
கமலுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்!
கடந்த, 1987ல் கமலை வைத்து மணிரத்னம் இயக்கிய படம், நாயகன். சூப்பர் ஹிட்டான அப்படத்திற்கு பின், அவர்கள் இணையவில்லை. இந்நிலையில், ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, மகேஷ்பாபு - ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் மணிரத்னம், அதைத் தொடர்ந்து, கமலை வைத்து, ஒரு மெகா படத்தை இயக்க இருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகும் அப்படம், நாயகனை மிஞ்சும் ஆக் ஷன் கதையில் தயாராகிறது. தற்போது நடித்து வரும், தூங்காவனம் பட வேலைகள் முடிந்ததும், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதை, அதிகாரபூர்வமாக வெளியிட, முடிவு செய்துள்ளார் கமல்.
— சினிமா பொன்னையா
மாறிய அஞ்சலி!
செகண்ட் என்ட்ரியில் படங்களை கைப்பற்றுவதில் தீவிரமடைந்திருக்கும் அஞ்சலி, தன் உடம்பை பராமரிப்பதை மறந்து விட்டதால். ஏற்கனவே பெருத்திருந்த அவர், இன்னும் ஊதி, உருண்டு, திரண்டு காணப்படுகிறார். இந்நிலையில், அவரை, இறைவி படத்துக்கு ஒப்பந்தம் செய்த ஜிகர்தண்டா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'எடை குறைத்தால் தான், என் படத்தில் நீங்கள் நாயகி; இல்லையேல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்து விடுவேன்...' என்று கூறி, இரண்டு மாதம் டயம் கொடுத்தார். விளைவு, ஜிம்மே கதியென்று கிடந்த அஞ்சலி, தற்போது ஸ்லிம் ஆகிவிட்டார்.
— எலீசா
சென்டிமென்ட் நாயகி ஹன்சிகா!
அரண்மனை படத்தின் 2ம் பாகமாக, ஹலோ நான்பேய் பேசுறேன் என்ற படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி இப்படத்தில் சித்தார்த் - த்ரிஷா ஜோடி சேர்கின்றனர். ஆனால், இந்த ஜோடி தனக்கு எந்த அளவுக்கு, 'ஒர்க் அவுட்' ஆவார்கள் என்று குழம்பிய அவர், தற்போது, ஹன்சிகாவை ஒரு முக்கியமான வேடத்திற்கு இழுத்துள்ளார். ஏற்கனவே, தன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்த, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை மற்றும் ஆம்பள போன்ற படங்கள் ஹிட்டடித்ததால், இப்படத்திலும் ஹன்சிகா இருந்தால், உறுதியாக படம் வெற்றியடையும் என்று நம்புகிறார். அதேபோல், ஹன்சிகாவும், சுந்தர்.சியை தன் சென்டிமென்ட் இயக்குனராக கருதுவதால், அவர் கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்து விட்டார்.
— சி.பொ.,
மன்சூரலிகானுக்கு எதிராக, 'பெப்சி' போர்க்கொடி!
'பெப்சி' அமைப்புக்கு எதிரான ஒரு அமைப்பை துவங்கியுள்ள மன்சூரலிகான், 'பெப்சி' தொழிலாளர்கள் இல்லாமல், வேறு நபர்களை வைத்து, தான் நடிக்கும், அதிரடி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், தற்போது, அவர் நடிக்கும், நானும் ரவுடி தான் என்ற படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கச் சென்ற போது, அப்படத்தில் பணியாற்றிய, 'பெப்சி' தொழிலாளர்கள், மன்சூரலிகான் அப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'அவர் இப்படத்தில் நடித்தால், நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்...' என்று போர்க்கொடி பிடித்துள்ளனர். இதனால், மன்சூரலிகானை அப்படத்தில் நடிக்க வைப்பதா, வேண்டாமா என, அப்படக்குழு ஆலோசித்து வருகிறது.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
* இந்தி குறும் படம் ஒன்றில் ஆப்தே நடிகை, சில வினாடிகள் மட்டுமே நியூடாக நடித்தால், விருது கிடைக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொன்னார்கள். அதை நம்பி நடிகையும் நடித்தார். ஆனால், விருது கிடைக்கவில்லை. மாறாக, அவர் நியூடாக நடித்த சீன், இப்போது, 'வாட்ஸ் அப்'களில் வெளியாகி நடிகையின் இமேஜை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால், 'விருதுக்கு ஆசைப்பட்டு, இமேஜை டேமேஜ் செய்து விட்டேனே...' என்று புலம்புகிறார்.
* மேல் தட்டு கதாநாயர்களுக்கு தாரா நடிகை புளித்து விட்டார் என்றபோதும், இளவட்ட நடிகர்கள் அவரை தங்களது கனவுக்கன்னியாகவே கருதுகின்றனர். அதிலும் சிலர், அவரது அழகை புகழ்ந்து கவிதை எழுதி, அதை அவரிடம் படித்துக் காட்டுகினறனர். இப்படி தன்னை அளவுக்கதிகமாக வர்ணிக்கும் இளவட்டங்களை, இப்போது, தன் வீக் எண்ட் பார்ட்டியின் உறுப்பினர்களாக்கி வருகிறார் தாரா.
சினி துளிகள்!
* சினிமாவில் ஆணாதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் தோனி மற்றும் வெற்றிச் செல்வன் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே.
* தெலுங்கில் சிரஞ்சீவியின், 150வது படத்தில் நடிப்பதற்கு, மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு, 'ஷாக்' கொடுத்துள்ளார் நயன்தாரா.
* மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கும், ரஜினி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அவ்ளோதான்!

