sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல....

/

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மே 17, 2015

Google News

PUBLISHED ON : மே 17, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜய்யின் விருது ஆசை!

கத்தி படத்தில், ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு, விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் விஜய். ஆனால், 'டிவி' சேனல்கள் கூட அவருக்கு விருது கொடுக்கவில்லை, இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விஜய், அடுத்தபடியாக மசாலா படங்களாக இல்லாமல், விருதுகளை முன்வைக்கும் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால், தன்னிடம் கதை சொல்லியிருக்கும் இயக்குனர்களிடம், தன் விருப்பத்தை சொல்லி, கதைகளில் திருத்தம் செய்ய சொல்லி வருகிறார்.

— சினிமா பொன்னையா

ஜெயம் ரவியை தடுமாற வைத்த நயன்தாரா!

'மரத்தை சுற்றி டூயட் பாடும் வேலையே வேண்டாம்...' என்று தற்போது, அழுத்தமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியிருக்கும் நயன்தாரா, ஜெயம் ரவியுடன் நடித்து வரும், தனி ஒருவன் படத்தில், அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், ஜெயம் ரவிக்கும், நயன்தாராவுக்குமிடையே ஒரு சண்டை காட்சி உள்ளது. அக்காட்சியில், ஆக் ஷன் நாயகி விஜயசாந்தி பாணியில், சில ஷாட்களில் ஜெயம் ரவியை திணறடித்துள்ளார் நயன்தாரா. அதில், திக்குமுக்காடிப் போன ஜெயம் ரவி, 'இதற்கு முன், ஆதிபகவன் படத்தில் நீதுசந்திராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடித்த போது இல்லாத நெருக்கடியை, நயன்தாராவுடன் நடித்தபோது உணர்ந்தேன்...' என்று தன் அனுபவத்தை தெரிவித்துள்ளார். விளைந்ததும், விளையாததும் வைக்கோலைப் பார்த்தால் தெரியும்!

— எலீசா

வருத்தத்தில் ஹன்சிகா!

ஆடை குறைப்பு விஷயத்தில் விட்டுக்கொடுத்து நடித்து வந்தாலும், படுக்கையறை காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதற்கு தடை போட்டு வந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் அவர் நடித்துள்ள, வாலு படத்தில், படுக்கையில் கட்டிப்புரளும் காட்சியொன்று உள்ளது. அக்காட்சி படமாக்கப்பட்டபோது, சிம்புவுடன் காதல் வயப்பட்டிருந்த நேரம் என்பதால், நடிப்பு என்றே தெரியாத அளவுக்கு, இருவரும் அக்காட்சியில் பின்னி பிணைந்து நடித்தனர். அதனால், அக்காட்சி, வாலு படத்தின் ஹைலைட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் சிம்பு. ஆனால், தற்போது, சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டுள்ள ஹன்சிகாவோ, அக்காட்சியில் அளவுக்கதிகமாக நெருக்கம் காட்டி நடித்ததை எண்ணி வருந்துகிறார். போனதை நினைத்து, ஆவப் போவது என்ன?

— எலீசா

இலங்கையில் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் மன்றம்!

தமிழகம் மட்டுமின்றி, கடல் கடந்தும் தன் புகழை பரப்பும் முயற்சியாக, வெளிநாடுகளிலும் ரசிகர் மன்றங்களை உருவாக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். அவ்வகையில், இலங்கையில், அவருக்கு தற்போது ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அத்துடன், சிவகார்த்திகேயன் படங்கள் அங்குள்ள தமிழர் பகுதியில் வெளியாகும் போது, தமிழகத்தை போலவே பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்துகின்றனர். இதையடுத்து, மேலும் சில வெளிநாடுகளிலும், தன் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு, தன் வியாபார வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

பப்ளிமாஸ் நடிகையை, ஆஸ்தான கதாநாயகர்கள் கை விட துவங்கியுள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ள நடிகை, அவர்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்காரணமாக, அவர்கள் நடத்தும் பார்ட்டிகளில் தன்னைச் சுற்றியுள்ள கட்டுக்காவலை விலக்கி, உதவியாளர்களுடன் மட்டுமே சோலோவாக விசிட் அடித்து, அவர்களை, 'அட்டாக்' செய்து வருகிறார் நடிகை.

சுள்ளான் நடிகருக்கு, தாரா நடிகை மீது அளவற்ற பிரியம். அதனால், தன்னுடன் அவர் நடிப்பதற்கு சந்தர்ப்பங்கள் அமையாத போதும், தன் தயாரிப்பு படங்களில் நடிக்க வைக்கிறார். அத்துடன், அவ்வப்போது நடிகையுடன் ஸ்டார் ஓட்டல்களில் செம லூட்டியில் ஈடுபடுகிறார் நடிகர்.

சினி துளிகள்!

* ஷமிதாப்பை தொடர்ந்து, மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் தனுஷ்.

* பாண்டிராஜ் இயக்கி வரும், ஹைகூ படத்தில், 1,500 சிறுவர்கள் ஒரே காட்சியில் நடித்துள்ளனர்.

* தான் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை, வீடியோவில் பதிவு செய்து, இணைய தளத்தில் ரசிகர்களின் பார்வைக்காக பதிவு செய்துள்ளார் சமந்தா.

* இனி தான் நடிக்கும் படங்களை, 'பர்ஸ்ட்' காப்பி அடிப்படையிலேயே நடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் கமல்.

* சிம்புவைத் தொடர்ந்து, விக்ரமை வைத்தும், ஒரு படம் இயக்குகிறார் கவுதம்மேனன்.

இவ்ளோதான்!






      Dinamalar
      Follow us