ பார்க்காமல் வில்லனாக நடிப்பேன்!' என்று, ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுக்கிறார்.

— சினிமா பொன்னையா.

செல்வராகவன் இயக்கும் குறுகிய கால படம்!

தனுஷ் - ஆண்ட்ரியாவை வைத்து ஆரம்பித்த, 'மாலை நேரத்து மயக்கம்' படத்தை கிடப்பில் போட்டு விட்டார் செல்வராகவன். ஆனால், தனுஷ் - ஆண்ட்ரியாவிடம் வாங்கிய கால்ஷீட் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, இவர்களை வைத்தே இப்போது வேறு கதையில், 'மறவன்' என்ற படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தை வருடக் கணக்கில் இழுத்தடிக்காமல், ஆறே மாதத்தில் ரிலீஸ் பண்ணவும் திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.            — சி.பொ.,

தமிழில் விஜய்யை கபடி வீரராக வைத்து, 'கில்லி' படத்தை இயக்கியவர் தரணி. இவர், தற்போது ராம்சரணை வைத்து,'மிரப்பு' என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். 'கில்லி'யைப் போலவே  இப்படமும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, இதில் ராம்சரணை,  புட்பால் வீரராக நடிக்க வைத்திருக்கிறார்.     

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us