
வெளிநாட்டில் அஜித் படத்துக்கு மவுசு!
வேதாளம் படத்தை, அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு, தன் பலத்தை காண்பிக்க வேண்டும் என்று களமிறங்கி உள்ளார் அஜித். அதன் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும், வேதாளம் படத்தை வெளியிடுபவர், தன் படத்தை, அமெரிக்காவில் உள்ள, பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அத்துடன், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான, என்னை அறிந்தால் படத்தை விடவும், இப்படம், அதிக தொகைக்கு, விற்பனை ஆகியுள்ளது.
— சினிமா பொன்னையா
பாலிவுட்டை அதிர வைத்த கங்கனா!
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், சமீபத்தில், மீடியாக்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், 'சினிமா நடிகர் நடிகையர் தங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகும் போது, 'நாங்கள் நண்பர்கள் மட்டுமே...' என்று கூறி, அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனரே... இதுபற்றி ஒரு சக நடிகையாய் உங்களது கருத்து என்ன?' என்று கேட்டார். அதற்கு, 'சினிமாவைப் பொறுத்த வரை, நல்ல நண்பர்கள் என்று கூறினால், செக்ஸ் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் என்று அர்த்தம்....' என்று ஒரு அதிரடியான கருத்தை கூறி, பாலிவுட்டையே அதிர வைத்து விட்டார் கங்கனா ரணாவத்.
— எலீசா
காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி தோல்வி!
மாரி மற்றும் பாயும் புலி இரு படங்களுமே தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளார் காஜல் அகர்வால். இதனால், அடுத்து, தமிழில் பெரிய படங்கள் கிடைப்பது அரிது என்று நினைத்து, தற்போது, தெலுங்கில் ராம்சரணுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். இதைத் தொடர்ந்து, தன் அபிமானத்துக்குரிய கதாநாயகர்களின் படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, படக்கூலியையும் கணிசமாக குறைத்துள்ளார். ஆரிய கூத்தாடினாலும் காரியத்திலே கண்!
— எலீசா
கதைக்களமாகும் தஞ்சை பெரிய கோவில்!
ராஜமவுலியின், பாகுபலி படம், 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் காரணமாக, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இன்னும் அதிக பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்நிலையில், பாகுபலிக்கு போட்டியாக, இந்தியில், பாஜிரோ மஸ்தானி என்ற சரித்திர படம், பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அத்துடன், தஞ்சை பெரிய கோவிலை மையமாக வைத்து, பாகுபலிக்கு இணையான பிரமாண்டத்தில் படம் எடுக்கப் போவதாக, கோலிவுட் இயக்குனர்களில் ஒருவரான, எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ஏற்கனவே, தான் நடித்த ஒரு படத்தை, 'ரிலீஸ் செய்கிறேன்...' என, வரிந்து கட்டி இறங்கி, 'பிரஷர்' அதிகமாகி, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனவர், திமிரு நடிகர். ஆனாலும், சமீபத்தில், அவர் நடித்து வெளியான படத்தை, சில ஏரியாக்களில் வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியும் கேட்காமல் வெளியிட்டார். ஆனால், அந்த ஏரியா வினியோகஸ்தர்களுக்கு, படம், பெரிய நஷ்டத்தை கொடுத்து விட்டது. அதனால், 'தங்களுக்கான நஷ்டஈடு தராவிட்டால், மேற்படி நடிகரின் அடுத்த படத்துக்கு, 'ரெட் கார்டு' போட்டு விடுவோம்...' என்று மிரட்டி வருகின்றனர் வினியோகஸ்தர்கள். இதனால், ஆடிப் போயிருக்கிறார் திமிரு நடிகர்.
தாரா நடிகையின், பரம ரசிகரான, பீட்சா நடிகர், மேற்படி நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்த போது, அப்படத்தின் இயக்குனரிடமே தாரா நெருக்கம் காட்டியதால், செம மூடு அவுட்டாகி போனார் பீட்சா. மேலும், தன் புதிய படமொன்றில் நடிக்கவும், தாராவுக்கு, சிபாரிசு செய்திருந்த அவர், தற்போது, தாராவுக்கு பதிலாக, தன் ரகசிய சினேகிதிகளில் ஒருவரான, அட்டகத்தி நடிகைக்கு சிபாரிசு செய்துள்ளார்.
சினி துளிகள்!
* பாயும் புலி படத்தை அடுத்து, மெரினா பாண்டிராஜ் இயக்கும், கதகளி படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
* விஜயசேதுபதி நடிக்கும், காஷ்மோரா படத்தின் தலைப்பு, காதலும் போகும் என்று மாற்றப்பட்டுள்ளது.
* த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.
அவ்ளோதான்!