தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயசேதுபதி நடிப்பில் ஒரே ஆண்டில், ஆறு படங்கள்!

பெரும்பாலும், முன்னணி கதாநாயகர்கள், ஒரே நேரத்தில், ஓரிரு படங்களில் தான் நடிப்பர்; ஆனால், விஜயசேதுபதி, ஒரே நேரத்தில், ஆறு படங்களில் நடித்து வருகிறார். அவ்வகையில், ௨௦௧௬ல், அவரது நடிப்பில், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி, இறைவி மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற படங்கள், வெளியாக உள்ளன. இதுவரை, எந்த முன்னணி நடிகர் நடித்த ஆறு படங்கள், ஒரே ஆண்டில் வெளியானதில்லை.

— சினிமா பொன்னையா



சமந்தாவின் ஓப்பன் டாக்!

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா, 'என்னை விட அழகான பெண்கள், எத்தனையோ பேர் இருக்கின்றனர்; நான் சுமாரான அழகுள்ள பெண் தான்...' என்று ஓப்பனாக பேசுகிறார். அத்துடன், 'இப்போது எனக்கு சினிமா மீது அதிக காதல் வந்து விட்டது; அதனால், எந்த நேரமும் படப்பிடிப்பிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்; சமந்தாவாக இல்லாமல், அந்தந்த கதாபாத்திரங்களாக என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் என் கவனம் அதிகரித்துள்ளது...' என்கிறார். நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயகன் செயல்!

— எலீசா

அசின் இடத்தை பிடிக்கும் மஞ்சிமா!

லட்சுமி மேனனுக்கு பின், கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கவுதம்மேனன் இயக்கி வரும், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் இவர், அடுத்தபடியாக, விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், அடுத்தடுத்து மஞ்சிமாவை ஒப்பந்தம் செய்ய, சில கம்பெனிகளும் பேச்சுவார்த்தையில் உள்ளன. அதனால், மலையாள படங்களில் நடிப்பதை நிறுத்தி, தமிழில் முழு கவனம் செலுத்த கோலிவுட்டில் முகாமிட்டிருக்கும் மஞ்சிமா மோகன், 'தமிழ் சினிமாவில் அசின் விட்டுச் சென்ற இடத்தை பிடிப்பதே என் நோக்கம்...' என்கிறார். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

— எலீசா

ரசிகர்களின் சண்டையை விஜய் - அஜித் நிறுத்துவரா?

விஜய் நடித்த, போக்கிரி படத்தின் கன்னட ரீ - மேக்கில் நடித்தவர் தர்ஷன். இவர், தன் ரசிகர்கள், இணையதளங்களில், மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதுவதைப் பார்த்து, சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில், 'அநாகரிக வார்த்தைகளால் ஒருவருக்கொருவர், 'கமென்ட்' கொடுப்பது நல்லதல்ல; அம்மாதிரி ஆரோக்கியமில்லாத செயல்களில், என் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்...' என்று கேட்டுக் கொண்டுள்ளார்; இதையடுத்து, அவரது ரசிகர்கள் இணையதள சண்டையை நிறுத்தி விட்டனர். அதனால், 'அஜித்தும், விஜய்யும் கூட, தங்களது ரசிகர்களின் இணையதள சண்டையை நிறுத்த வேண்டுகோள் விடுக்க வேண்டும்...' என்று சில சினிமா அபிமானிகள் அவர்களை கேட்டு வருகின்றனர்.

— சி.பொ.,

கறுப்பு பூனை!

'எவ்வளவு பெரிய இயக்குனர் படமாக இருந்தாலும், துளியும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்...' என்று பிடிவாதமாக இருந்த குள்ளமான மேனன் நடிகை, தற்போது, நான் ஈ நடிகருடன் நடிக்கும் படத்தில், மேற்படி நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்திருப்பதோடு, பெருமளவு ஆடை குறைப்பும் செய்து, கவர்ச்சிக்கு ஏற்ப, பல லட்சங்களை கூடுதலாக வாங்கியுள்ளார்.

பையா நடிகைக்கு பெரிய அளவில் படவாய்ப்பு இல்லை என்ற போதும், சமீபத்தில், பீட்சா நடிகருடன் நடிக்க அவரைக் கேட்டபோது, இரண்டு கோடிகளை சொல்லியடித்தார். அதையடுத்து, பலசுற்று பேச்சுவார்த்தைக்கு பின்தான், ஒன்றரை கோடிக்கு இறங்கினார் நடிகை. 'நடிகர் ஆசைப்பட்டதற்காக இவ்வளவு சம்பளம் கொடுத்து, இந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டியதாயிற்றே...' என்று மேற்படி பட தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.

சினி துளிகள்!

* தான் இயக்கி, நடித்து வரும், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டைட்டிலை, பைரவா என்று மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

* தன் தாய்மொழியான இந்தியில் நடித்த படங்கள் வெற்றி பெறாத போதும், மீண்டும் இந்தி படங்களுக்கான பட வேட்டையை துவங்கியுள்ளார் தமன்னா.

* ரஜினி நடிக்கும் எந்திரன் - 2 படத்தின் டைட்டிலை, 2.0 என்று மாற்றியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

* நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கிய திரு, அடுத்து, விக்ரமை வைத்து, கருடா என்ற படத்தை இயக்குகிறார்.

* ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, தமிழில், இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார் நித்யாமேனன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us