தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 07, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய்யை இயக்கும் பிரமாண்ட இயக்குனர்!

'த்ரீ இடியட்ஸ்' படத்தை மூன்று ஹீரோக்களை வைத்து இயக்கப் போவதாக சொன்ன டைரக்டர் ஷங்கர், அந்த முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மாறாக, விஜய்யை வைத்து, முதன் முதலாக ஒரு பிரமாண்ட படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 'வேலாயுதம்' படப்பிடிப்பு முடிந்ததும், ஷங்கருக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் விஜய்.   — சினிமா பொன்னையா.


நீச்சல் உடையில் அனுஷ்கா!

முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட அனுஷ்கா, அடுத்து விக்ரமுடன் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார். முந்தைய படங்களை விட இப்படத்தில் கூடுதலான கிளாமரை வெளிப்படுத்தும் அனுஷ்கா, ஒரு பாடல் காட்சி முழுக்க நீச்சல் உடையில் தோன்றுகிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!                                 — எலீசா.

வில்லனாக மறுக்கும் மாதவன்!

தமிழில் மார்க்கெட் இல்லாத மாதவனையும், ப்ருத்விராஜ் பாணியில் சிலர் வில்லனாக நடிக்கக் கேட்டனர். அதற்கு, 'வில்லனாக நடிக்க எனக்கும் ஆசை உண்டு; ஆனால், என்னை வில்லனாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதற்கு வீண் முயற்சி?' என்று நாசுக்காக பேசி, வந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்து விட்டார்.                            —  சி.பொ.,

மீண்டும் தமிழில் இங்கிலாந்து நடிகை!

'மதராசப்பட்டினம்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து நடிகையான இவரை, அதன் பிறகு கோடம்பாக்க இயக்குனர்கள் யாருமே கண்டு கொள்ளாத

போதும், அடுத்த ஆண்டு, தான் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க எமியை இப்போதே, 'புக்' பண்ணி வைத்துள்ளார் கவுதம் மேனன். தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள எமி ஜாக்சனுக்கு, இங்குள்ள முன்னணி நடிகைகள் அளவுக்கு வெயிட்டான சம்பளமும் பேசியுள்ளார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!           — எலீசா.

நம்பர்-ஒன் ஹன்சிகா!

தமிழ் நடிகைகளான அசின், த்ரிஷா, ப்ரியாமணி ஆகியோர் இந்தி சினிமாவில் கோலோச்ச மும்முனை போட்டியில் குதித்துள்ளனர். ஆனால், இந்தி நடிகையான ஹன்சிகா மோத்வானிக்கு, இந்தி சினிமா மீது மோகம் இல்லை. தமிழில் நம்பர்-ஒன் நடிகையாவதே நோக்கமென்று, தேடிவரும் இந்தி பட வாய்ப்புகளை கூட திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாம் அதிசயம்தான்; ஆக்குறது பூஜ்யம்தான்!                      — எலீசா.

புதுமுக டைரக்டர்களை தவிர்க்கும் ஆர்யா!

ஆர்யா நடித்த, 'பாஸ் என்ற பாஸ்கரன்' கமர்ஷியல் ஹிட் என்பதால், அவரிடம், கால்ஷீட் கேட்டு பல புதுமுக டைரக்டர்கள் படையெடுத்தனர். ஆனால், புதியவர்களிடம் கதை கூட கேட்காத ஆர்யா, லிங்குசாமி, மிஷ்கின் போன்ற பிரபல இயக்குனர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.                 — சி.பொ.,

 

வெளிநாட்டு மோகம்!

சிம்பு, தன், வானம் படத்தின் ஆடியோ விழாவை, லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதைப் பார்த்து, விஜய், விக்ரம் உள்ளிட்ட ஹீரோக்களும் தங்கள் படங்களின் ஆடியோ விழாக்களையும் வெளிநாடுகளில் நடத்த யோசித்து வருகின்றனர்.  — சினிமா பொன்னையா.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us