தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : நவ 14, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்பு பின்பற்றும்  ஆங்கில பாணி!

கவுதம் மேனனின், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிறகு, தன் ஒவ்வொரு படங்களும் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சிம்பு. அதற்காக, தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், சில ஆங்கில படங்களை மேற்கோள் காட்டி, அந்த பாணியில் படமாக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

அபிநயா பயிற்சி!

நாடோடிகள் படத்தில் நடித்த, வாய் பேசாத பெண்ணான அபிநயா, அந்தப் படத்தில் நடித்தபோதே, சசிகுமார் இயக்கவிருந்த ஈசன் படத்தின் அக்ரிமென்டில் இருந்தார். ஆனால், இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், புதிய படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார். மேலும், வாய் பேச முடியாது என்ற போதும், வார்த்தைக்கு தகுந்த உதடு அசைவுகள் கொடுக்கவும் பயிற்சி எடுத்து வருகிறார்.     — எலீசா.

அசின் நம்பிக்கை!

'லண்டன் ட்ரீம்ஸ்' இந்திப் படம் தோல்வியடைந்து, அசினின் வெற்றிக் கனவை கலைத்த போதிலும், அதே சல்மான் கானுடன் தற்போது நடித்து வரும், ரெடி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்தப் படம் கட்டாயம் வெற்றி பெறும் என்று அடித்து கூறும் அசின், அதன் பிறகே புதிய இந்திப் படங்களில் கமிட்டாகும் முடிவில் உள்ளார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.     — எலீசா.

த்ரிஷாவுக்கு செக்யூரிட்டி!

ஆக்ஷன் பட ஹீரோக்கள் மாதிரி, காரில் பறப்பதென்றால் த்ரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்ந்திருக்கும் நாட்களில், சென்னை ஈ.சி.ஆரில்,  தோழிகளுடன் தானே கார் ஓட்டி, ஜாலியாக பொழுதை கழிக்கிறார். என்றாலும்,  மகள் கண்மூடித்தனமாக டிரைவ் செய்து, விபரீதம் விளைவித்து விடக் கூடாது என்பதற்காக, அவரை கண்காணிக்க சில செக்யூரிட்டிகளை இன்னொரு காரில் அனுப்புகிறார் அவரது தாய்குலம். ஆலே பாலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது!                                       — எலீசா.

ஜெனிலியாவுக்கு அலர்ஜி!

நடிகை தமன்னாவுக்கு நடனம் ஆடுவதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி; ஆனால், நடிகை ஜெனிலியாவுக்கோ நடனம் என்றாலே அலர்ஜி. அதனால், தன்னைத் தேடி வரும் படங்களில் கூடுதலான நடன அசைவுகள் உள்ளவற்றை வெளிப்படையாக தவிர்க்காமல், அதே தேதியில் வேறு படம் உள்ளதாகச் சொல்லி தவிர்த்து விடுகிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குத் தகுந்த வீக்கம்!                                    — எலீசா.

தமிழில் நாட்டமில்லாத  ஓவியா!

நடிகை ஓவியா, தற்போது, தமிழில் நடித்து வரும் மூன்று படங்களிலுமே, பல நாயகிகளில் ஒருவராகத்தான் நடித்து வருகிறார். அதனால், தமிழ் சினிமா மீது நாட்டமில்லாத ஓவியா, கன்னடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கவும் கல்லெறிந்து வருகிறார். இட்டாருக்கு இட்ட பலன்! — எலீசா.

ஹரியின் புதிய பாணி!

'சிங்கம்' படத்தை இயக்கிய ஹரி, அடுத்தப் படத்தில் தனுஷ் - தமன்னாவை ஜோடி சேர்க்கிறார். தன் பெரும்பாலான படங்களில், அருவா சண்டைக் காட்சிகளை புகுத்தி, அருவா இயக்குனர் என்று பெயர் பெற்ற ஹரி, இப்படத்தை முற்றிலும் புதிய பாணியில் இயக்குகிறார். ஆனாலும், இப்படமும் அவரது வழக்கமான கமர்ஷியல் படையல் தான் என்கிறார். — சினிமா பொன்னையா.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us