தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - உன்நினைவுப் பிம்பங்கள்

கவிதைச்சோலை - உன்நினைவுப் பிம்பங்கள்

கவிதைச்சோலை - உன்நினைவுப் பிம்பங்கள்


PUBLISHED ON : நவ 14, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*இரு விழிகள்

பார்த்துப் பார்த்துக்

கட்டிய பளிங்கு

காதல் மாளிகை...

கிரஹப்பிரவேசம்

காணாமலே...

அக்னிப்பிரவேசத்தில்

ஆட்டம் கண்டது!

*சூரியன்

உதிக்கும் முன்பே

கொதிக்கிறது

மனம் முழுக்க

உன் நினைவுகள்...

சுட்டெரிக்கிறது

என் உணர்வுகளை

கொஞ்சம்... கொஞ்சமாய்...

*கோப்பைத்

தேனீருக்குள்- ஓராயிரம்

நுரைக்குமிழிகள்...

ஒவ்வொரு குமிழியிலு<ம்

வெடித்துச் சிதறுகிறது

உன் முகம்!

*பகல் முழுக்க என்னை

தெருநாயாய் துரத்தும்

உன் நினைவுகளோ...

இரவில்-இன்னும்

பூதாகரமாய்

விஸ்வரூபமெடுத்து-என்

தூக்கத்தைத் தின்று

துக்க வாந்தியெடுக்கிறது!

*உலவும் தென்றல்,

பஞ்சணைப் படுக்கை,

பால் நிலா ராத்திரி —

ரசிக்க முடியவில்லை

நிஜத்தில் நீயில்லாததால்...

உறக்கம் மறந்த

விழிகளில் வழியும்

கண்ணீர்த் திவலைகளில்

கடந்த கால காதலின்

உடைந்து போன

நினைவுப் பிம்பங்கள்

பிரதிபலிக்கிறது

கோணல்மாணலாய்!

-மா.வினிதா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us