தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம், 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. ஸ்ருதிஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழி நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்து, தமிழ்ப்புத்தாண்டு தினமான, ஏப்.,14ல், அப்படத்தை ஆரம்பிக்கிறார்.

— சினிமா பொன்னையா

ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா!

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்த போது, அவருக்கு, நட்பு ரீதியில் அடைக்கலம் கொடுத்தவர் ஆர்யா. அதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு பின், ராஜா ராணி படத்திலும் அவர்கள் இணைந்தனர். ஆனால், தற்போது, மீண்டும் நயன்தாராவை அணுகிய போது, 'கைவசம் பல படங்கள் இருப்பதால், இரண்டு ஆண்டுக்கு என்னால் கால்ஷீட் தர முடியாது...' என்று கை விரித்து விட்டார். இதனால், தன்னை வைத்து, ஜீவா தயாரிக்கும் படத்தில் நடிக்க, வேறு சில அபிமான நடிகைகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார் ஆர்யா. காலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது?

— எலீசா

கவர்ச்சிக்கு மாறிய அகிலா கிஷோர்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித் தான் மற்றும் மூன்றாம் உலகப்போர் ஆகிய படங்களில் நடித்தவர் அகிலா கிஷோர்; இவர் தமிழில் நடிக்கத் துவங்கிய போது, நயன்தாரா சாயலில் இருந்ததால், ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர். ஆனால், நயன்தாராவைப் போன்று இவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால், கமர்ஷியல் இயக்குனர்கள், அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால், சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அகிலா கிஷோர், தற்போது சில, கமர்ஷியல் இயக்குனர்களை அணுகி, 'உங்கள் கதைக்கு என்ன தேவையோ, அந்த கவர்ச்சியை வழங்க தயாராக இருக்கிறேன்...' என்று, காது கடித்து வருகிறார். சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்!

— எலீசா

கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது!

மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும், கபாலி படத்தின் படப்பிடிப்பு, இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள், அப்படத்தின் வெளிநாட்டு ஏரியா வியாபாரம் துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில், கபாலி படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமம், 8.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில், 1.6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இதனால், கபாலி படத்தின் தமிழ்நாட்டு உரிமம், இதுவரை இல்லாத அளவுக்கு விலை போகும் என்று எதிர்பார்க்கின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

பையா நடிகை, 'படங்களில் கவர்ச்சி காட்ட மாட்டேன்...' என்று கூறி வந்த போதும், படப்பிடிப்பு தளங்களுக்கு, ஏக தாராளம் காட்டியபடி ஆடை அணிந்து வருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு நாளும், 'பிட்' துணிகளுடன் நடிகை வருவதை காண, படப்பிடிப்பு தளங்களில் இளைஞர் பட்டாளம் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

'தளபதி தான் செம ஆட்டம் ஆடுகிறார்...' என்று தல ரசிகர்கள், 'டென்ஷன்' காட்டியதை அடுத்து, தல நடிகரும், கடைசியாக வெளியான, தன் இரண்டு படங்களிலும் லோக்கலாக இறங்கி, குத்தாட்டம் ஆடினார். விளைவு, தன் புதிய படத்தில், தலயை ஓவர்டேக் செய்யும் விதத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடி, பின்னி பெடலெடுத்துள்ளார் தளபதி நடிகர்.

சினி துளிகள்!

* பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் கேண்டீனில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்.

* விஜயசேதுபதியுடன் நடித்து வரும், தர்மதுரை படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் தமன்னா.

* தெறி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் வெளிநாடு சென்று, ஓய்வெடுக்க உள்ளார் விஜய்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us